ஜனவரி 2015


maya

Advertisements

embossed_line_frame

திருமதி விசாகரெத்தினம் (விசாகப்பா) தெய்வநாயகி (தெய்வானைக்கண்டு)
vilakku_right                                        oie_vilakku_right

தோற்றம்: 24.06.1925 மறைவு: 24.01.2015

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், குச்சம் ஒழுங்கை மற்றும் ஊறணி ஆஸ்பத்திரி ஒழுங்கை வதிவிடமாகவும் கொண்ட விசாகரெத்தினம் (விசாகப்பா) தெய்வநாயகி (தெய்வானைக்கண்டு) 24.01.2015 அன்று காலமானார்.

அன்னார், காலம்சென்ற விசாகரெத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜமுனகாந்தா (கனடா), ஶ்ரீகாந்தா (சல்லி – திருகோணமலை), சந்திரகாந்தா (கனடா), ரெட்ணகாந்தா லண்டன், ராயசேகரம் (கனடா) சந்திரசேகரம் (லண்டன்), சக்திவேல் (ஐயப்பா) லண்டன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,

தாமோதரம்பிள்ளை (கனடா), மாணிக்கராசா (சல்லி திருகோணமலை). தனபாலசிங்கம் (கனடா), ஞானச்சந்திரன் (லண்டன்), இந்திராணி (லண்டன்), லீலாவதி (கனடா), லெட்சுமி (கொழும்பு), ஆகியோரின் அன்பு மாமியாரும், ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 6ம் வட்டாரம் சாம்பல்த்தீவில் உள்ள சுபாசன் இல்லத்தில் நடைபெற்று 25.01.2015 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு சாம்பல்த்தீவு மாங்கனாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

✿‿ ✿‿✿✿‿ ✿‿✿✿‿ ✿‿✿✿‿ ✿‿✿

தொடர்புகளுக்கு:

தாமோதரம்பிள்ளை ஜமுனகாந்தா (கனடா) +1 647 346 6024
கைத்தொலைபேசி – (பிரபா) 647 459 7125

தன்பாலசிங்கம் சந்திரகாந்தா கனடா (கனடா) +1 416 282 7983

சந்திரசேகரம் (லண்டன்) +44 742 44 55 275

சக்திவேல் (ஐயப்பா) (லண்டன்) +44 208 771 9423, +44 744 907 2814

ராஜசேகரம் விசாகதுரை (கனடா) +1 905 553 6890
(கைதொலைபேசி) 647 401 9596

ஞானச்சந்திரன் ரெட்ணகாந்தா (லண்டன்) +44 190 86 73 609

thozhil_2250885h1. உங்கள் வங்கிக் கணக்கினைச் சரி செய்கிறோம். உங்கள் அக்கவுண்ட் எண் என்ன? இன்டர்நெட் பேங்கிங் யூசர் நேம் என்ன? இவற்றைச் சோதித்துக் கொள்ளுங்கள். இதற்கு இந்த லிங்க்கில் கிளிக் செய்து கொள்ளுங்கள் என்று ஐ.சி.ஐ.சி.ஐ./ஸ்டேட் பேங்க் போன்ற வங்கிகளிடமிருந்து வருவது போல் இமெயில் வந்தால், உடனே அழித்து விடுங்கள். குப்பைத் தொட்டியிலும் வைக்காதீர்கள். ஏனென்றால், பெரிய வங்கிகள் இது போல் மெயில்களை அனுப்புவதில்லை. அவற்றின் பெயரில் மெயில் அனுப்பி, லிங்க் கொடுத்துப் பின், நாம் கிளிக் செய்கையில் ஏதேனும் ஒரு வைரஸ் புரோகிராமினை இறக்கும் நாசகாரர்களின் முயற்சி இது. எனவே அவசரப்பட்டு இந்த மெயில்களில் உள்ள லிங்க்குகளில் கிளிக் செய்யாதீர்கள்.

2.
நான் நைஜீரியா நாட்டின் பெரிய பணக்காரர் மனைவி. என் கணவர் பல்லாயிரக்கணக்கான கோடி அமெரிக்க டாலர் பேங்கில் வைத்துவிட்டு இறந்து விட்டார். இதனை எடுக்க யாராவது ஒருவரின் ஒத்துழைப்பு தேவை. நீங்கள் சம்மதித்தால், உங்கள் பேங்க் அக்கவுண்ட்டுக்கு பணத்தை மாற்றி, பின் எனக்குத் தாருங்கள். கமிஷனாக 10% தருகிறேன் என்று இமெயில், போன் எண் எல்லாம் கொடுத்திருப்பார்கள். பதில் கடிதம் அனுப்பினாலோ, போன் செய்தாலோ, உங்கள் போன் எண்ணை முதலில் வாங்குவார்கள். இரக்கம் வரும் வகையில் பேசி, வங்கிக் கணக்கும் வாங்குவார்கள். பின் நாம் தான் மற்றவர்களிடம் பிச்சை எடுக்க வேண்டி வரும். நம் வங்கிப் பணத்தை எல்லாம் மாற்றிக் கொண்டு
போய்விடுவார்கள்.

3.இணைய தளங்களில் ஏதேனும் படிவத்தில் சிறு சிறு கட்டங்களில் அடிக்கடி தகவல்களை நிரப்ப வேண்டியதிருக்கும். இந்த பாக்ஸுகளுக்குள் பயணம் செய்திட மவுஸை எடுத்து கர்சரைக் கொண்டு செல்லும் வேலையெல்லாம் வேண்டாம். ஜஸ்ட் டேப் கீயைத் தட்டவும். பின் நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் ஷிப்ட் கீயுடன் டேப் கீயைத் தட்டவும்.

4.ஓர் இணைய தளத்தில் காணப்படும் எழுத்துவகைகளின் அளவு சிறியதாக உள்ளதா? இதனைப் பெரிதாக்க கண்ட்ரோல் மற்றும் ப்ளஸ் கீகளை அழுத்தலாம். சிறியதாக்க மைனஸ் கீயை இணைக்கலாம். மேக் வகைக் கம்ப்யூட்டரில் இதுவே கமாண்ட் கீயுடன் இணைந்து அழுத்தப்பட வேண்டும். இணைய தளத்தின் முழு அளவினையும் பெரிதாக்க கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை நகர்த்தவும். முன் புறம் அழுத்த பெரிதாகவும் பின்புறம் அழுத்த சிறிதாகவும் மாறும். மேக் கம்ப்யூட்டரில் இது முழு திரையையும் பெரிதாக்கும்.

5.உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து விண்டோக் களையும் இரு கீகளை ஒரு சேர இணைத்து அழுத்தி மறைய வைக்கலாம்; மீண்டும் அதனைப் பெறவும் செய்திடலாம். அந்த கீகள் : விண்டோஸ் கீ + எம் கீ; மற்றும் விண்டோஸ் கீ+ டி (D) கீ.

6.உங்கள் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் உள்ளது. இலவசமாக இங்கு கிளிக் செய்தால் அதனைக் கண்டுபிடித்து வெளியேற்றலாம் என்ற செய்தியுடன் ஏதாவது லிங்க் வருகிறதா? உடனே அதனை நீக்கி விடுங்கள். கிளிக் செய்தால் நிரந்தரத் தொல்லை தான்.

7. பொதுவான வாழ்த்துக்கள்
குவியும் நாட்களில் கவனமாக இருங்கள். உங்கள் நண்பர்களின் பெயரிலேயே வைரஸ் இணைந்த வாழ்த்துகள் வரும் வாய்ப்பு அதிகம். அன்பான வாசகத்துடன், அழகான ஒரு காட்சிக்கான லிங்க் தரப்பட்டு, அதில் கிளிக் செய்தால், உங்களுக்கென உள்ள படம் இருப்பதாகக் குறிப்பு கிடைக்கும். நம்ம ப்ரண்ட் தானே என்று அலட்சியாமாக, படத்திற்கான லிங்க்கில் கிளிக் செய்து மாட்டிக் கொள்ளாதீர்கள்.

Tue Jan, 6 2015  கனடிய நேரம் 5:45 PM ESTமுதல்….

நிகழ்வினை பார்வையிட கீழே உள்ள தொலைக்காட்சி பெட்டியினை கிளிக்பண்ணவும்

18

.

(எம் வீட்டில் உள்ள சிறார்களுக்கு இந்த உண்மைச் சம்பவத்தை எடுத்துரைத்து, மனத்தைரியத்தையும், சூழ்நிலைக்கு ஒப்ப தம்மை தயார் செய்யும் நிலையையும், நம் சிறார்களுக்கும் போதிக்க வேண்டும் என்னும் நோக்குடன் இக் கட்டுரை எழுதப்படுகின்றது)

கடந்தவாரம் அமெரிக்காவில் கென்டக்கி மாகானத்தில் EDDYVILLE என்னும் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு குடும்பத்தார் பறந்த Piper PA-34 ரக தனியார் விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தாய், தந்தை, சகோதரி, ஒன்றுவிட்ட சகோதரி ஆகிய அனைவரும் உயிரிழக்க –

குப்பற விழுந்த விமானத்தின் இடிபாடுகளுக்குளிருந்து  விலா எலும்பு உடைந்தநிலையில், தன்னை இழுத்து எடுத்து –

முகத்திலும், முளங்கையிலும் இரத்தம் சொட்டச் சொட்ட, இருட்டில், உறை குளிரில் சுமார் 20 நிமிடங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிகளினூடாக ஒருகாலில் ஒரு சாக்ஸ் மட்டும் அணிந்தநிலையில் அலைந்து திரிந்து –

தூரத்தில் கண்ணுக்கு தெரிந்த ஒரு வீட்டின் வெளி விளக்கொளியை நோக்கி நடந்து, அந்தவீட்டின் கதவை தட்டி உதவி கேட்டுள்ளார்!

12

Sailor Guztler என்பது அந்த மன உறுதிமிக்க 7வயது சிறுமியின் பெயர்.

13தட்டிய வீட்டிலிருந்து கதவைத்திறந்த 71வயது மிக்க Larry Wilkins என்னும் முதியவருக்கு பேரதிரதிர்ச்சி!

தன் வீட்டின் முன் ஒரு சிறுமி அதிர்ச்சி மிக்க முகத்துடன், இரத்தக்காயங்களுடன் “என் அப்பாவும், அம்மாவும் இறந்துவிட்டனர், நாங்கள் பயணம் செய்த விமானம் தலைகுப்பற விழுந்துகிடக்கின்றது…” என்று சொல்லவும், Larry Wilkins உடனடியாக பொலிஸுக்கு தகவல் சொல்ல, பொலிஸ் வந்து சிறுமியை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று சிகிச்சை அளித்து, உடைந்து நொருங்கிய விமானத்தில் இருந்த அச் சிறுமியின் தந்தை Marty Gutzler (48), தாய்Kimberly Gutzler, (46), சகோதரி Piper Gutzler, (9), ஒன்றுவிட்ட சகோதரி Sierra Wilder, (14) ஆகியோரது உடல்களையும் மீட்டுள்ளனர்.Larry Wilkins

“மோசமாக இரத்தம் ஓடிய நிலையில், கால்களில் இருந்து இரத்தம் வழிய ,மூக்கால் இரத்தம் வழிந்து முகமெல்லாம் இரத்த கறையுடன் ஒரு காலில் மட்டும் காலுறை காணப்பட வெறும்காலுடன் காணப்பட்டாள்”

என அவள் உதவி கேட்டு தட்டிய வீட்டின் சொந்தகாரர் கண்கள் கலங்க செய்தியாளர்களிடம் கூறினார்.

1516

14202097981061949465

மலர்வு 22.12.1947                                 உதிர்வு 01.01.2015

                vilakku_right                                                                                oie_vilakku_right

மலரோகிணி அம்மா அருமைச்சந்திரலிங்கம் (அம்மன்) அவர்கள் காலமானார்.

வல்வெட்டித்துரையை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி அருமைச்ச்ந்திரலிங்கம் மலர்ரோவணி அம்மா அவர்கள் 01.01.2015 அன்று Brampton, Canadaவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார்,
காலம்சென்ற அருமைச்சந்திரலிங்கம் (அருமை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலம்சென்ற கதிரவேற்பிள்ளை (ஆறுமுகசாமி) சீதாலஷ்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம்சென்ற சேவரெத்தினா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்

அமுதராஜன் (லண்டன்), கபில்ராஜ் (நோர்வே), கலாஜினி (கனடா), ரகுராம் (கனடா), கீதா (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும்

அசோக்குமார், வாசன், பிரதீபா, மைதிலி, சசிகலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலம்சென்ற சுபாஸ்சந்திரபோஸ், காந்திமதி, சரச்சந்திரபோஸ் (கட்டி), அரிச்சந்திரபோஸ் (அரிச்சம்), பத்மாவதி, காலம்சென்ற ஜெயச்சந்திரபோஸ், செல்வச்சந்திரபோஸ், இந்துமதி, ஞானச்சந்திரபோஸ், யோகச்சந்திரபோஸ், பானுமதி, அவர்களின் அன்புச் சகோதரியும்

காலம்சென்ற இராசலிங்கம், காலம்சென்ற அப்புலிங்கம், ஜெயராமச்சந்திரலிங்கம் (அக்குட்டி), ஜெயலிங்கம், சந்திரவதனா, ஆகியியோரின் மைத்துனியும்,

கெளதம், கெளசிகா, அஜிதன், ஆதர்சன், அபிலாஸ், அக்‌ஷயன், மாதினி, நிலானியா, அபிஷன், சுதர்சன், கார்த்திக், அபிராமி, அஜிதா, சங்கமி, கிரிஷன் ஆகியோரின் போத்தியுமாவார்

உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

✿‿ ✿‿✿ பார்வைக்கு ✿‿ ✿‿✿
செவ்வாய்க்கிழமை 06.01.2015 – 6.00PM to 9.00 PM

✿‿ ✿‿✿ கிரிகை ✿‿ ✿‿✿
புதன்கிழமை 07.01.2015 – 9.00AM to 11AM

✿‿ ✿‿✿ தகனம் ✿‿ ✿‿✿
புதன்கிழமை 07.01.2015 – 11.00AM to 11.30AM

✿‿ ✿‿✿ முகவரி ✿‿ ✿‿✿
Glendale Funeral Home & Cemetery,
1810 Albion Road,
Etobicoke, On

*´¨)
¸.•´¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•` ¤ தொடர்புகளுக்கு
:
ரகுராம் – கனடா – 1 416 992 7801
கலா – கனடா – 1 905 794 4761
கீதா – கனடா – 1 647 521 0137
ராஜன் – லண்டன் 44 786 870 3259
கபில்ராஜ் – நோர்வே 47 2 139 0472

Happy New Year hd wallpaper 20151

Gregorian calendar என்பது இன்று உலகில் பரவலாக பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியாகும். இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும்.

இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாக பின்னாளில் இந்நாட்காட்டிக்கு “கிரகோரியன் நாட்காட்டி” என்னும் பெயர் வழங்கலாயிற்று.

இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாக கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி “ஆண்டவரின் ஆண்டு” எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும்.