குழந்தைகள் ( இப்பொழுது கைக்குழந்தை கூட டீவி
பார்ப்பது சகஜம்) அதிக நேரம் தொலைக்காட்சி
பெட்டி முன் அமர்தலால் 7 வயதிற்குள்ளாகவே அவர்களுக்கு
கவனம் குறைகிறது. இளம் வயதில் மனித மூளை அதி
வேகமாக வேலை செய்கிறது. தொலைக்காட்சி பெட்டியில்
காட்சிகள் வேகமாக மாறுவதைப் பார்த்து பார்த்து
இதுதான் சரியாக நிலை என மூளைக்கு செய்தி கிடைக்கிறது.

pc-med

நிஜ வாழ்விலும் அத்தகைய வேகமான மாற்றத்தை எதிர்
பார்க்கின்றனர் பிள்ளைகள்.அந்த அளவுக்கு வேகமான
மாற்றமில்லாத பொழுது அவர்களுக்கு அது பிடிக்காமல்
போகிறது. இந்த மாதிரி Over Stimulation மோசமான
பழக்க வழக்கங்களைத் தந்து விடும்.

கண்டதே காட்சியாக அதையே நம்பும் குழந்தை
நிஜவாழ்வில் இவை சாத்தியமில்லை என்பதை
ஏற்காது! நிஜவாழ்வில் இத்தகைய வேகம் இல்லாத
பொழுது, தான் பார்த்தைவிட குறைவான வேகமுடைய
உலக நடவடிக்கைகள் பிடிக்காமல் போகும். சூழ்நிலைக்கு
ஏற்ப தன்னை உட்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு Shopping Mallக்கு குழந்தைகளுடன் போனால், நின்று- நிதானமாக ஒரு பொருளை வாங்க விடமாட்டார்கள். சீக்கிரம் அம்மா…., போரடிக்குது… என்று ஆரம்பித்து விடுவார்கள். அவர்களுக்கு தொலைக்காட்சியில் வருவதுபோல் அனைத்தும் வேகமாக நடக்கவேண்டும்.

ஒரு வீட்டுக்கு விஜயம் செய்தாலும் அங்கு நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். அம்மா Lets go… என்று தொந்தரவு செய்ய ஆரம்பிப்பார்கள்.

சீக்கிரமாக போரடித்து போதல், குறிப்புக்களை மறத்தல்,
சீக்கிரமாக ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு
தாவுதல் எல்லாம் சகஜம் இவர்களுக்கு.

ஒரே செயலை கவனித்து நிதானமாக சரியாக் செய்ய
முடியாது.

ஒரு விளையாட்டோ, செயலோ செய்து கொண்டிருக்கும் பொழுது
சில நிமிடங்களிலேயே போரடித்து விடும்.

முறைப்படுத்தி, டைம் டேபிள் போட்டு ஒரு வேலையைச்
செய்ய முடியாது. டைம் டேபிள் போடுவார்கள் ஆனால்
அதை செய்ய மாட்டார்கள்.

ஹோம்வொர்க் முடிக்க சிரமம், வேலையைச் செய்து
முடிக்கத் தேவையான சாமான்களை அடிக்கடி தொலைத்தல்.

பேசும்பொழுது கவனம் எங்கோ இருக்கும். சொல்வதை
காது கொடுத்து கேட்கிறானா – இல்லையா என்று சந்தேகம்
பெற்றோருக்கு வரும்.எனவே பெற்றோரே, தொலைக்காட்சி நேரத்தை குறைத்து நிஜ வாழ்வில் உங்கள் குழந்தைகளை உலாவிடுங்கள். நீங்கள் செல்லும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். வீட்டில் அவர்களுடன் சேர்ந்து விளையாடுங்கள், அப்பா கார் கழுவப்போகின்றார் என்றால் ஒரு சிறு துணிகுடுத்து துடைக்கவிடுங்கள். வீட்டு தோட்ட வேலை செய்யும்போது சிறு சட்டிகொடுத்து தண்ணீர் ஊத்த சொல்லுங்கள், சமைக்கும்போது சிறுசிறு வேலையை கொடுங்கள், வீடு துப்பரவு செய்யவிடுங்கள்….

only-children-get-lots-of-attention

kidsinvolved

Helping

இவற்றை பெற்றோராகிய நீங்கள் இப்போ செய்யதவறினால், அரை குறையான ஒரு பூரணமற்ற அடுத்த சந்ததியை உருவாக்கிய பாவியாகிவிடுவீர்கள்…!

 

Advertisements