அடடா எப்படியெல்லாம் இசையை திருடுகின்றார்கள்…! கீழே உள்ள இரண்டு வீடியோக்களையும் பாருங்கள்,,
சினிமா
ஒக்ரோபர் 15, 2014
திருடப்பட்ட கத்தி இசை! அம்பலமான உண்மை (வீடியோ இணைப்பு)
Posted by barthee under சினிமாபின்னூட்டமொன்றை இடுங்கள்
பிப்ரவரி 13, 2013
சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1972-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வசந்த மாளிகை. கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கினார். இந்த படம் டிஜிட்டல் கியூப்பில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீசாகிறது. தமிழகம் முழுவதும் 80 தியேட்டர்களில் மார்ச் 1-ந்தேதி திரையிடப்படுகிறது.
வசந்த மாளிகை பிரிண்ட்கள் ‘கியூப்’ தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டு உள்ளன. இதன்மூலம் அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் காட்சிகள் திரையிடப்படும். அத்துடன் ஒலி அமைப்புகள் துல்லியமாக கேட்கும் வகையில் டிஜிட்டல் தொழில் நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் செலவில் இப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.
சிவாஜி நடித்த படங்களில் வசந்த மாளிகை சிறந்த காதல் காவிய படைப்பாக கருதப்பட்டது. இப்படத்தில் இடம்பெறும் மயக்கம் என்ன உந்தன் மவுனம் என்ன, யாருக்காக இது யாருக்காக, இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன், கலைமகள் கைப்பொருளே, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன், குடிமகனே பெரும் குடிமகனே போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின.
இந்த படம் 13 இடங்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. மதுரை நியூ சினிமாவில் 200 நாட்களும், சென்னை சாந்தியில் 176 நாட்களும் ஓடியது.
திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மாயவரத்தில் நடந்த இதன் 100-வது நாள் விழாவில் சிவாஜி கணேசன், சுந்தரராஜன், சி.ஐ.டி.சகுந்தலா, குமாரி, பத்மினி ஆகியோர் ஒரே நாளில் பங்கேற்றனர். அப்போது இவ்வூர்களில் சிவாஜிக்கு வழிநெடுக ரசிகர்கள் திரண்டு அமோக வரவேற்பு அளித்தனர்.
கப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்று சிவாஜி ரிஸ்க் எடுத்து நடிக்காத இப்படம் வெற்றிகரமாக ஓடியது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது.
பிப்ரவரி 5, 2013
விஸ்வரூபம் ரிலீஸ் – கமல்ஹாசன் பேச்சு – முழு வீடியோ
Posted by barthee under சினிமாபின்னூட்டமொன்றை இடுங்கள்
திசெம்பர் 31, 2011
தமிழ் திரையுலகில் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நண்பன் திரைப்படத்தில் வரும் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
தமிழ் திரையுலகில் நண்பன் திரைப்படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், இலியானா மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். 2012 பொங்கலுக்கு நண்பன் திரைக்கு வர இருக்கிறது.
நண்பன் படத்தின் பாடல்கள் குறித்தும் படம் குறித்தும் சில தகவல்கள்:
* ஒரு பாடலுக்கு பாடகர்கள் அனைவரது வாய்களில் சரியான அளவு தண்ணீரை வைத்துக் கொண்டு ஹாரீஸ் ஜெயராஜ் பாட வைத்து இருக்கிறார்.
* படப்பிடிப்பு எப்போதுமே கலகலப்பாக நடந்ததற்கு காரணம் ஜீவா தான். ஷாட் ரெடி! என்றவுடன் அந்த கதாபாத்திரமாகவே ஆகிவிடுவாராம் ஜீவா. கலகலப்பில் விஜய்யை கூட ஜீவா விட்டு வைக்கவில்லை என்பது தான் இதில் சிறப்பான விஷயமாகும்.
* படக்குழுவினர் அனைவருமே கூறுவது இயக்குனர் ஷங்கருக்குள் ஒரு அற்புதமான நடிகர் இருக்கிறார் என்பது தான். எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் அதில் எப்படி நடிக்க வேண்டும் என்று அப்படியே நடித்து காட்டுவது ஷங்கரின் சிறப்பம்சமாகும்.
* படத்தின் விஜய்யின் பெயர் பஞ்சவன் பாரிவேலு, ஜீவாவின் பெயர் சேவற்கொடி செந்தில், ஸ்ரீகாந்தின் பெயர் வெங்கட்ராம கிருஷ்ணன், இலியானாவின் பெயர் ரியா, சத்யராஜின் பெயர் விருமாண்டி சந்தனம்.
* HEART-ல் BATTERY என்ற பாடலில் வரும் வித்தியாசமான இசை அனைத்துமே மக்களிடம் இருந்து பதிவு(RECORD) செய்து பாட்டில் இணைத்து இருக்கிறார்கள்.
* ஏ.ஆர்.ரஹ்மானிடம் அவர் அப்பா நீ பெரிய கிரிக்கட் வீரராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும், சச்சினிடம் அவரது அப்பா நீ பெரிய இசையமைப்பாளராக வர வேண்டும் என்று சொல்லி இருந்தாலும் என்ன நடந்து இருக்கும் சொல்லு என்பது போன்ற வசனங்கள் நண்பனில் இடம்பிடித்துள்ளது.
திசெம்பர் 30, 2011

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
இன்னுமா உலகம் இவங்கள நம்பிக்கிட்டிருக்கு?

திசெம்பர் 29, 2011
டைரக்டர் முருகதாஸ் காப்பி அடித்த இலங்கைப்பாடல் ?
Posted by barthee under சினிமாபின்னூட்டமொன்றை இடுங்கள்
7ம் அறிவு படத்தில் வரும் பாடல்காட்சி ஏற்கனவே இலங்கை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஒரு பாடல் காட்சி என இலங்கை நேயர் ஒருவர் சூழுரைத்தார். டைரக்கர் முருகதாஸ் இந்த பாடலைத்தான் காப்பி அடித்ததாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை நேயர் அனுப்பிவைத்த வீடியோ கீழே…(இந்தப்பாடல் காட்சி 7ம் அறிவு திரையிடும் திகதிக்கு ஒருமாதத்திற்கு முன்னராக பதிவேற்றப்பட்டுள்ளது!
முருகதாஸ் எவ்வாறு இந்த பாடல் காட்சி எடுத்தார் என்னும் வீடியோ காட்சி கீழே…
செப்ரெம்பர் 18, 2011
இணையத்தில் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் தளமான யூடியுப் தற்போது இன்னொரு புதிய சேவையை துவக்கி உள்ளது. Youtube Boxoffice என்ற புதிய பகுதியை துவக்கி உள்ளது இதன் மூலம் மாதம் ஒரு புதிய சூப்பர் ஹிட் பாலிவுட் முழு திரைப்படத்தையும் இலவசமாக காணலாம். தற்போது பாலிவுட் திரைப்படங்கள் மட்டும் இதில் காண்பிக்க படுகின்றன விரைவில் தென்னிந்திய திரைப்படங்களும் இதில் இடம் பெறலாம்.