ஓகஸ்ட் 2014


நன்றி www.facebook.com/sellappa.sivaraja

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா?
அதன் விளக்கம் பின்வருமாறு:-

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் கூறினர். உண்மைதானே?

ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்

பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்

ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்

பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்

ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!

பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் – கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்

படம்: மூன்று முடிச்சு
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன்+வாணிஜெயராம்


yogaluxmi

vilakku_rightதோற்றம் 06.05.1944 மறைவு 11.08.2014oie_vilakku_right

வல்வையைச்சேர்ந்த திருமதி யோகலெட்சுமி (பாரதம்) இராசேந்திரம் அவர்கள் இன்று (11.08.2014) திருச்சியில் காலமானார்.

அன்னார் காரஞ்சென்ற செல்வராசா அன்னமயில் அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற  அப்பாத்துரை – பாக்கியம் அவர்களின் மருமகளும்

காலம்சென்ற இராசேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

இராஜலட்சுமி (இந்துமதி) யின் அன்பு தாயாரும்

காலம்சென்ற யோகரத்தினம்/துரைமணி, காலம்சென்ற யோகச்சந்திரன்/குட்டிமணி, சிவாநடேசன்/கட்டி (நோர்வே), யோகராஜா/குலம் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்

சுந்தரராஜன்  (நியூசிலாந்து) அவர்களின்  மாமியாரும்

ராஜராஜன்(நியூசிலாந்து), கிரிராஜன்(நியூசிலாந்து), மதனராஜன்(நியூசிலாந்து) ஆகியோரின் பேத்தியாரும்

வேதநாயகி/கலா (இலங்கை), ராஜரூபராணி/அம்மன் (லண்டன்), நீலவேணி/லலிதா (நோர்வே), ஜெயவதி/பேபி (சுவிஸ்) ஆகியோரின் மைத்துணியும்

பார்த்திபன்(கனடா), மதுரா(இலங்கை), மதிவண்ணன்(லண்டன்), மதுமதி(லண்டன்), கல்ப்பனா(நோர்வே), சோபனா(நோர்வே), செல்வநடேசன்(நோர்வே), அசோக்(நோர்வே), சோதிசேகரன்(சுவிஸ்), ராஜசேகரன்(சுவிஸ்), ஞானசேகரன்(சுவிஸ்), சங்கீதா(சுவிஸ்), ஜெயசேகரன்(சுவிஸ்) ஆகியோரின் மாமியாரும் ஆவர்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் நாளை (12.08.2014) காலை 10.00 மணியளவில் திருச்சியில் நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வும்.

தகவல் – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

இந்துமதி (மகள்) +64 96 20 5592 (நியூசிலாந்து)