அறிவியல்


கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்,

நாம் எல்லாம் இனி எமக்குத்தேவையான பொருட்களை வாங்க பலசரக்கு கடைக்கு போகத்தேவையில்லை!

ஒரு பட்டனை அமுக்கினால் எமக்குத்தேவையான பொருட்கள் சில நிமிடங்களில் நம் வீடு தேடிவந்துவிடும்.!

da13937a10edff0c530fedd1a5bfc75c

படத்தில் உள்ள இந்த உபகரணத்தை வீட்டில் நம் சமையல்கட்டிலோ, அல்லது சிவற்றிலோ பொருத்தி வைத்துவிட்டு – அப்பப்ப நமக்கு தேவையான பொருட்களையோ, முடிந்துவிட்ட பொருட்களையோ ஒரு ஸ்கான் செய்துவிட்டால் போதும், அந்த பொருள் நம் வீடுதேடி வரும்!

ஸ்கான் செய்யமுடியாத பொருட்கள் என்றால், (உதாரணமாக மரக்கறிவகைகள் மற்றும் ஸ்கான் கோட் இல்லாத் பொருட்டகள்) என்றால் எம் குரல் கொண்டு சொல்லும் சொல்லை எழுத்துருவத்துக்கு மாற்றி அனுப்பிவிடும். மொழிப்பிரச்சனையும் இல்லை. மொழிபொயற்கும் திறனும் உள்ளது. பால் என்று சொன்னால் Milk என்று கண்டுபிடிக்கும் திறன் உள்ளது.

அப்புறம் என்ன சொல்லுகின்றீர்கள், நேரம் மிச்சம், குடும்பத்தைவிட்டுவிட்டு,  குரோசரிக்கடைக்கு போகவேடியதில்லை, வீடுக்கு விருந்தினர் வந்திருக்கும் வேளையில் அவர்களை அம்போவிட்டு நீங்கபாட்டுக்கு கடைகளுக்கு அலையத்தேவையில்லை.

தற்போது பீட்சா வீட்டுக்கு வரவளைப்பதைப்போல் – இனி அனைத்து பொருட்களும் வீடுதேடி வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இந்த மாற்றத்தை உணர்ந்து யாராவது இந்த துறையில் கால்பதித்தால் எதிர்காலத்தில் நல்ல ஒரு இடத்தை அவர்கள் அடையலாம்.

இன்டர்ரெட் வசதியினை பொறுவதற்கு புதிய தொழில்நுட்பத்தினை சீனா விஞ்ஞானி ஒருவர் கண்டுபடித்துள்ளார். ஒரு பல்ப்பை எரியவிடுவதன் மூலம்  இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தல்லாம். இந்த தொழில்நுட்பத்திற்கு LI-FI என பெயரிட்டுள்ளனர்.

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் எல்லா வகையான சாதனங்களிலும் இன்டர்நெட் வசதியை பெறலாம். ஒரு பல்பை வாங்கி எரிய விட்டால் அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு உயிர் வந்துவிடும். லைட்டை ஆப் செய்து விட்டால் இன்டர்நெட்ட  நின்று விடும் அவ்வளவு எளிதான முறை!

இந்த பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன் மூலம் உண்டாகும் அலைவரிசையில் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுகிறது. வழக்கமான WI-FI 2.4GHz & 5GHz ரேடியோ அலைவரிசை பயன்படுகின்றது. இதன் மூலம் இன்டர்நெட் உயிர்பெறுகிறது. ஆனால், LI-FI தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பல்பை வைத்து, அதன்மூலம் கிடைக்கும் ஒளிக்கற்றைமூலம் ஒரு ஒளிவாங்கும் கருவிமூலம் பெற்று அதனை சக்திமாற்றம் செய்யப்பட்டு கிடைக்கும் DATA வை கணணிக்கும், கைத்தொலைபேசிக்கும், ஐ பாட் க்கும், டப்பிலட் க்கும் அனுப்பி இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நாம் இவ்வகை புதிய தொழில்நுட்பத்துடன் உறவாடும் காலம் தூரத்தில் இல்லை!

image01ஹேக்கிங் செய்ய முடியாத வண்ணம் கூகுள் போன்று தேசிய மின்னஞ்சல் சேவையை தொடங்கும் பணியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்திய மக்களுக்காக அரசாங்கத்தின் மின்னஞ்சல் சேவை தொடங்க தேவையான பணிகளில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை தீவிரமாகியுள்ளது. தகவல் சேகரிப்பு மற்றும் ஹேக்கிங் செய்ய முடியாத வண்ணம் மின்னஞ்சல் சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் சேவை ஸ்மார்ட் அம்சங்களை கொண்டு இருக்கும். ஜி-மெயில் மற்றும் யாகூ அடிப்படையில் அடிப்படையில் மின்னஞ்சல் சேவை தொடங்குவதற்கான பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

மின்னஞ்சல் சேவையை தொடங்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளோம் என்று கூறியுள்ள மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அதிகாரி பேசுகையில், மின்னஞ்சல் இணையதளம் கூகுள் அல்லது யாகூவை போன்று தொடங்கப்படும். அதற்கான டெம்ப்ளேட்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. மின்னஞ்சல் வழியான அதிகாரப்பூர்வமான எந்த ஒரு தொடர்பும் உண்மையான மற்றும் உத்தியோகபூர்வமாக இருக்கும். புதிய டெம்ப்ளேட்கள் ஒரு அதிகாரப்பூர்வமான தோற்றம் என்றும் இவை முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

புதிய மின்னஞ்சல் சேவை குரூப் எஸ்.எம்.எஸ். அனுப்பும் விதமாகவும், ஆன்-லைனில் சாட்டிங் செய்யும் அம்சங்களை கொண்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நாள்காட்டி, செயல்பாடுகள் குறித்த திட்டம் சேகரித்தல், கூகுள் வழங்குவது போன்று மொத்த எஸ்.எம்.எஸ். அனுப்பு வசதிகள் போன்ற அம்சங்களை கொண்டு இருக்கும். பயனர்கள் மின்னஞ்சல் மூலம் மொத்தமாக எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியும். என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுடப துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முன்னாள் டெலிகாம் செயலாளர் மற்றும் மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சந்திரசேகர் கூறுகையில், புதிய அரசாங்கத்தின் மின்னஞ்சல் சேவை அரசு தகவல் மற்றும் உத்தியோகபூர்வ தரவுகளின் பாதுகாப்பை அதிகரிக்க செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

கூகிளின் 15 லட்சம் ஜிமெயில் அக்கவுண்ட்கள் சமீபத்தில் தான் ஹக் செய்யப்பட்டன. இந்த விஷயம் அரசுக்கு தெரியவில்லை போல… பாவம்…

ஸ்மார்ட் வாட்ச் சந்தையில் புதிய வரவு வர்த்தக நிறுவனத்திடம் இருந்து இல்லாமல் பாப் பாடகரிடம் இருந்து வந்திருக்கிறது.

Black Eyed Peas குழுவின் தலைமை பாடகரான Will.i.am என்பவர் பாடகர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர். தொழில்நுட்ப ஆர்வம் மற்றும் தொழில்முனவை நாட்டமும் கொண்ட இவர் தனது நிறுவனம் மூலம் Plus எனும் பெயரில் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்திருக்கிறார்.

கையணி சாதனம் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கிறது. GSM 3G, Wi-Fi, Bluetooth, GPS, a pedometer and accelerometer உள்ளிட்ட வசதிகளுடன் அறிமுகமாகி இருக்கும் இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஸ்மார்ட்போன் உதவி இல்லாமலே பேசலாம், செய்தி அனுப்பலாம். அதற்கேற்ப சிம்கார்டு வசதியுடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு அடிப்படையிலானது தான்.

பெடோமீட்டர், ஆக்ஸ்லோமீட்டர் எல்லாம் இருக்கிறது. ட்விட்டர், பேஸ்புக் அணுகும் வசதியும் இருக்கிறது. இதற்கென்ரே குரல் வழி உதவியாளர் வசதியும் இருக்கிறது. இதற்கான பேட்டரிபேக் உள்ளிட்ட துணை சாதனங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அறிமுகத்தின் போது விலை அறிவிக்கப்படவில்லை. பாடகரின் ஸ்மார்ட்வாட்ச் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறது என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் ஸ்மார்ட் வாட்ச் சந்தைக்கு கூடுதல் மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கூகிளிவ் ஸ்டிரீட்வியூ சேவை மூலம் லிவா பாலைவனச்சோலையில் நீங்கள் உலா வரலாம்.இதற்காக நீங்கள் அரேபியா செல்ல வேண்டாம். இணையத்தில் கூகிள் ஸ்டிரீட்வியுவுக்கு விஜயம் செய்தால் போதுமானது.

ஸ்டீரிட்வியூ கூகிளின் பிரபலமான வரைபட சேவையின் ஒரு அங்கம். ஸ்ட்ரீட்வியூவில் அதன் பெயருக்கு ஏற்ப நகரத்து காட்சிகளை 360 கோணத்தில் காணலாம். இந்த சேவைக்காக கூகிள் சுற்றிச்சுழலும் காமிராவுடன் உலக நகரங்களுக்கு சென்று அங்குள்ள காட்சிகளை படம் பிடித்து ஸ்டீரிவியூவாக வழங்கி வருகிறது. அந்தரங்க மீறல் புகார் காரணமாக இந்த சேவை சர்ச்சைக்குரியதாகவும் இருந்தாலும், இந்த இன்னொரு பகுதி கொண்டாடக்கூடியதாக இருக்கிறது.

உலகில் உள்ள புகழ்பெற்ற நினைவுச்சின்னங்கள் மற்றும் பாரம்பரிய இடங்களையும் கூகிள் ஸ்டிரீட்வியூ மூலம் படம் பிடித்து காட்டி வருகிறது. இந்த சேவை மூலம் நம்நாட்டி தாஜ்மகாலையும் பார்க்கலாம்.கம்போடியாவின் அங்கோர்வாட் கோயிலையைம் பார்க்கலாம். துருவப்பகுதியில் உலாவும் பனிக்கரடிகளையும் பார்க்கலாம். கடலுக்கு அடியிலான காட்சிகளையும் பார்க்கலாம்.

இப்போது இந்த வரிசையில் அரேபிய தீபகர்ப பகுதியில் ஐக்கிய அரபு குடியரசில் அமைந்துள்ள லிவா பாலைவனப்பகுதியையும் பார்த்து ரசிக்கும் வசதியை கூகிள் ஸ்டிரீவியூ அளிக்கிறது.

லிவா பாலைவனம் அபுதாபி நகரம் அருகே அமைந்துள்ளது. லிவா பாலைவனம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எந்திரன் படத்திற்காக இயக்குனர் ஷங்கர் கண்டுபிடித்த பெருவின் மச்சு பிச்சு மலைப்பகுதிக்கு நிகரானது . மணல் குன்றுகள் நிறைந்த இந்த பகுதி ஐக்கிய அரபு குடியரசில் உள்ள பழமையான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அரேபிய பகுதியின் மிகப்பெரிய பாலைவனச்சோலையாகவும் கருதப்படுவதோடு செழுமையான வரலாற்றையும் கொண்டது. இங்கு வாழ்ந்த இனக்குழுவை சேர்ந்தவர்களே பின்னாளில் தீபகர்பத்தின் மற்ற பகுதிகளில் பரவி குடியேறியதாக கருதப்படுகிறது.

’கண்ணுக்கு எட்டிய வரை மணல் , நடுவே அழகிய குன்றுகள், தூரத்தில் பார்த்தால் தெரியும் பசுமை. அவை காணல் நீராகவும் இருக்கலாம். சோலையாகவும் இருக்கலாம்’; லிவா பாலைவன காட்சியை கூகிள் ஸ்டிரீட்வியூ இப்படி வர்ணிக்கிறது.

பேரிச்சை மரங்களும் நிரம்பியிருப்பதை பார்க்கலாம். சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த பாலைவனச்சோலையை உலகம் முழுவதும் உள்ளவர்கள் பார்த்து ரசிக்கும் வகையில் ஸ்டிரீட்வியூவில் கூகிள் படமெடுத்துள்ளது.

ஸ்டிரீட்வியூ காமிரா பொதுவாக காரில் வைத்து இயக்கப்படும். குறுகலான பகுதி என்றால் ரோபோ போன்ற ட்ரெக்கர் காமிரா மூலம் படமெடுக்கப்படும். லிவா பாலைவனத்தை பொருத்தவரை இந்த காமிரா தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாலைவனத்திற்கு ஏற்ப ஒட்டகத்தின் மீது இந்த காமிரா வைக்கப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன. பாலைபனத்தின் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், அங்குள்ள காட்சியை இயற்கையாக படமெடுக்கவும் ஒட்டகத்தை பயன்படுத்தியுள்ளது. இந்த பயணத்தில் இந்தியர் ஒருவர் வழிகாட்டியாக இருந்துள்ளார்.

இந்த காட்சிகளை 360 கோணத்திலும் பார்த்து ரசிக்கலாம். மணல் குன்றுகள், பேரிச்சை மரங்கள், சோலையின் பசுமை என காட்சிகள் விரிகின்றன.

பாலைவனச்சோலையை பார்க்க:

https://www.google.com/maps/views/streetview/liwa-desert?gl=us

aaa

சந்திர கிரகணம் என்பது நிலவு பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். இது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும்; இது ஏற்படுவதற்கு பூமி இடையில் அமைந்திருக்க வேண்டும். இதனால் முழு நிலவில் மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். கிரகணத்தின் வகை மற்றும் நீளம், நிலவின் இடம் அதன் சுற்றுப்பாதைகளில் எங்கிருக்கிறது என்பதைச் சார்ந்து இருக்கும். அடுத்த முழுமையான சந்திர கிரகணம் ஏப்பிரல் 5, 2014 & அக்டோபர் 8, 2014 இல் ஏற்பட இருக்கிறது. இரண்டு நிகழ்வுகளும் ஐரோப்பாவிலும் ஆப்பிரிக்காவிலும் தெரியாது. உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து மட்டுமே பார்க்க முடியக்கூடிய சூரிய கிரகணம் போலல்லாமல், சந்திர கிரகணம் பூமியில் இரவு நேரமாய் இருக்கும் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்க முடியலாம். சந்திர கிரகணம் சில மணி நேரங்கள் வரை இருக்கும்.

ஒக்டோபர் 8, 2014 இல் இடம்பெறுகின்றது.இது 2014 ஆம் வருடத்தில் நிகழும் இரண்டு முழு சந்திர கிரகணங்களில் இரண்டாவதாகும்.

Visibility_Lunar_Eclipse_2014-10-08

வட பசிபிக் பிரதேசத்தில் முழுமையாக இக் கிரகணத்தைக் காணமுடியும். வட அமெரிக்காவிலிருந்து நோக்குபவர்கள் அக்டோபர் 8 புதன் (கிழமை)பின்னிரவில் கிரகணத்தினைக் காணலாம். மேற்குப் பசிபிக் ஆஸ்திரேலியா, முழுஇந்தோனேசியா, ஜப்பான் மற்றும் கிழக்காசியா முதலான பகுதிகளில் அக்டோபர் 8 புதன் சூரியன் மறைந்த உடன் கிரகணத்தைக் காணலாம்.

ozone

ஓசோன் படலத்தைப் பற்றியும், அது எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், ஓசோன் படலம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் தீமைகள் பற்றியும் ஓசோன் படலம் மாசுபடுவதை தடுப்பதற்கான வழி முறைகளையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

1930-ம் ஆண்டு சிட்னிசாப்மேன் என்பவர் ஓசோனை கண்டறிந்தார். ஓசோன் என்பது மூன்று ஆக்ஸிஜன் அணுக்கள் சேர்ந்ததே ஒரு ஓசோன் துகள் ஆகும். இதனை வேதி குறியீட்டில் 03 என்பர். ஓசோன் வாயு ஆனது படலமாக பூமியிலிருந்து 60 கிலோ மீட்டர் உயரம் வரை பரவி உள்ளது. 20யிலிருந்து 25 கி. மீட்டர் வரை யிலான உயரம் வரை மிக அடர்த்தியாக உள் ளது. இந்த ஓசோன் படலத்தின் முக்கிய பணி என்ன வென்றால் சூரிய ஒளி கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளது. இத்தகைய ஒளிக் கதிர்களை அகச் சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். அகச்சிவப்பு கதிர்கள் சூரியனிடமிருந்து வெப் பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவ ரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக் கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதா கதிர்களை பூமியை வந்து அடையா வண் ணம் பாதுகாப்பதுதான் ஓசோன் படலத்தின் பணி ஆகும்.

ozone (1)

ஓசோன் படலம் எவ்வாறு பாதிப்புக்குள்ளாகிறது?

உன்னத பணி செய்துக் கொண்டிருக்கும் ஓசோன் படலத்தை நாம் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், புகையிலை தொழிற்சாலைகள, முரைப் பஞ்சு தயாரிக்கும் தொழிற்சாலைகள், தீயணைப்புக் கருவிகள், வர்ணம் அடிக்கும் தூவிகள், போன்றவற்றில் குளோரோ புளோரா கார்பன் என்னும் வாயு பயன்படுத்தப்படுகிறது. இந்த வாயு வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் துகள்களை தாக்குகிறது. இதனால் ஓசோன் பட லத்தில் துளைகள் ஏற்படுகிறது. எவ்வாறு எனில் குளோரோ புளோரோ கார்பன் வாயு நிலைத்த நிலையில் நூறு ஆண்டுகள் வரையில் இருக்கும். ஆனால், சூரிய கதிர்கள் இவ்வாயுவின் மீது படும்போது இது பிரிகிறது. இந்த வேதியல் மாற்றத்தால் ஒரு குளோரின் அணு மட்டும் பிரிந்து, ஓசோன் துகளை தாக்குகிறது. ஓசோ னிலிருந்து ஒரு ஆக்ஸிஜன் அணுவை இழுத்துக் கொள்கிறது. இது குளோரின் மோனாக்ஸைடு துகளாக மாறுகிறது. இவ்வாறு ஓசோன் படலம் அழிக்கப்படு கிறது.

ஓசோன் படலம் பாதிக்கப் படுவதால் ஏற்படும் தீமைகள்„

உலகம் முழுவதும் வெப்பம்கூடும். இதனால் வளி மண்டலத்தில் மிகுதியான வெப்பம்கூடும். அதிக வெப்பத்தினால் வறட்சிக்காலம் ஆண்டுதோறும் நீடிக்கும். வெப்பம் கூடுதல் ஆக ஆக பனிமலைகளிலுள்ள பனி உருகி திடீர் வெள்ளம் ஏற் படும். கடல் மட்டம் கூடும். இதனால் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு கடல் நீர் நிலத்திற்குள் புகுந்து நிலப்பகுதியின் அளவைக் குறைப்பதோடு கடலோர பகுதிகள் மூழ்கடிக்கப் படும். பருவகாலங்கள் மாறுபட்டு உயிரினங் களும் ஆபத்தை உண்டுபண்ணும். புறா ஊதா கதிரானது ஓசோன் படலத்தால் தடுக்கப்படாமல் நேரடியாக பூமிக்கு வந்தால் மனிதர்களுக்கு தோல் புற்றுநோய், கண்ணில் சதை வளர்ச்சி, தோல் சுருக்கம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற நோய்கள் உண்டாக்கின்றன.

ஆண்டொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் மேலா னோர் தோல் புற்று நோயினால் அவதிப்படு கின்றனர். ஓசோன் படலம் 0Š ஒரு விழுக்காடு குறைந்தால் தோல் புற்றுநோய் இரண்டு விழுக் காடு அதிகரிக்கும். மேலும் தாவரங்களின் உற்பத்தி திறனும் குறையும். விலங்கினங்கள் அதிக அளவு பாதிக்கப்படும்.

புற ஊதாக்கதிர்கள் கடலில் பல மைல் தூரம் ஊடுருவிச்சென்று கடல்வாழ் உயிரினங்களில் ஒரு செல் உயிர்களை கொன்று குவிக்கிறது. மண்ணில் நுண்ணுயிர்கள் பாதிப்புக்கு உள்ளா கின்றது. இவ்வாறு ஓசோன் படலம் பாதிக்கப் படுவதால் ஏற்படும் தீய விளைவுகளை கூறிக் கொண்டே செல்லலாம்.

ஓசோன் படலம் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கான வழி முறைகள் பார்ப்போம்.

1995-ம் ஆண்டு ஓசோன் ஆய்விற்காக குரூட்சன் மற்றும் நிகோலஸ் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்த அறிஞர்களின் விருப்பமெல்லாம் இந்த பூவுலகை காக் கும் ஓசோன் படலத்தை காக்க உலகத்திலுள்ள அனைவரும் ஒன்றாக கைகோர்க்கவேண்டும் என்பதுதான்.

எனவே ஒசோன் படலம் பாதிக்கப்படுவதால் எற்படும் பிரச்சினையைக் கட்டுப்படுத்த அகில உலக அளவில் ஒட்டு மொத்தமான கூட்டுறவு முயற்சியும் ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும் மேற்கொள்ள பரவலான முன் எச்சரிக்கை நட வடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. குளோரோ புளோரோ கார் பனை வெளியிடும் சாதனங்களை தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக மாற்றுச் சாதனங் களை கண்டுபிடிக்கவேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள் ஆகியவற்றில் குளோரோ புளோரோ கார்பனுக்கு ஈடான சுற்றுச்சூழலை மாசு அடைய செய்யாத வேறு பொருள்களை பயன்படுத்தவேண்டும்.

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »