இன்டர்ரெட் வசதியினை பொறுவதற்கு புதிய தொழில்நுட்பத்தினை சீனா விஞ்ஞானி ஒருவர் கண்டுபடித்துள்ளார். ஒரு பல்ப்பை எரியவிடுவதன் மூலம்  இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தல்லாம். இந்த தொழில்நுட்பத்திற்கு LI-FI என பெயரிட்டுள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எல்லா வகையான சாதனங்களிலும் இன்டர்நெட் வசதியை பெறலாம். ஒரு பல்பை வாங்கி எரிய விட்டால் அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்ட  நின்று விடும் அவ்வளவு எளிதான முறை!

இந்த பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் உண்டாகும் அலைவரிசையில் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. வழக்கமான WI-FI 2.4GHz & 5GHz ரேடியோ அலைவரிசை பயன்படுகின்றது. இதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், LI-FI தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பல்பை வைத்து, அதன்மூலம் கிடைக்கும் ஒளிக்கற்றைமூலம் ஒரு ஒளிவாங்கும் கருவிமூலம் பெற்று அதனை சக்திமாற்றம் செய்யப்பட்டு கிடைக்கும் DATA வை கணணிக்கும், கைத்தொலைபேசிக்கும், ஐ பாட் க்கும், டப்பிலட் க்கும் அனுப்பி இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நாம் இவ்வகை புதிய தொழில்நுட்பத்துடன் உறவாடும் காலம் தூரத்தில் இல்லை!