ஒக்ரோபர் 2014


ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் புதிய வரவு வர்த்தக நிறுவனத்திடம் இருந்து இல்லாமல் பாப் பாடகரிடம் இருந்து வந்திருக்கிறது.

Black Eyed Peas குழுவின் தலைமை பாடகரான Will.i.am என்பவர் பாடகர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர். தொழில்நுட்ப ஆர்வம் மற்றும் தொழில்முனவை நாட்டமும் கொண்ட இவர் தனது நிறுவனம் மூலம் Plus எனும் பெயரில் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்திருக்கிறார்.

கையணி சாதனம் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கிறது. GSM 3G, Wi-Fi, Bluetooth, GPS, a pedometer and accelerometer உள்ளிட்ட வசதிகளுடன் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஸ்மார்ட்போன் உதவி இல்லாமலே பேசலாம், செய்தி அனுப்பலாம். அதற்கேற்ப சிம்கார்டு வசதியுடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு அடிப்படையிலானது தான்.

பெடோமீட்டர், ஆக்ஸ்லோமீட்டர் எல்லாம் இருக்கிறது. ட்விட்டர், பேஸ்புக் அணுகும் வசதியும் இருக்கிறது. இதற்கென்ரே குரல் வழி உதவியாளர் வசதியும் இருக்கிறது. இதற்கான பேட்டரிபேக் உள்ளிட்ட துணை சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அறிமுகத்தின் போது விலை அறிவிக்கப்படவில்லை. பாடகரின் ஸ்மார்ட்வாட்ச் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறது என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஸ்மார்ட் வாட்ச் சந்தைக்கு கூடுதல் மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர்.வெங்கடாசலம் சச்சிதானந்தவேல்

loonapix_14138202392258641313
(சசிகலாஸ் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர், வல்வெட்டித்துறை)
அன்னை மடியில் 10-04-1929 இணைவன் மடியில் 03-11-2003
திதி: 23-10-2014
இல்லக விளக்காய் நிறை ஜோதி தந்து
அல்லல்கள் களைந்தே தெள்ளத் தெளிந்து – எங்கள்
எல்லா உலகமும் நீங்களாய் இருந்து
நல்லோனாக வழித்துணை தந்து – எமை
வல்லோணாக்க எம் சுமை சுமந்து
இல்லான் எம்துணை அமைந்து – பேரப்
பிள்ளைகள் அவ்வழி நல்வழி காண்பது
வெண்ணை உள்ளத் துமணி ஐயா நின் செயல் காண்.

உற்றவள் உறுதுணை அறுத்தே!
பெற்றவள் பெருந்துணை பறித்தே!
பற்றுடன் பேரகும் துடித்தே!
பற்றுடன் பேரகும் துடித்தே!
நற்துணை ஐயனைப் பிரித்தே!
வஞ்சகப் பெரும்பிழை செய்தே!
நெஞ்சக் குமுறல் தந்த கோவே!
பன்னிரண்டு ஆண்டுகள் இன்று!
கண்ணிரண்டில் மலர்ந்து நிற்கும் ஐயா முகம் பார்த்து!

என்றும் உங்கள் நினைவோடு வாழும் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு:
கனடா +1 905 794 9068, +1 647 703 0068, நோர்வே +47 227 44 206

அடடா எப்படியெல்லாம் இசையை திருடுகின்றார்கள்…! கீழே உள்ள இரண்டு வீடியோக்களையும் பாருங்கள்,,

juse

விதவிதமான பழங்களை கொண்டு பழரசம் தயார் செய்ய வழி காட்டுகிறது. சமையல் குறிப்பு இணையதளங்கள் போல இது பழரச குறிப்பு இணையதளம். ஆனால் பழரச குறிப்புகளை வெறும் பட்டியலாக அடுக்காமல் கொஞ்சம் சுவார்ஸ்யமாக முன்வைக்கிறது; அதனால் தான் சிம்பிளி ஸ்மார்ட் ஜூசிங் என பெயர்!

இந்த தளத்தில் நுழைந்ததும் முதலில் பழரசம் தயாரிக்க கிளிக் செயத்தும் வரிசையாக பழங்கள் தோன்றுகிறது. அந்த பழங்களை வரிசையில் இருந்து உருவி எடுத்து கிழே உள்ள மிக்சரில் போட்டால் பழரசமாக தயார் செய்து தருகிறது.

நீங்கள் தயாரித்த பழரசத்தில் என்ன எல்லாம் இருக்கிறது என்று புள்ளிவிரங்களை தருவது தான் சிறப்பம்சம். அதாவது பழர்சத்தில் எத்தனை கலோரி இருக்கிறது, சர்க்கரை எவ்வளவு என்றெல்லாம் தகவல் அளிக்கிறது. அப்படியே மற்ற பழரசங்களுக்கான தயாரிப்பு குறிப்புகளையும் பரிந்துரைக்கிறது. அந்த பழரசங்களுக்கான ஊட்டச்சத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இதே போல பழங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் ஊட்டச்சத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளுக்கு ஏற்ற பழங்களையும் தேர்வு செய்து கொள்ளும் வசி இருக்கிறது.

ஆக அடுத்த முறை பழச்சாறு தயாரிக்கும் போது இந்த இணையதளத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

http://simplysmarterjuicing.com/

கூகிளிவ் ஸ்டிரீட்வியூ சேவை மூலம் லிவா பாலைவனச்சோலையில் நீங்கள் உலா வரலாம்.இதற்காக நீங்கள் அரேபியா செல்ல வேண்டாம். இணையத்தில் கூகிள் ஸ்டிரீட்வியுவுக்கு விஜயம் செய்தால் போதுமானது.

ஸ்டீரிட்வியூ கூகிளின் பிரபலமான வரைபட சேவையின் ஒரு அங்கம். ஸ்ட்ரீட்வியூவில் அதன் பெயருக்கு ஏற்ப நகரத்து காட்சிகளை 360 கோணத்தில் காணலாம். இந்த சேவைக்காக கூகிள் சுற்றிச்சுழலும் காமிராவுடன் உலக நகரங்களுக்கு சென்று அங்குள்ள காட்சிகளை படம் பிடித்து ஸ்டீரிவியூவாக வழங்கி வருகிறது. அந்தரங்க மீறல் புகார் காரணமாக இந்த சேவை சர்ச்சைக்குரியதாகவும் இருந்தாலும், இந்த இன்னொரு பகுதி கொண்டாடக்கூடியதாக இருக்கிறது.

உலகில் உள்ள புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களையும் கூகிள் ஸ்டிரீட்வியூ மூலம் படம் பிடித்து காட்டி வருகிறது. இந்த சேவை மூலம் நம்நாட்டி தாஜ்மகாலையும் பார்க்கலாம்.கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலையைம் பார்க்கலாம். துருவப்பகுதியில் உலாவும் பனிக்கரடிகளையும் பார்க்கலாம். கடலுக்கு அடியிலான காட்சிகளையும் பார்க்கலாம்.

இப்போது இந்த வரிசையில் அரேபிய தீபகர்ப பகுதியில் ஐக்கிய அரபு குடியரசில் அமைந்துள்ள லிவா பாலைவனப்பகுதியையும் பார்த்து ரசிக்கும் வசதியை கூகிள் ஸ்டிரீவியூ அளிக்கிறது.

லிவா பாலைவனம் அபுதாபி நகரம் அருகே அமைந்துள்ளது. லிவா பாலைவனம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எந்திரன் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் கண்டுபிடித்த பெருவின் மச்சு பிச்சு மலைப்பகுதிக்கு நிகரானது . மணல் குன்றுகள் நிறைந்த இந்த பகுதி ஐக்கிய அரபு குடியரசில் உள்ள பழமையான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அரேபிய பகுதியின் மிகப்பெரிய பாலைவனச்சோலையாகவும் கருதப்படுவதோடு செழுமையான வரலாற்றையும் கொண்டது. இங்கு வாழ்ந்த இனக்குழுவை சேர்ந்தவர்களே பின்னாளில் தீபகர்பத்தின் மற்ற பகுதிகளில் பரவி குடியேறியதாக கருதப்படுகிறது.

’கண்ணுக்கு எட்டிய வரை மணல் , நடுவே அழகிய குன்றுகள், தூரத்தில் பார்த்தால் தெரியும் பசுமை. அவை காணல் நீராகவும் இருக்கலாம். சோலையாகவும் இருக்கலாம்’; லிவா பாலைவன காட்சியை கூகிள் ஸ்டிரீட்வியூ இப்படி வர்ணிக்கிறது.

பேரிச்சை மரங்களும் நிரம்பியிருப்பதை பார்க்கலாம். சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த பாலைவனச்சோலையை உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் ஸ்டிரீட்வியூவில் கூகிள் படமெடுத்துள்ளது.

ஸ்டிரீட்வியூ காமிரா பொதுவாக காரில் வைத்து இயக்கப்படும். குறுகலான பகுதி என்றால் ரோபோ போன்ற ட்ரெக்கர் காமிரா மூலம் படமெடுக்கப்படும். லிவா பாலைவனத்தை பொருத்தவரை இந்த காமிரா தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாலைவனத்திற்கு ஏற்ப ஒட்டகத்தின் மீது இந்த காமிரா வைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. பாலைபனத்தின் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், அங்குள்ள காட்சியை இயற்கையாக படமெடுக்கவும் ஒட்டகத்தை பயன்படுத்தியுள்ளது. இந்த பயணத்தில் இந்தியர் ஒருவர் வழிகாட்டியாக இருந்துள்ளார்.

இந்த காட்சிகளை 360 கோணத்திலும் பார்த்து ரசிக்கலாம். மணல் குன்றுகள், பேரிச்சை மரங்கள், சோலையின் பசுமை என காட்சிகள் விரிகின்றன.

பாலைவனச்சோலையை பார்க்க:

https://www.google.com/maps/views/streetview/liwa-desert?gl=us

அட ஏன் அப்படி என்று நினைகின்றீர்களா…?

கொலம்பசஸ் ஆசியாவிற்கு, குறிப்பாக இந்தியாவிற்கு புதிய வழியைக் கண்டுபிடிக்க முயன்று, கடைசியில் அவர் அடைந்தது அமெரிக்கா. இதனை அவர் இந்தியா என்றே நம்பினார்.

அக்டோபர் மாதம் இரண்டாவது திங்கள்கிழமை கொலம்பஸ் நாளாக அமெரிக்கா முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொலம்பஸ் யார் என்று நம் பள்ளிக் குழந்தைகளைக் கேட்டால் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் என்று பதில் சொல்வார்கள். அப்படித்தான் நம் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கிறார்கள். கொலம்பஸ் அமெரிக்காவைக் “கண்டுபிடிக்கும்” முன்பே வட, தென் அமெரிக்கக் கண்டங்களில் பல லட்சக் கணக்கான மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள், முதல் முதலாக ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கக் கண்டங்களைக் கண்டுபிடித்துக் கொடுத்த பெருமை மட்டும் தான் கொலம்பஸைச் சேரும் என்று சொல்லிக் கொடுப்பதில்லை.

உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் அல்லர். ஏனென்றால் அங்கே ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் வைக்கிங்கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே ஐரோப்பியர்களின் அமெரிக்கக்குடியேற்றத்திற்கு அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.

அமெரிக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கே ஐரோப்பாவிலிருந்து வந்த குடியேறிகள் இங்குள்ள மனிதர்களைப் பல நாணயமற்ற வழிகளில் போரில் வென்று, பலரைக் கொன்று குவித்து அவர்கள் நிலங்களை எடுத்துக்கொண்டு, அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடங்களில் அவர்களைத் தள்ளி வைத்து, அவர்கள் சுதந்திரத்தைப் பறித்து, அவர்கள் வாழ்க்கையைச் சூறையாடியவர்கள் என்பது தெரியாது. கொலம்பஸைப் பின்பற்றி இங்கு வந்த குடியேறிகள் ஏற்கெனவே இங்கு வாழ்ந்து வந்த மனிதர்களை நடத்திய விதம் பற்றிப் பள்ளிப் பிள்ளைகளுக்கான அமெரிக்கச் சரித்திரப் பாடப் புத்தகங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

columbus_1772950b

கொலம்பஸ் முதன் முதலாக வந்திறங்கியது இப்போதைய ஹெய்த்தி (Haiti டொமினிகன் ரிபப்ளிக் (Dominican Republic) ஆகிய நாடுகள் அடங்கிய ஒரு தீவில்தான். பின்பு பல முறை கொலம்பஸ் இந்தத் தீவிற்கு வந்திருந்தும் அமெரிக்கக் கண்டத்தின் பெரும் நிலப்பரப்பிற்கு (main land) ஒரு போதும் வரவில்லை. அப்படி இருக்க அமெரிக்காவில் கொலம்பஸ் நாளைக் கொண்டாட வேண்டுமா என்று சிலர் குரல் எழுப்புகிறார்கள். அமெரிக்காவில் இருந்த ஆதிவாசிகள் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்து போவதற்குக் காரணமாக இருந்தவனை வீரனாகக் கொண்டாட வேண்டுமா என்று சிலர் எதிர்க்கிறார்கள். இன்னும் சில காரணங்களுக்காக இதை எதிர்ப்பவர்களும் இருக்கிறார்கள்.

1452இல் அப்போதைய போப்பாக இருந்த ஐந்தாவது நிக்கலஸ், போர்ச்சுகல் அரசன் செய்ய ஆரம்பித்திருந்த அடிமை வணிகத்திற்கு (இவன் ஆப்பிரிக்காவின் மேற்குப் பகுதியிலிருந்து ஜனங்களைப் பிடித்து வந்து அடிமைகளாக விற்றான்) ஆதரவு அளிக்கச் சர்ச்சிலிருந்து ஒரு ஆணை பிறப்பித்தார். அதன்படி போர்ச்சுகல் அரசன், கிறிஸ்தவர் அல்லாத எந்த நாட்டிற்கும் சென்று அங்குள்ளவர்களை வென்று, அடிமைப்படுத்தி, அவர்கள் பொருள்களையும் அவர்கள் நாட்டையும் எடுத்துக்கொள்ளலாம்; அவர்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றி ”நாகரீக” மனிதர்களாக மாற்றலாம் என்று ஆணை பிறப்பித்தான்.

கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டு அரசனிடமும் அரசியிடமும் தன் பயணத்திற்குத் தேவையான உதவியைப் பெற்றுக்கொண்டு இந்தியாவைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டு வழியில் அமெரிக்கக் கண்டத்திற்கு அருகிலுள்ள ஒரு தீவில் வந்து இறங்கியபோது போப் நிக்கலஸ் வெளியிட்ட ஆணை அமுலில் இருந்தது. அதைப் பின்பற்றிக் கொலம்பஸும் அந்தத் தீவில் வாழ்ந்து வந்த மனிதர்களைத் தங்கம் இருக்கும் இடத்தைக் காட்டும்படியும், தேடித் தரும்படியும் கட்டளையிட்டுப் பல விதமாகத் துன்புறுத்தினான்.

அவர்களை எந்த அளவுக்குத் துன்புறுத்தினான் என்பதற்கு இரண்டு உதாரணங்கள்:

  1. தங்கள் கத்திகளைப் பதம் பார்ப்பதற்கு ஆதிவாசிகளின் உடம்பை உபயோகிப்பார்களாம்.
  2. ஒரு முறை இரண்டு ஆதிவாசிகள் ஒரு கிளியைக் கொண்டு சென்றுகொண்டிருந்தபோது குடியேறிகள் கிளியை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு அவர்கள் தலைகளைக் கொய்துவிட்டுச் சென்றார்களாம்.

அந்தத் தீவைச் சேர்ந்த மக்கள் அன்பு நிறைந்தவர்களாகவும், பேராசை அற்றவர்களாகவும் தங்களிடம் இருந்த எல்லாவற்றையும் பிறரோடு பகிர்ந்து கொள்ளுபவர்களாகவும் இருந்தார்கள் என்று கொலம்பஸே பின்னால் கூறியிருக்கிறான். அவர்களைப் போன்றவர்களை அதுவரை தான் பார்த்ததில்லை என்றும் அவர்கள் தங்களைப் போல் பிறரை நேசிப்பதாகவும் எப்போதும் சிரித்த முகத்தோடு இருப்பதாகவும் கூறியிருக்கிறான். இப்படிப்பட்ட ஜனங்களை அவன் மனிதர்களைப் போல நடத்தவில்லை. அவன் அங்கு வந்தபோதெல்லாம் அவனால் பலர் உயிர் இழந்தனர். முதலில் எண்பது லட்சமாக இருந்த அவர்களின் எண்ணிக்கை, கொலம்பஸ் அங்கு வந்த எட்டே ஆண்டுகளில் ஒரு லட்சமாகக் குறைந்துவிட்டது.

massacre13

கொலம்பஸைப் பின்பற்றி ஐரோப்பாவிலிருந்து வந்த மற்ற குடியேறிகள், அமெரிக்கக் கண்டத்தின் பெரு நிலப்பரப்புக்கும் வந்தனர். முதலில் அமெரிக்காவின் கிழக்குப் பகுதிக்கு வந்து, பின் படிப்படியாகக் கண்டம் முழுவதும் பரவினர். அமெரிக்க அரசு இவர்கள் நிலத்தை எடுத்துக்கொள்ளப் பல தடவை தானே போட்ட ஒப்பந்தங்களை மீறியிருக்கிறது. அங்கு வாழ்ந்து வந்த பழங்குடி மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டதால் இப்போது அவர்கள் அமெரிக்க அரசு அவர்களுக்கென்று தந்துள்ள ஒதுக்கிடங்களில் (reservations) வாழ்ந்து வருகிறார்கள். முதலில் இருந்தவர்களில் 95 சதவிகிதம் இறந்து போய்விட, இப்போது இருப்பவர்கள் 5 சதவிகிதம் மட்டுமே. இவர்களும் மற்ற அமெரிக்கர்களைப் போல் வசதியாக வாழவில்லை. அமெரிக்காவில் பல நூறாண்டுகள் வாழ்ந்த பழங்குடி மக்களின் முழு அழிவிற்கு மூல காரணமாக இருந்த கொலம்பஸின் நினைவு நாளைக் கொண்டாட வேண்டுமா என்று பழங்குடி இன மக்கள் உள்படப் பலர் குரல் எழுப்பி இருக்கிறார்கள்.

dogf

அட்லாண்டிக் கடலை முதல் முதலாகத் துணிச்சலாகக் கடந்து சாதனை புரிந்தவன் என்றாலும் அமெரிக்கக் கண்டம் முழுவதும் பரவியிருந்த பல இனங்களைச் சேர்ந்த மக்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தான் இந்த கொலம்பஸ்.

இப்ப சொல்லுங்க, இவன் தேடிவந்த இந்தியாவை கண்டுபிடித்திருந்தால் நம்ம கதி என்னவாயிருக்கும்…!!??

அடுத்த பக்கம் »