அறிவியல்


பலருக்கும் இவ்விடயம் இரண்டு வழிகளில் பயனுள்ளதாக இருக்கும்,

 1. சிலவேளைகளில் நாம் எம் வாகனங்களை park பண்ணுவதற்கு மிக சிரமப்படுவோம். இடம் கிடைப்பதும், அப்படி கிடைத்தாலும் அதிக பணம் செலுத்துவதுமாகவே இருக்கும்.

உங்கள் தொலைபேசியில் உள்ள Rover Parking APP மூலம் இலகுவாக, மிகவும் குறைந்த செலவில் இனி பாக் பண்ணலாம்.

roverparking-1

2. உங்களிடம் park பண்ண இடம் இருக்கின்றதா? இனி சும்மா இருந்த இடதை தேவையானவர்களுக்கு park பண்ண விட்டு, மாதம் $250வரை மேலதிக வருமானமாக ஈட்டலாம்.

நீங்கள் செய்யவேண்டியது Rover Parking என்னும் APP இனை உங்கள் Phoneல் download செய்து அதில் register பண்ணவேண்டியதுதான்.

நீங்கள் உங்கள் parking spaceஐ யாருக்காவது கொடுத்தால், park பண்ணுபவருடன் உங்களுக்கு எந்த கதையும் இல்லை. நீங்கள் வீட்டில் இருக்கவேண்டும் என்பதும் இல்லை. காலையில் புறப்பட்டு, மாலைதான் வீடு வருவீர்கள் என்றால் – சும்மா இருக்கும் உங்கள் வீட்டு பாக்கிங்கை Rover Parking APP சந்தர்ப்பம் கிடைக்கும்போது உபயோகப்படுத்தி – அதற்குரிய பணத்தை உங்கள் வங்கியில் செலுத்திவிடும். யாருடைய வாகனம், எவ்வளவு பணம் போன்ற மிகுதியினை Rover Parking APP பார்த்துக்கொள்ளும். உங்களுக்கு எந்த தலைவலியும் இல்லை.

3000_per_yr_infographic

இபோதுதான் ஆரம்பித்துள்ள இந்த சேவை, நாளடைவில் விஸ்திகரிக்கப்படும். கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது உபயோகத்தில் வந்துள்ளது.

 

நீங்கள் இதுவரை பல யூடியூப் வீடியோக்களை பார்த்து ரசித்திருக்கலாம். அவை எல்லாமே பெரும்பாலும் நிமிடக்கணக்கில் ஓடும் குவிக் பைட் ரகங்கள். இதற்கு மாறாக ஜானி லாசனின் நீர்விழ்ச்சி வீடியோ எட்டு மணி நேரம் ஓடக்கூடியது!

எட்டு மணி நேர வீடியோவா என ஆச்சர்யமாக இருக்கிறதா? அதைவிட ஆச்சர்யம் அந்த வீடியோ ஏற்படுத்திவரும் விளைவு.

தூக்கமில்லாமல் தவிக்கும் பலருக்கு அந்த வீடியோ தான் தாலாட்டாக அமைந்து, மன நமைதியை அளித்து நன்றாக தூங்கவும் வைக்கிறது. இந்த வீடியோ ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக மருத்துவமனை ஒன்றில் இதை தூக்கமின்மை தொடர்பான ஆய்வுக்கான கருப்பொருளாக சேர்த்திருக்கின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

இந்த வீடியோவை பார்க்கும் போது மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் இருப்பது போல உணர்வு ஏற்படுகிறது. இடையே நீரின் சளசளப்பும் பறவைகளின் சங்கீதமும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.இயற்கை ஆட்சி செய்யும் இடங்களில் மட்டுமே கேட்கக்கூடிய இன்னும் சில அற்புத ஒலிகளும் கேட்டுக்கொண்டே இருக்க அந்த நிர்விழ்ச்சியை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

இந்த வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும் பலரும் நடுவிலேயே தூங்கி விடுகின்றனர். பின்னர் திடிரென கண் விழித்துப்பார்த்தால் வீடியோ ஓடிக்கொண்டே இருக்கும். அது தரும் இதத்தால் மீண்டும் தானாக தூக்கம் வந்துவிடும் என்கிறார் வீடியோவை உருவாக்கிய ஜானி லாசன். அதனால் தான் இந்த வீடியோவை 8 மணி நேரம் ஓடக்கூடியதாக படம் பிடித்ததாகவும் சொல்கிறார்.

நீர்விழ்ச்சி விடீயோ

பொதுவாக HEART ATTACK என்றால் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உண்பதால் இரத்தக்குளாயில் கொழுப்பு/கொலஸ்ரால் படிந்து இரத்த ஓட்டத்தை தடைப்படுத்தி உருவாவது என்று ஒரு எண்ணம்.

இது இதயத்தில் உள்ள இரத்தக்குளாயில் ஏற்பட்டால் HEART ATTACK ஆகவும் மூளையில் ஏற்பட்டால் STROKE என்றும் சொல்லுவோம்.

ஆட்டிறைச்சி, பட்டர் தொடங்கி அனைத்து கொலஸ்ரால் உணவுகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி!

கூடவே ஜிம், ஜாக்கிங், ரேட்மில்….வேறு!

இவை எல்லாத்தையும் தாண்டி  ஒரு ATTACK கை அண்மையில் உணர்ந்த போதுதான் அட இப்படி ஒன்று இருக்கா என்று ஒரு எண்ண ATTACKகே வந்தது!

Heart-attack-due-to-stress

போதிய நித்திரை இன்மை, அதிக யோசனை, வேலைச்சுமை, கவலை, வியாபாரம், இது என்ன, அது என்ன…. போன்ற பல செயல்கள் கூட எம் இதயத்தை நிறுத்தும் வேலையில் போய் முடிந்துவிடும்.

டாக்டரிடம் கொண்டுபோய் சோதிக்கும் போது எல்லாம் சரியாக இருக்கும். நமக்கென்ன என்று ஜாலியா இருக்கும் போது யமராஜா அடுத்தவழியாக வந்து கை நீட்டுவார்!

அப்போ என்ன இது?

Stress ATTACK.

Emotional stress க்கும் Myocardial Infarction என்னும் heart attackக்கும் நெருக்கிய தொடர்பு இருக்கு.

Stress…  இது எம் வாழ்வில் ஒரு சிறு அங்கமாக இருந்தாலும் எம்மில் பெரிய இடத்தை எடுத்துக்கொள்ளும்.

Stress is playing a main role in everyone’s life. In fact, it has become as a part of our life

இது நல்லநிலையில் உள்ள இதயத்தையும் நிறுத்திவிடும் வல்லமை கொண்டது.

Stress Attackக்கு இரத்தம் மிகச் சுத்தம், உயர் அழுத்தம் – தாழ் அழுத்தம் ரெம்ப அற்புதம், கொழுப்பு – கொலஸ்ரால் எதுவும் இல்லை, இளவயது இதைப்பற்றி எல்லாம் இதற்கு கவலையே இல்லை!

மனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், சமிபாடு (செரிமானம்), இதயத்துடிப்பு, கொட்டாவி போன்ற செயற்பாடுகளையும், விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் என்னும் இயலும் இயலாது போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறன் கொண்டது.

Stress Heart attack relationshipமூளையை விடாமல் தொந்தரவு செய்வதால் அது தன் வேலைப்பழு காரணமாக தான் சாதாரணமாக செய்யும் வேலையை நிறுத்திவிடுவேன் எனும் நிலைக்கு சென்று, சும்மா பாட்டுக்கு துடித்துக்கொண்டிருக்கும் இதயத்தை குறிவைக்கும்! இது மூளையின் அரசியல்!

இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு மூளையை நிறுத்துவது ஒருவகை.

மூளை கோவிச்சுக்கொண்டு இதயத்தின் மூக்கை பொத்துவது அடுத்தவகை.

சரி இதற்கு என்ன செய்யலாம்? இது ரெம்ப கஸ்டமான காரியம். உலகில் மிகச்சிலரால் மட்டும் இப்படி நடந்துகொள்ள முடியும்?!

என்ன அது….., Take is easy Policy. இந்த Policyயை நிறையப்பேரால் எடுக்கமுடியாது அல்லது எடுக்க விரும்புவது இல்லை! எதற்கெடுத்தாலும் தாம்மிபிதா தை தை தான்!

வீடு சுத்தமா இல்லை என்பதில் இருந்து ஆரம்பிதது, உலக அரசியல் வரை இந்த டென்ஷன் போகும்!

இந்த டென்ஷனை குறைத்து/நிறுத்தி நல்ல முறையில் அணுகும் நிதானமான போக்கு வேண்டும். எல்லாத்தையும் தலைக்குள் போடாமல் ஜாலியா மனைவியுடன் உலாவரலாம். குழதைகளுடன் குழந்தையாகி விளையாடலாம், நண்பர்களுடன் அரட்டை, உரவுகளுடன் உல்லாசம், இனிய பாடல்களை கேட்டல், ஆன்மீகம்… இப்படிStress இலாமல் வாழ்க்கையை கொண்டுபோக கற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பா நல்ல நித்திரை வேண்டும்.

yaman2நம்மில் எத்தனை பேர் கனிவுடன் மனைவி(/கணவன்)யின் கைபிடித்து வீதியில் நடக்க தயார்?

எத்தனைபேர் குழந்தைகளுடன் குட்டிக்கரணம் அடிக்க தயார்?

நண்பர்களையும், உறவுகளையும் கூட்டிவைத்து மகிழ்விக்க தயார்?

ஒரு 8மணி நேரம் தூங்க நேரம் இருக்கா/தாயாரா?

அப்படி தயார் ஆன ஆசாமியா நாம் இருந்தால், யமதர்மராஜாவின் GPSல் எங்கள் விலாசம் பிழையாக காட்டும்!

ரோபோ கார் என்றும் குறிப்பிடப்படும் இந்த கார் சாப்ட்வேர் வழிகாட்டுதலோடும் சென்சார்கள் துணையோடும் தன்னைத்தானே இயக்கி கொள்ளும். மனிதர்கள் இதில் ஹாயாக பின்சீட்டில் அமர்ந்து கொண்டால் போதுமானது. இந்த காரில் ஸ்டியரிங்கும் கிடையாது. பிரேக்கும் கிடையாது. எல்லாவற்றையும் சாப்ட்வேர் கவனித்துக்கொள்ளும். ஒரு பட்டனை அழுத்தினால் போதும் கார் போக வேண்டிய இடத்திற்கு அழைத்துச்சென்றுவிடும் என்றும் குறிப்பிடப்பட்டது.

போக்குவரத்தின் எதிர்காலம் என்றும் வர்ணிக்கப்படும் இந்த தானியங்கி கார் ஆச்சர்யத்தை மட்டும் அல்லாமல் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியது. அவற்றில் பிரதானமானது, இந்த கார் உண்மையில் நடைமுறையில் சாத்தியம் தானா ? என்பதாகதான் இருந்த்து. தானியங்கி கார்கள் எல்லாம் சரிபட்டு வருமா? போன்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டு இதன் பின் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த விவாதமும் நடைபெற்று வருகிறது.

மெல்ல கூகுள் கார் பற்றிய பரபரப்பு அடங்கிய நிலையில் இப்போது கூகுள் இதன் முழு மாதிரி வடிவை அறிமுகம் செய்திருக்கிறது. தானியங்கி கார் முயற்சியில் மிகப்பெரிய பாய்ச்சலாக இதன் முதல் முழு செயல்பாட்டு வடிவை உருவாக்கி இருப்பதாக கூகுள் அறிவித்துள்ளது.

மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட மாதிரி ஹெட்லைட் கூட இல்லாத வடிவம் என்று குறிப்பிட்டுள்ள கூகுள் தற்போது முதல் முழு தானியங்கி கார் மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மே மாத அறிமுகத்திற்கு பின் பலவேறு வகையான சோதனை முயற்சியில் ஈடுபட்டு அவற்றின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியதாக புதிய மாதிரி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் விடுமுறை காலத்திலும் புத்தாண்டிலும் கலிபோர்னியா சாலைகளில் இந்த தானியங்கி கார் வலம் வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தானியங்கி கார்களில் பிரேக் மற்றும் ஸ்டியரிங் தேவை இல்லை என்ற போதிலும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்படும் வகையில் இவை மாதிரி வடிவில் சேர்க்கப்பட்டுள்ளன. அவசர தேவை எனில் கைக்களால் இயக்கி கட்டுப்படுத்தும் வசதியும் இருக்கிறது.

உருவாக்கத்திலும் ,வெள்ளோட்டங்களிலும் பாதுகாப்பு அம்சத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சென்சார்கள் சாலையில் மேடுபள்ளங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய அம்சங்களையும் கவனத்தில் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

வரும் ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட மாதிரி கார்களை உருவாக்கி போக்குவரத்து சோதனைகளில் ஈடுபட கூகுள் திட்டமிட்டுள்ளது. முதல் கட்ட சோதனையில் வெற்றி கிடைத்தால் அடுத்த கட்டமாக கலிபோர்னியாவில் மாதிரி திட்டம் ஒன்றையும் நடைமுறைபடுத்த உள்ளது. இந்த சோதனையின் போது கற்றுக்கொண்டு அந்த அனுப்வத்தின் அடிப்படையில் தானியங்கி கார் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் கூகுள் விரும்புகிறது.

கூகிள் தவிர வேறு சில நிறுவன்ங்களும் கூட தானியங்கி கார் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் பிரிட்டனின் பிரிஸ்டல் உள்ளிட்ட 4 முக்கிய நகரங்களில் தானியங்கி காருக்கான சோதனை முயற்சியை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

பூமிக்கடியில் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் 100 கோடி ஆண்டுகள் கணக்கில் பழமையான இப்படியான தண்ணீர் காணப்படுகிறது.

earth-ocean-ringwoodite

11 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் என்ற அளவில் இந்த பழைய தண்ணீர் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தற்போது கணித்துள்ளனர். அதாவது உலகிலுள்ள அனைத்து ஆறுகள், ஏரிகள், குளங்கள் அனைத்திலும் இருக்கின்ற நீரை விட புவியின் மேற்பரப்புக்கு மிக ஆழத்தில் இருக்கின்ற இந்த பழைய தண்ணீரின் அளவு அதிகம்.

பூமிக்கடியில் சுமார் 660 கிலோமீட்டர்கள் ஆழத்தில் இந்த தண்ணீர் இருந்தும், தண்ணீருக்கும் பாறைகளுக்கு இடையிலான நடக்கின்ற ரசாயன மாற்றங்களால் ஹைட்ரஜன் வாயு உருவாவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

ஹைட்ரஜன் என்பது சில வகை நுண்ணுயிர்களின் உணவு ஆதாரமாக இருக்கிறது.

எனவே இவ்வளவு ஆழமான இடங்களிலும், உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

பழைய தண்ணீர் பற்றி ஆய்வு செய்துள்ள விஞ்ஞானிகளில் ஒருவரான ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கிறிஸ் பல்லென்டின் பழைய தண்ணீர் பற்றி கூறுகையில், இந்த தண்ணீர் மிகவும் அதிகமான உப்புத்தன்மை கொண்டுள்ளது என்றும் அதில் யாரும் விழுந்தால் Dead seaயில் மிதப்பதைப்போல்  போல மிதப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

“ஆனால் இந்த மிகப் பழைய தண்ணீர்ல் உயிர்கள் வாழத் தேவையான இரசாயன மூலக்கூறுகள் இருக்கின்றன. இந்த மாதிரியான இராயானங்கள் இருந்தால் அதில் நுண்ணுயிர்கள் இருக்கும் என்பது மாதிரியான சில இடங்கள் நமக்கு தெரியும்.

கனடாவில் பூமிக்கு அடியில் கிட்டத்தட்ட இரண்டரை கிலோமீட்டர்கள் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட தண்ணீர் 250 கோடி ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் காட்டியுள்ளன.

இதுவரையில் பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பழமையான தண்ணீர் இதுதான்.

thanks:BBC

333

மகளும் நானும்…

“அப்பா, காது கேட்காதவர்கள் எப்படி அலார்ம் வைப்பார்கள்?”

“அவர்களுக்குத்தான் கண் தெரியுமே பார்த்து வைக்கலாம் தானே?”

“அய்யோ அப்பா, நான் சொல்லுவது அவர்களுக்கு காதுதான் கேட்காதே, எப்படி அவர்கள் எழும்புவார்கள்?”

மகளின் நெருட்டலான கேள்வி ஒருகணம் என்னை திக்கு முக்காடச் செய்தது!

ஆமாம் காதுகேட்காதவர்கள் எப்படி அவர்கள் நித்திரையிலிருந்து எழுந்து வேலைக்கு போவது? இதற்கு என்ன வழி???

அப்படி தேடியதில் கிடைத்தது இது….

இனி காதுகேட்காதவர்களுக்கும், அவ்வப்போது சிலவேளைகளில் காது கேட்காமல் போகும் கணவன் மனைவி மாருக்கும் ஒரு அரிய அலார்ம் கடிகாரம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் உள்ள மோதிரத்தை விரலில் மாட்டிவிட்டு அலார்மை வைத்துவிட்டு படுக்கைக்கு போகலாம். நாம் எழும்பும் நேரம் வந்தவுடன், மோதிரம் ஆனந்தமான ஒரு அதிவினை உண்டாக்கும்!

சத்தமின்றி தனி அதிர்வின்மூலம் இந்த கடிகாரம் வேலை செய்யும்!

இனி காதுகேட்காதவர்களுக்கு இந்த கடிகாரம் ஒரு வரப்பிரசாதம்!

பொதுவாக அங்கவீனர்களை பார்த்து நெஞ்சம் கனக்கும் என் மகளுக்கு இந்த கடிகாரத்தின் வருகை கண்டு மிக்கவே மகிழ்ந்தாள்!

சரி, இன்னொரு விடயத்துக்கு வருவோம். இது கணவன் மனைவிக்கும் மிகவும் உபயோகமாக இருக்கும். உதாரணத்திற்கு ஒருவர் அதிகாலை வேலைக்கு போகவேண்டும் என்றால்,அவர் வைக்கும் அலார்ம் அனைவரையும் விழிக்கச்செய்யும். என் மனைவி வைக்கும் அலார்ம் அவங்க எழும்புவதற்கு முன்னர் நான் எழும்பி நிறுத்தும் வேலைதான் பொதுவா நடைபெறும்.இனி இந்த மேதிரம் அவவை மட்டும் தான் எழுப்பும். நான் என்னேரம் வரும்வரை நிம்மதியாக தூங்கலாம்.

இதில் இரண்டு மோதிரங்கள் உள்ளன. இருவரும் இரண்டு வேறு வேறு நேரங்களை அலார்ம் செய்து கொள்ளலாம்.

சிலவீடுகளில் கைக்குழந்தை சாதாரண கடிகாரத்தின் சத்தத்தில் எழுந்து கொண்டு நமக்கிருக்கும் கொஞ்சநேரத்தில் அழுது அட்டகாசம் பண்ணும். அவர்களுக்கும் இந்த மோதிர அலார்ம் கைகொடுக்கும் என்பதில் ஐயமில்லை!

billboardjump-master675

உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் விளம்பரப் பலகை நியுயார்க் நகரில், ஏற்கனவே பல பெரிய ஒளிரும் விளம்பரப் பலகைகளுக்குப் பெயர் பெற்ற, டைம்ஸ் சதுக்கத்தில் இயங்கத் தொடங்கியிருக்கிறது.

(highest resolution LED of its size in the world, with a resolution of 2,368 by 10,048, far higher than 4K ultra high definition)

அதி-துல்லிய திரையுடன் கூடிய இந்த டிஜிட்டல் விளம்பரப் பலகை மூலம் முதன் முதலாக மலை, பறவை , அடுக்குமாடிக் கட்டிடங்கள் போன்றவைகளைக் காட்டும் ஒரு டிஜிட்டல் படம் ஒன்று திரையிடப்பட்டது.

கூகிள் நிறுவனம் இந்த மாபெரும் டிஜிட்டல் பலகையை முதன் முதலாக வாடகைக்கு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

Nokia Lumia 900 Launches In Times Square - Performance

நான்கு வாரங்களுக்கு இந்த பலகையை வாடகைக்கு எடுக்க விலை என்ன தெரியுமா ? சும்மா 2.5 மிலியன் டாலர்கள்! சுமார் மூன்று லட்சம் பாதசாரிகள் இந்த விளம்பரப் பலகை இருக்கும் இடத்தை தினசரி கடக்கிறார்கள் என்று கணிக்கப்படுகிறது. இந்த விளம்பரப் பலகை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை முதன்முதலாக இயக்கப்பட்டபோது, நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அதைக் கண்டு ரசித்தனர்.

அடுத்த பக்கம் »