சமையல்


juse

விதவிதமான பழங்களை கொண்டு பழரசம் தயார் செய்ய வழி காட்டுகிறது. சமையல் குறிப்பு இணையதளங்கள் போல இது பழரச குறிப்பு இணையதளம். ஆனால் பழரச குறிப்புகளை வெறும் பட்டியலாக அடுக்காமல் கொஞ்சம் சுவார்ஸ்யமாக முன்வைக்கிறது; அதனால் தான் சிம்பிளி ஸ்மார்ட் ஜூசிங் என பெயர்!

இந்த தளத்தில் நுழைந்ததும் முதலில் பழரசம் தயாரிக்க கிளிக் செயத்தும் வரிசையாக பழங்கள் தோன்றுகிறது. அந்த பழங்களை வரிசையில் இருந்து உருவி எடுத்து கிழே உள்ள மிக்சரில் போட்டால் பழரசமாக தயார் செய்து தருகிறது.

நீங்கள் தயாரித்த பழரசத்தில் என்ன எல்லாம் இருக்கிறது என்று புள்ளிவிரங்களை தருவது தான் சிறப்பம்சம். அதாவது பழர்சத்தில் எத்தனை கலோரி இருக்கிறது, சர்க்கரை எவ்வளவு என்றெல்லாம் தகவல் அளிக்கிறது. அப்படியே மற்ற பழரசங்களுக்கான தயாரிப்பு குறிப்புகளையும் பரிந்துரைக்கிறது. அந்த பழரசங்களுக்கான ஊட்டச்சத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

இதே போல பழங்களை தேர்வு செய்யும் போது அவற்றின் ஊட்டச்சத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகளுக்கு ஏற்ற பழங்களையும் தேர்வு செய்து கொள்ளும் வசி இருக்கிறது.

ஆக அடுத்த முறை பழச்சாறு தயாரிக்கும் போது இந்த இணையதளத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்

http://simplysmarterjuicing.com/

காலையில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும், மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கும், நல்ல ஆரோக்கியமான உணவு செய்து தர ஆசையா? அப்படியானால், அதற்கு இந்த உணவு சரியானதாக இருக்கும்.  அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும்  குறிப்பாக அலுவலகத்திற்கு செல்வோருக்கு ஏற்ற ரெசிபி. சரி, இப்போது அந்த வெஜிடேபிள்+முட்டை ரோலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 1 உருளைக்கிழங்கு – 1 (வட்டமாக மெல்லியதாக நறுக்கியது)

கத்திரிக்காய் – 1 (துண்டுகளாக்கப்பட்டது)

முட்டை – 2 (அடித்துக் கொள்ளவும்)

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

முட்டைகோஸ் – சிறிது

தக்காளி சில்லி சாஸ் – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை: முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும். பின் அதில் கத்திரிக்காயை சேர்த்து வதக்கி விட வேண்டும். கத்திரிக்காயானது நன்கு வதங்கியதும், அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி விட வேண்டும். பின்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் முட்டைகோஸ் சேர்த்து கிளறி, உப்பு சேர்த்து கிளறி, அடித்து வைத்துள்ள முட்டையை சேர்த்து கிளறி இறக்க வேண்டும். பிறகு அதனை சப்பாத்தியில் வைத்து, அதன் மேல் தக்காளி சில்லி சாஸ் தடவி சுருட்டினால், அருமையான வெஜிடேபிள் முட்டை ரோல் ரெடி!!!

குறிப்பு: கத்திரிக்காய் பிடிக்காது என்றால், அதனை போடாமல் செய்யலாம். மேலும் விருப்பமான காய்கறிகளை சேர்த்தும் செய்யலாம்.

சண்டே ஸ்பெஷல் Recipee   Chef  எழுமலை அவர்கள் உங்களுக்காக வழங்க இருக்கிறார் ,  இந்தவார  ஸ்பெஷல்  பன்னீர் பட்டர் மசாலா,

அதிகம்பேர் பார்த்த  எளியமுறையில், தெளிவான விளக்கம் பன்னீர் பட்டர் மசாலா செய்வது பற்றிய வீடியோ விளக்கம்.

Note:

சுவையானது சத்தானது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணக்கூடியதும் கால்சியம், மினரல், கொழுப்பு, கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின், பாஸ்பரஸ், இரும்பு போன்ற பலசத்துகள் அடங்கியதும் வித்தியாசமானதும் ஆகும். இதனை ஓட்டுமா எனவும் அழைப்பார்கள். எச்சரிக்கை – இருதயநோயாளர், சர்க்கரைநோயாளர் வைத்தியரின் ஆலோசனையை கேட்ட பின்பு சாப்பிடலாம். கவனிக்கவேண்டியவிசயங்கள் – முட்டைமாவை(2 – 8)கிழமைவரை வைத்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

  • அரிசிமா (வறுத்தது) – ஒரு சுண்டு (நிரப்பி)(399 கிராம்)
  • முட்டை – 2
  • சீனி (சர்க்கரை) – அரை சுண்டு (199 கிராம்)
  • நல்லெண்ணெய் – அரை சில்வர் டம்ளர்
  • வெனிலா – 2 மேசைக்கரண்டி
  • உளுத்தம்மா – கால் சுண்டு (99 கிராம்)
  • ஒரு வாயகன்ற பாத்திரத்தை எடுத்து அதில் முட்டைகளை உடைத்து ஊற்றவும்.
  • உடைத்து ஊற்றிய முட்டைகளின் மேல் சீனியை(சர்க்கரையை) போடவும்.
  • பின்பு இவையிரண்டையும் நன்றாக அடித்து கரைக்கவும்.
  • (சீனி(சர்க்கரை) முழுவதும் நன்றாக கரைய வேண்டும் (எக் பீட்டரினால் அடிக்கவும்).
  • சீனி(சர்க்கரை) முட்டையுடன் சேர்ந்து நன்றாக கரைந்த பின்பு அதனுடன் வெனிலாவையும் சேர்த்து அடிக்கவும்.
  • அதன் பின்பு அடித்து வைத்து உள்ள இக்கலவையுடன் வறுத்த அரிசிமா, உளுத்தம்மா ஆகியவற்றை சிறிது சிறிதாக தூவி எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
  • எல்லாம் கலந்த பின்பு அதனுடன் நல்லெண்ணெயை விட்டு நன்றாக குழைத்து கொள்ளவும்.
  • குழைத்த பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை)வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் விடவும்.
  • நல்லெண்ணெய் விட்டபின்பு தாட்சியை(வாணலியை) அடுப்பிலிருந்து எடுத்து நல்லெண்ணெய் தாட்சியின்(வாணலியின்)எல்லா பக்கமும்படும்படி நன்றாக சுற்றவும்(அப்பத்திற்கு சுற்றுவது போல).
  • பின்பு தாட்சியை (வாணலியை) அடுப்பில் வைத்து அதில் குழைத்து வைத்த மாக்கலவையை போடவும்.
  • தாட்சியில்(வாணலியில்) போட்ட மாக்கலவை அடிப்பிடிக்காமல் இருக்க கரண்டியால் இடைவிடாமல் நன்றாக கிளறிக் கொண்டிருக்கவும்.
  • இக்கலவை நன்றாக உதிர்ந்து மண்ணிறமான சிறு மணிகள்போல இருக்கும்போது முட்டைமா தயாராகி விடும்.
  • முட்டைமா தயாராகிய பின்பு இந்த முட்டைமா உள்ள தாட்சியை அடுப்பிலிருந்து இறக்கவும்.
  • அடுப்பிலிருந்து இறக்கிய தாட்சியில் இருக்கும் முட்டை மாவை ஒருபாத்திரத்தில் போட்டு நன்றாக ஆறவிடவும்.
  • முட்டை மா நன்றாக ஆறிய பின்பு இதை சுத்தமான போத்தலில் போட்டு காற்று போகாதவாறு நன்றாக இறுக்கி மூடிவைக்கவும்.
  • முட்டைமா சாப்பிட தேவைப்படும் போது முட்டைமா உள்ள போத்தலை எடுத்து அதன் மூடியை திறந்து தேவையான முட்டைமாவை எடுத்து சாப்பிடலாம்.

 

 

ரவ்வவ கேசரி –

 அவசர விருந்தாளி என்று குறைந்த நேரத்தில் செய்திட பல நேரங்களில் கைகொடுக்கும் சுலபமான இனிப்பு வகை உணவு.

ravai kesari 1

தேவையான பொருள்கள்:

ரவை – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
சர்க்கரை – 1 3/4 கப்
நெய் – 3/4 கப்
கேசரி கலர்
ஏலப்பொடி
முந்திரிப் பருப்பு
கிஸ்மிஸ்

ravai kesari 3

செய்முறை:

  • அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  • மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும்.
  • இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.
  • ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.
  • ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.
  • இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.
  • பொரித்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியில் பாதியைக் கலந்து கொள்ளவும்.

ravai kesari 2

* இறக்கிய கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ் முந்திரி தூவி, வில்லைகள் போடலாம். அல்லது விருந்துகளின் இறுதியில் dessert உணவு மாதிரி தருவதாக இருந்தால் இப்படிச் செய்யலாம்; ஒரு குழிக் கரண்டியில் நெய் தடவி, ஒவ்வொரு முறையும் ஒரு முந்திரி, சில கிஸ்மிஸ்களை அடியில் போட்டு, அந்தக் கரண்டியால் சூடான கேசரியை எடுத்து கப்பில் போட்டால் ஒரே அளவாகவும் மேல்ப்பகுதி அலங்கரித்தும் இருக்கும். 5, 6 தடவைக்கு ஒருமுறை தேவைப்பட்டால் கரண்டியில் சிறிது நெய் தடவினால் ஒட்டாமல் விழும்.

* கேசரிக்கு கிஸ்மிஸ் பழைய ஸ்டைல். ஒரு திருமணத்தில் டூட்டிஃப்ரூட்டியைப் பார்த்டேன். கிஸ்மிஸ் மாதிரி இடையில் புளிக்காமல் சுவையாக இருந்தது.

* கேசரிக்கு மிகக் குறைவாக இனிப்பு வேண்டுபவர்கள் பலர் ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கிறார்கள். அதிகம் தேவை என்று சிலர் 2 கப். நான் எப்பொழுதுமே நடுவில்  1 3/4 கப். வடஇந்தியர்கள் ஒரு கப் ரவைக்கு ஒரு கப் சர்க்கரை மட்டும் சேர்ப்பதைத் தான் தாங்க முடியவில்லை என்றால் அல்வா என்று சொல்லிவிட்டு அநியாயத்துக்கு ‘சூஜி கா அல்வா’ என்று கேசரியை நீட்டுகிற(அல்வா கொடுப்பது என்பது இதுதானா?) செயலை நெஞ்சு பொறுக்குதில்லையே. ) கேசரியில் சர்க்கரை அதிகமாகிவிட்டால் பாயசம் மாதிரி தளர்ந்தும், ஆறியதும் பாகு இறுகி நொசநொச என்றும் ஆகிவிடும். தவறுதலாக சர்க்கரை அதிகமானால்(எப்படி ஆகும்?) சிறிது கோதுமை மாவை நன்கு வறுத்துச் சேர்க்கவும்.

* பலருக்கு கேசரியில் பால் சேர்ப்பது பிடித்திருக்கிறது. எனக்கு பாலின் ஃப்ளேவர் இதில் வருவதில் விருப்பமில்லை. நான் சேர்க்கவில்லை. விரும்புபவர்கள் தண்ணீரைக் குறைத்துக் கொண்டு ஒரு கப் கெட்டியான பால் சேர்த்துக் கொள்ளலாம்.

# 2.

புதிதாகச் செய்பவர்கள், ரவை கட்டி தட்டிவிடும் என்று அஞ்சுபவர்கள், கேசரி பொலபொலவென உதிராக வரவேண்டும் என்று நினைப்பவர்கள், அந்தப் பதினைந்து நிமிட நேரம் கூட கவனிக்க நேரமில்லாமல் வேறு வேலை இருப்பவர்கள் கீழே சொல்லியுள்ள மாதிரியும் செய்யலாம்.

  • ஒரு கப் ரவையை 1/2 கப் நெய்யில் பொரித்த மாதிரி பச்சை வாசனை போகும்வரை வறுத்துக் கொள்ளவும்.
  • வறுத்த ரவையுடன் ஒரு கப் சூடான பால், கேசரி கலர், ஏலப்பொடியும் கலந்து வைக்கவும்.
  • குக்கர் உள்பாத்திரத்தில் தேவையான சர்க்கரையை 1 1/2 கப் தண்ணீரில் கலந்து, அடுப்பில் வைத்து, சர்க்கரை கரைந்ததும்(பாகு ஆகிவிட வேண்டாம்.) பால் சேர்த்த ரவையையும் சேர்த்துக் கலந்து, குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கிவிடலாம். மீதி நெய், வறுத்த முந்திரி இத்யாதிகளைக் கலந்து பரிமாறலாம். இந்த முறையில் ரைஸ் குக்கரிலும் செய்யலாம். கேசரி உதிர் உதிராக வரும். அளவு நிறைய செய்யும்போது இந்த முறை வசதியானதும் கூட.

Thanks : Jayashree Govindarajan


தேவையானப்பொருட்கள்:

ரவா – 1 கப்
அன்னாசிப்பழம் பொடியாக நறுக்கியது ‍- 1 கப்
சர்க்கரை – 2 கப்
நெய் – 4 அல்லது 6 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்ப‌ருப்பு ‍- சிறிது
காய்ந்த‌ திராட்சை – சிறிது
ஏல‌க்காய் பொடி – 1 டீஸ்பூன்
கேச‌ரி அல்ல‌து ம‌ஞ்ச‌ள் நிற‌ க‌ல‌ர் ‍- சிறிது

செய்முறை:

ஒரு வாண‌லியில் 2 டேபிள்ஸ்பூன் நெய்யை விட்டு, அதில் ர‌வாவைப் போட்டு வாச‌னை வ‌ரும் வ‌ரை வ‌றுத்து எடுத்து த‌னியாக‌ வைத்துக் கொள்ள‌வும்.

அதே வாண‌லியில் சிறிது நெய்யை விட்டு, முந்திரி, திராட்சை ஆகிய‌வற்றை‌யும் வ‌றுத்து எடுத்து வைத்துக் கொள்ள‌வும்.

அன்னாசிப்பழத் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். (மைக்ரோ அவனில் வைத்தும் வேக விடலாம்). சூடு ஆறியதும், மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

அடி கனமான ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை சிறு தீயில் வைத்து, ரவாவை கொஞ்சம் கொஞ்சமாகக் கொட்டிக் கை விடாமல் கிளறவும். ரவா எல்லா நீரையும் இழுத்துக் கொண்டு, நன்றாக வெந்துக் கெட்டியானதும், அதில் சர்க்கரை, அரைத்து வைத்துள்ள் அன்னாசிப்பழ விழுது ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறவும். கட்டி எதுவும் இல்லாமல், நன்றாகக் கிளறி, கேசரி அல்லது மஞ்சள் கலர், நெய் ஆகியவற்றைச் சேர்த்து மீண்டும் கிளறவும். கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடியைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

குறிப்பு: இத்துடன், இரண்டுத் துளி “அன்னாசிப்பழ எஸ்ஸென்ஸ்” சேர்த்தால், இன்னும் வாசனையாக இருக்கும். அன்னாசிப் பழம், மிகவும் இனிப்பாக இருந்தால், சர்க்கரையின் அளவைக் குறைத்துக் கொள்ளலாம்.

நன்றி: கமலா

அடுத்த பக்கம் »