ஜூன் 2014vilakku_right      vis       oie_vilakku_right

யாழ். தொண்டமானாறு காட்டுப்புலத்தைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரெட்ணம் விஸ்வநாதன் அவர்கள் 24-06-2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சபாரெட்ணம், ராஜலட்சுமி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற வேலும்மயிலும், பரஞ்சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி(கட்டி) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீகெளரி(கனடா), ஸ்ரீவாணி(கனடா), ஜெயலக்ஷ்மி(கனடா), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகநாதன்(இந்தியா), ரகுநாதன்(இந்தியா), சிவகணேசநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோபாலகிருஷ்ணன்(லவன்-கனடா), அசோகன்(கனடா), இராஜேந்திரகுமார்(கனடா), வித்திய ஸ்ரீ(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பத்மாவதி(இந்தியா), காலஞ்சென்ற ராதாமணி, ஜெகதீஸ்வரி(கனடா), சுந்தரேஸ்வரன்(கனடா), செல்வராணி(கனி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசந்த், சரண்யா, ஷினேகா, அபிராமி, ரிஷிகேஷன், ஸ்ரீராம், கெளதம், கெளசிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

பார்வைக்கு

திகதி: ஞாயிற்றுக்கிழமை 29/06/2014, 05:00 பி.ப — 09:00 பி.ப

கிரியை

திகதி: திங்கட்கிழமை 30/06/2014, 08:00 மு.ப — 11:00 மு.ப

தகனம்

திகதி: திங்கட்கிழமை 30/06/2014, 11:30 மு.ப

முகவரி: Glendale Funeral Home, 1810, Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada +14166791803 Highway 27 & Albion — at 1810, Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி: +14167470125
பிரபு(மகன்) — கனடா
தொலைபேசி: +14169176309
லவன்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474031730
அசோக்(மருமகன்) — கனடா
தொலைபேசி: +14166718670
ராஜேந்திர குமார்(மருமகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16479736599
தாஸ்(சகோதரர்) — கனடா
தொலைபேசி: +14162927241

cooltext1076840819
தந்தையே உன் வயிற்றில் சுமக்காவிட்டாலும்
காலமெல்லாம் சுமந்தாய் உன் நெஞ்சினில்..
கருவறை மட்டும்தான் உனக்கில்லை
தாயென்று சொல்ல உன்னை..
உன்னை மறந்தாய் உறக்கம் தொலைத்தாய்
உழைத்தாய் களைத்தாய் வேர்வையில்
குளித்தாய் நாங்கள் வாழவே நலமாய்…
வலிகள் எம்மைத்தாக்கினால்
வலிப்பதென்னவோ உனக்கல்லவா..
துயரங்களால் எம் விழி நனைந்தால்
துடைப்பது உன் விரல்களல்லவா..
சோதனையானாலும் வேதனையானாலும்
தோல் கொடுக்கும்தோழன்நீயல்லவா…
உன்னைப்போற்றஓர் நாள்மட்டும் போதுமா…
அனுதினமும் போற்றப்படவேண்டும்
உன் புகழ்பூவுலகம் வாழும் காலம் வரை…!

Fathers’ day யா? Father’s day யா??
தந்தையர் தினமா?, தந்தை தினமா??

வழக்கமான ஆங்கிலத்தில் நிறுத்தற்குறிகள் நெறிமுறைகளால் இது “பாதர்ஸ்’ டே” (fathers’ day) என உச்சரிக்கப்பட்டது. அதாவது “தந்தையர்களுக்கு உரிய தினம்”,

ஆனால் அதிகமாக ஒருமை பொருள் படும்படி கொண்டு “பாதர்’ஸ் டே” (father’s day) என்றே உச்சரிக்கப்பட்டது “தந்தைக்கு உரிய தினம்”.

1913 ஆம் ஆண்டில் ஒரு மசோதா, முதல் முயற்சியாக இந்த விடுமுறையை அமெரிக்க பிரதிநிகளுக்கு நிலைநாட்ட முயற்சிக்கையில் “பாதர்’ஸ் டே” என்ற உச்சரிப்பை பயன்படுத்தியிருந்தது. மேலும் 2008 ஆம் ஆண்டு இந்த தினத்தை உருவாக்கிய படைப்பாளரான அமெரிக்க நிர்வாகிகள் இதன் புகழுரைக்காக பாதர்’ஸ் டே என்ற உச்சரிப்பையே பயன்படுத்தினர்.

அப்போ…
“தந்தையர் தினம்” என்று பன்மையில் சொல்லாமல்,
“தந்தை தினம்” என்பதுதானே சரி..!!!???

பெட்ரோல் நிலைய விபத்தில் ஓட்டுனரை காப்பாற்றியவர்

அமெரிக்காவில் கடந்த வாரம் கார் ஒன்று பெட்ரோல் நிரப்பும் நிலையம் ஒன்றில் வந்து மோதி, எரிந்து வெடித்ததில் அருகே நின்றிருந்த ஒருவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

ஆனால், நியூயோர்க் மாநில பாதுகாவலரான அந்த ஜோண் வெஸ்ஸியோ(John Vescio) அவர்கள், மோதிய காரின் ஓட்டுனர் காரில் இருந்து வெளியே வராததைப் பார்த்துவிட்டு, திரும்ப ஓடி வந்த, தனது உயிரையும் பொருட்படுத்தாது ஓட்டுனரை மீட்டிருக்கிறார்.

தன் உயிரையும் பொருட்படுத்தாது இன்னொருவரை காப்பாற்றிய காவலர் John Vescio

ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்தியதால், தான் உடனே ஓடி வந்து கார் ஓட்டுனரை காப்பாற்றியதாக அவர் கூறினார்.

69 வயது நீரிழிவு நோயாளியான அந்த ஓட்டுனருக்கு, உடலில் சர்க்கரையின் அளவில் ஏற்பட்ட மாற்றத்தால், உருவான மயக்கத்தால், காரை மோதியதாக போலிஸார் கூறுகின்றன.

அந்தச் சம்பவம் குறித்த காணொளி கீழே உள்ள link ல் பார்வையிடலாம்.
http://www.liveleak.com/view?i=5dc_1402570827

 

(நன்றி Ragu Sashi Source from there facebook timeline.)

 

காருக்கு டயர் மாத்த இப்படி ஒரு வழியை (?) எம்மில் எத்தனைபேருக்கு தெரியும் அல்லது செய்வீர்கள். இதையும் ஒருதரம் பார்த்துவையுங்கள், உங்களுக்கு உதவும்…!!

டயர் கைவசம் இல்லையா? கவலையே வேண்டாம்.,

அடடா… இப்படியொரு ஐடியா இருக்கா..?! ஒன்றுக்கும் வழியில்லாத வேளை நமக்கும் உதவும். ஒருதரம் பார்த்துவையுங்கள்…!!!