ஏன் மனிதர்களுக்கு மட்டும் இன்னொருவரின் assistance தேவைப்படுகிறது? அதுக்கு கொஞ்சம் மற்ற விலங்குகளின் birth mechanism ஐ பார்க்க வேண்டும், முக்கியமாக பரினாம வளர்ச்சியில் நமக்கு நெருங்கிய குரங்கு வகைகள் higher primates.

மனித பெண்ணின் பிரசவம் கொஞ்சம் சிக்கலானது

முதலில் அவ்வளவு பெரிய மூளையுடைய தலை ஒரு சின்ன பாதை வழியில் வெளிவர வேண்டும், எலும்பிலான இடுப்பெலும்பு bony pelvis ஐ வளைத்து நெளிக்க இயலாது, சோ இன்னும் சிக்கல். .

பரினாம வளர்ச்சி ஒரு விசாலமான இடுப்பெலும்பை ஆதரிக்கவில்லை, ஏனென்றால் பெரிய இடுப்பெலும்பை வைத்துக்கொண்டு நேராக நடக்க bipedalism இயலாது. அதனாலே இந்த நடத்தல் Bipedalism < சிறிய இடுப்பெலும்பு narrow pelvis என இயற்கை முடிவு செய்து விட்டது.

இரண்டாவது மற்ற விலங்குகளும் முக்கியமாக பாலூட்டிகள் குட்டிகளை ஈன்றெடுக்கின்ற, முக்கியமாக குரங்குகள் prinates நேராக நடக்காவிட்டாலும் சிறிது குனிந்தே நடக்கின்றன, ஆனால் அவற்றிக்கும் பெரிய இடுப்பெலும்புகள் இல்லை, ஆனால் அவை ஈன்றெடுக்கும் குட்டிகள் சிறிய தலையுடனே பிற்க்கிறன அதனால் நம் பெண்களுக்கு இருப்பது போன்ற சிக்கல்கள் இல்லை.

நமது மூதாதையர்களின் புதை படிமங்களை ஆராய்ந்தாலும் இதுவே, மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த Australopithecines யின் பிறந்த குழந்த்தையின் மூளை எடை 130 – 170 கிராம்கள். அதிகபட்சமாக 230 கிராம் வரை தான் அவற்றின் இடுப்பெலும்புகள் அனுமதிக்கும். (இது காலப்போக்கில் மற்ற ஹோமோ வகைகளில் அதிகத்தது Homo erectus 200 gms) ஆனால் நம்மில் (Homo sapiens) பிறந்த குழந்த்தையின் மூளை எடையானது 400 கிராம்களுக்கு மேல், இந்த உடல் எடையுடன் மூளை எடை brain to body ratio வை வைத்து பார்த்தால் உலகில் உள்ள விலங்குகளிலேயே மனிதர்களுக்குத்தான் அதிகம்.

Australopithecus க்கும் இப்பொழுது வாழும் மற்ற விலங்குகளுக்கு பிரசவம் சுலபம் தான், உடல் வெளிவந்தால் போதும், ஆனால் நமக்கு நேராக நடப்பது, சிறிய இடுப்பெலும்பு போன்ற structual adaptationsஐ சமாளிக்க பிரசவ முறையில் இயற்கை சிறிது மாற்றங்களை கொண்டு வந்தது, அதாவது நேராக குழந்தை வெளிவராமல் தலை உடலுக்குள் திரும்பி, தலை முதலில் mid pelvis க்குள் வரவேண்டும் பின்னர் தலை ஒரு விதமாக திரும்ப்பி தோள்ப்பட்டை sagittal plane வாயிலுக்கு நேராக align ஆக வேண்டும் அப்பொழுது தான் pubis க்கு கீழாக குழந்தை வெளி வர முடியும். இந்த வகையான தலை திரும்பும் birth mechanics மனிதனை தவிர வேறு எந்த விலங்கிலும், நம் முன்னோர்களிலும் இல்லை. இந்த தகவமைப்பு rotational birth pattern சுமார் ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கலாம்.

மனித குழந்தை மற்ற விலங்குகளை போல இல்லாமல் தானாக நடக்க, உனவு ஒரு ஆக மாற வருடங்கள் ஆகும், காரனம் இயற்க்கை மனித குலத்தில் பெரிய மூளையை தேர்வு செய்தது காரனம். பெரிய மூளை மிகுந்த அறிவு, புத்திசாலித்தனம் etc.

பெரிய மூளைக்கு நாம் செய்யும் investment ஏராளம் அதில் முதலாவது சிக்கலான பிரசவம். இது இயற்க்கையே, நம் முன்னோர்கள் தானியாக assistance இல்லாமல் பிரசவம் பார்த்தார்கள் என்பதெல்லாம் கட்டுக்கதை.

நியாண்டர்த்தால்களில் மூளை நம்மை விட பெரிது, நம்மை விட பிரசவம் அங்கு மிக சிக்கல் ஆனால் ஒரு குழுவாக வாழ்ந்த அவர்கள் மற்றவர்களை பராமரித்தனர் என்பதற்க்கு ஆதாரங்கள் பல உள்ளது. அதே போல் அறிவாற்றல் மிகுந்த பல லட்சம் ஆண்டுகளாக ஒரு சமூகமாக வாழும் நாம் பிரசவத்தை மட்டும் யார் உதவியும் இன்றி செய்தோம் என்பது நகைப்புக்குரியது.

யாரும் அந்த முதல் சிக்கலான பிரசவத்திற்க்கு உதவி செய்யாமல் இருந்து இருக்காவிடில் இன்று யாரும் இப்படி ஒரு விவாதத்தில் ஈடுபட்டு இருக்க மாட்டோம், நல்லதொரு பழத்தை தேடி மரம் விட்டு மரம் தாவிக்கொண்டு இருப்போம்.

எனவே இந்த பிரசவத்தை முன்னொர்கள் யார் உதவியும் இன்றி பார்த்தார்கள் என்பதெல்லாம் போங்கு, மருத்துவ உதவி, human assistance, medical intervention உம் இயற்க்கையே.

எது இயற்கை எது செயற்க்கை என பெரிதாக வியாக்கியானம் பேசுபவர்கள் முதலில் பரினாம வளர்ச்சியை படித்து விட்டு வருவது நல்லது.