(எம் வீட்டில் உள்ள சிறார்களுக்கு இந்த உண்மைச் சம்பவத்தை எடுத்துரைத்து, மனத்தைரியத்தையும், சூழ்நிலைக்கு ஒப்ப தம்மை தயார் செய்யும் நிலையையும், நம் சிறார்களுக்கும் போதிக்க வேண்டும் என்னும் நோக்குடன் இக் கட்டுரை எழுதப்படுகின்றது)

கடந்தவாரம் அமெரிக்காவில் கென்டக்கி மாகானத்தில் EDDYVILLE என்னும் கிராமத்திற்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு குடும்பத்தார் பறந்த Piper PA-34 ரக தனியார் விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தாய், தந்தை, சகோதரி, ஒன்றுவிட்ட சகோதரி ஆகிய அனைவரும் உயிரிழக்க –

குப்பற விழுந்த விமானத்தின் இடிபாடுகளுக்குளிருந்து  விலா எலும்பு உடைந்தநிலையில், தன்னை இழுத்து எடுத்து –

முகத்திலும், முளங்கையிலும் இரத்தம் சொட்டச் சொட்ட, இருட்டில், உறை குளிரில் சுமார் 20 நிமிடங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிகளினூடாக ஒருகாலில் ஒரு சாக்ஸ் மட்டும் அணிந்தநிலையில் அலைந்து திரிந்து –

தூரத்தில் கண்ணுக்கு தெரிந்த ஒரு வீட்டின் வெளி விளக்கொளியை நோக்கி நடந்து, அந்தவீட்டின் கதவை தட்டி உதவி கேட்டுள்ளார்!

12

Sailor Guztler என்பது அந்த மன உறுதிமிக்க 7வயது சிறுமியின் பெயர்.

13தட்டிய வீட்டிலிருந்து கதவைத்திறந்த 71வயது மிக்க Larry Wilkins என்னும் முதியவருக்கு பேரதிரதிர்ச்சி!

தன் வீட்டின் முன் ஒரு சிறுமி அதிர்ச்சி மிக்க முகத்துடன், இரத்தக்காயங்களுடன் “என் அப்பாவும், அம்மாவும் இறந்துவிட்டனர், நாங்கள் பயணம் செய்த விமானம் தலைகுப்பற விழுந்துகிடக்கின்றது…” என்று சொல்லவும், Larry Wilkins உடனடியாக பொலிஸுக்கு தகவல் சொல்ல, பொலிஸ் வந்து சிறுமியை வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்று சிகிச்சை அளித்து, உடைந்து நொருங்கிய விமானத்தில் இருந்த அச் சிறுமியின் தந்தை Marty Gutzler (48), தாய்Kimberly Gutzler, (46), சகோதரி Piper Gutzler, (9), ஒன்றுவிட்ட சகோதரி Sierra Wilder, (14) ஆகியோரது உடல்களையும் மீட்டுள்ளனர்.Larry Wilkins

“மோசமாக இரத்தம் ஓடிய நிலையில், கால்களில் இருந்து இரத்தம் வழிய ,மூக்கால் இரத்தம் வழிந்து முகமெல்லாம் இரத்த கறையுடன் ஒரு காலில் மட்டும் காலுறை காணப்பட வெறும்காலுடன் காணப்பட்டாள்”

என அவள் உதவி கேட்டு தட்டிய வீட்டின் சொந்தகாரர் கண்கள் கலங்க செய்தியாளர்களிடம் கூறினார்.

1516

Advertisements