நகைச்சுவை


செத்த ஆண் ஒருவர் உயிரோடு மீண்டு வந்து நேசத்துக்கு உரிய பெண்ணிடம் அதிரடியாக காதலை சொன்ன சினிமாப் பாணி அதிசயம் ரஷியாவில் இடம்பெற்று உள்ளது.

 இவர் உண்மையில் இறந்து இருக்கவில்லை. காதலை சொல்கின்றமைக்காக இறந்தவர் போல் நடித்து இருக்கின்றார். பயங்கரமான கார் விபத்து ஒன்றில் மாண்டு விட்டார் என்பது போன்ற சூழலை திட்டமிட்டு ஏற்படுத்தி இருந்தார். இதற்காக திரைப்பட இயக்குனரும், மேக் அப் கலைஞருமான ஒருவரின் உதவியை பெற்று இருந்தார்.

 இந்த செட் அப் எல்லாம் பெண்ணுக்கு தெரியாது. அன்புக்கு உரியவரை வழமையாக சந்திக்கின்ற அந்த இடத்துக்கு வந்து இருந்தார். ஆனால் விபத்தால் ஏற்பட்டு இருக்கக் கூடிய மரண காட்சியை அங்கு கண்டார். கார்கள் சேதம் அடைந்து காணப்பட்டன. அம்புலன்ஸ் வண்டிகள் அருகில் நின்றன. இவரின் அன்புக்கு உரியவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

 கார் விபத்தில் இவரின் அன்புக்கு உரியவர் செத்துக் கிடக்கின்றார் என்று முதலுதவிச் சிகிச்சையாளர் பெண்ணுக்கு சொன்னார். பெண் கதறி அழுது குழறினார். சோகத்தின் உச்சத்துக்கே போய் விட்டார்.

 உச்சக் கட்டத்தில் ஆணின் நடிப்பு முடிவுக்கு வந்தது. நேசத்துக்கு உரியவள் முன் திடீரென்று முன்னால் வந்து நின்றார்.

 ஆரம்பத்தில் பெண்ணுக்கு பேரதிர்ச்சி கலந்த கோபம். காதலனை கொலை செய்கின்ற அளவுக்கு இக்கோபம் வந்து இருந்தது.  பின் இருவரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள். காதலை சொன்னார் ஆண்.

 இப்பெண்ணின் காதலின் ஆழத்தை அறிய விரும்பியே இவ்வாறு செய்தார் என்று ஊடகங்களுக்கு ஆண் கூறினார்.

குழந்தை ஒன்று தன் பிஞ்சுக்கைகளை கொண்டு மேசைமீது தொங்கிக்கொண்டு தண்டா எடுப்பதைப் பாருங்கள்.!!!

 

மாப்பிள்ளை திமிற திமிற, இழுத்துவந்து வலு கட்டாயமாக கட்டிவைக்கும் ஒரு அபூர்வ திருமணம் இந்தியாவில் நடந்துள்ளது!

இத்தனைக்கும் பெண் ரெம்பவும் ஜாலியாக சிரித்தவண்ணம் இருக்கின்றார். மேற்கொண்டு நீங்களே பாருங்கள்…

கனடா தமிழ் பொண்ணு… கனடா தமிழ் பையன்கள்… கனடா தமிழ் இயக்குனர்… கனடா தமிழ் பாடலாசிரியர்… கனடா தமிழ் சினிமா… எல்லாமே இங்கு பார்க்கலாம்!!??!

நேயர் வசந்தன் சர்தார்ஜி ஜோக்குகள் கேட்டிருந்தார்.

அதற்கு முன்னர் ஒருவிடயம்… ஏன் இந்தமாதிரி முட்டாள் ஜோக்குகளை “சர்தார்ஜி ஜோக்குகள்” என்பார்கள் என்பதைப் பற்றியும் நாம் கொஞ்சம் பார்ப்போம்!

இந்தியா சுதந்திரம் கிடைப்பதற்கு முன் வெள்ளையர் ஆண்ட காலத்தில், வெள்ளையர்களுடன் முதல் முதலில் இந்த பஞ்சாப் மாநிலத்தார்தான் சண்டையை ஆரம்பித்தனர். அத்துடன் அவர்கள் அடிக்கடி வெள்ளையர்களுக்கு தொல்லையும் கொடுத்துக்கொண்டு இருந்தனர். இதனால் பல வழிகளில் இந்த பஞ்சாப் மாநிலத்தவர்களை பழிவாங்கினர் வெள்ளையர்கள். அந்த காலகட்டத்தில்தான் வெள்ளையர்களால் பல ஜோக்குகள் இயற்றப்பட்டு  அதில் பஞ்சாப் சர்தாஜிகளை சம்பத்தப்படுத்தி கிண்டல் பண்ணினார்கள்.

சர்தாஜிகளை இந்த வழியிலும் பழிவாங்கினார்கள் என்று வைப்போமே.

பள்ளிப்பருவத்தில் பல சர்தாஜி ஜோக்குகளை படித்து சிரித்து இருக்கின்றேன். பலவற்றை அப்போது நம்ம ஆளுக்கு சொல்லி விழுந்து விழுந்து சிரித்தும் உள்ளேன். ஆனால் அந்த ஜோக்குகளின் உள்னோக்கம் என்னவென்று ஆராய்ந்து பார்த்த பின்பு, இந்த மாதிரி ஜோக்குகளில் இருந்து நான் விடுபடவே விரும்பினேன். உண்மையான விடுதலை விரும்பிகளை, உழைப்பாளிகளை இப்படி ஆங்கிலேயர் கீழ்த்தரமாக கிண்டலடித்தார்கள் என நினைத்துப்பார்த்தால் விடுதலையை, உழைப்பை விரும்பும் எவரும் என் கருத்தை ஆமோதிப்பர்.

எனினும் அவர்களுக்கு கிடைத்த சாபம் போல் இந்த ஜோக்குகள் இன்னமும் இந்திய மக்கள் மத்தியிலேயே மிகப் பிரபலம் என்னும் போது,  மனவருத்தமாகத்தான் இருக்கின்றது.

நேயர்களே, இதனை ஜோக்காக பார்க்காமல் விடுதலையை கேட்டவர்களை எப்படியெல்லாம் கிண்டலடித்திருக்கின்றார்கள் என்ற கண்ணோட்டத்தில் பாருங்கள்…!

இதோ கீழே சில சர்தாஜி ஜோக்குகள்!

 

சர்தாஜி தன்னுடைய தோட்டக்காரனைப் பார்த்து “ஏன் இங்கே நிற்கிறாய், செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது தானே?

தோட்டக்காரன்: மழை பெய்கிறதே!

சர்தாஜி: அதனால் என்ன? குடை எடுத்துக் கொண்டு போய் நீரைப்பாச்சு

……………………………………………………………………………………..

ஒரு முறை பந்தா சிங் வேலையொன்றிற்கு விண்ணப்பப் படிவம் நிரப்பிக் கொண்டிருந்தார்.

எல்லாம் நிரப்பி முடிந்தவுடன் திடீரென்று கிழித்து எறிந்தார்.
பக்கத்தில் நின்ற கந்தா சிங் “ஏன்…. என்ன நடந்தது ? ” என்று கேட்டார்.

பந்தா சிங்கும் நான் டெல்கிக்குச் சென்று நிரப்பிக் கொள்கின்றேன் என்றார்.

“ஏன் அப்படி ? ” என்று கந்தா சிங் கேட்டார்.

Fill in the Capital என்று போட்டிருப்பதைக் கவனிக்காமல் நேரத்தை வேஸ்ட் பண்ணி விட்டேன் என்றாரே பார்க்கலாம்.

……………………………………………………………………………………………

நம்ம பந்தா சிங் புதிதாகக் கார் வாங்கிக் கொண்டு பஞ்சாப்பிலிருந்து டெல்கிக்குப் போனார். இரண்டாம் நாள் டெல்கியிலிருந்து மனைவிக்கு தொலைபேசினார்.

வந்த அலுவல் முடிந்து விட்டது. இன்னும் இரண்டு நாளில் வந்துவிடுவேன் என்றார்.

ஆனால் இரண்டு நாளில் அவர் வந்து சேரவில்லை. 5 ஆவது நாள் தான் வந்து சேர்ந்தார்.

ஏன் இவ்வளவு நாள் ஆகிவிட்டது என்று மனைவி கேட்டபோது ” என்ன செய்வது முன்னால் போகும்
போது 5 கியரை வைத்தவர்கள் பின்னால் வரும் போது ஒரே ஒரு கியரை வைத்து விட்டார்களே” என்றாரே பார்க்கலாம்.

………………………………………………………………………………………………….

ஒருமுறை நம்ம சர்தார் டி.வி. வாங்க ஒரு கடைக்கு சென்றார். கடை முழுவதையும் சுற்றி பார்த்துவிட்டு தனக்கு பிடித்த ஒரு டி.வியை காண்பித்து தனக்கு வேண்டுமென கேட்டார்.அதற்கு கடைக்காரர் பந்தா(சின்னா)சிங்கிடம் சர்தாருக்கு எல்லாம் நான் டி.வி விற்பதில்லை என்று சொல்லிவிட்டார் அதிர்ச்சியுடனும் ஆத்திரத்துடனும் வீடு திரும்பிய பந்தாசிங் எப்படியாவது அந்த டி-வியை வாங்கி விடுவது என்ற முடிவுடன் சிங்குகளுடைய சின்னமான தாடியையும் தலைப்பாகையையும் எடுத்துவிட்டு அதே கடைக்கு சென்று அதே டி.வியை கேட்டார்.அதற்கு கடைக்காரர் சிங்குகளுக்கு டி.வி. விற்பதில்லை என்று மறுத்துவிட்டார்.
சர்தார் சளைக்கவில்லை. அடுத்தநாள் மாறுவேடத்தில் தன்னை முற்றிலும் மாற்றிக்கொண்டு சென்று அதே டி.வியை கேட்டபோது கடைக்காரர் சர்தார்களுக்கு டி.வி விற்பதில்லை என்ற பழைய பதிலை சொன்னார். சர்தாருக்கு ஒரே ஆச்சரியம். கடைக்காரரிடம் கேட்டார் நான் சார்தார் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்?
அதற்கு கடைக்காரர் ரொம்ப சுலபம் ஒவ்வொரு முறையும் நீ காட்டிக் கேட்டது டி.வி அல்ல வாசிங்மிசின் என்றார்.

……………………………………………………………………………………………………

ஒரு முறை பந்தா சிங்குக்கு பணம் தேவையாக இருந்தது. தனது நண்பன் கந்தா சிங்கின் மகனைக் கடத்திச் சென்றார். பின்னர் ஒரு கடிதம் எழுதி அந்தப் பையனிடமே கொடுத்து அனுப்பினார்.

அதில் “உனது மகனை விடுவிக்க வேண்டுமென்றால் 10000 ரூபா கொடுத்து விடவும். என்று எழுதி தனது பெயரைப் போடாமல் ..இப்படிக்கு சர்தாஜி என்று எழுதியனுப்பினார்.

கடிதத்தைப் பார்த்த கந்தா சிங்குக்கு கோபமான கோபம். 10000 ரூபாவையும் கொடுத்து ஒரு கடிதமும் கொடுத்து விட்டார். அதில் ” என்ன இருந்தாலும் ஒரு சர்தாஜிக்கே ஒரு சர்தாஜி இப்படிச் செய்வது கொஞ்சமும் சரியில்லை ” என்று எழுதியிருந்தது…

……………………………………………………………………………………………………..

துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது. வந்திருந்த மூன்று பேருமே சர்தார்ஜிகள்தான். முதல் சர்தார்ஜி உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ”இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?” என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

சர்தார்ஜி சற்றும் தாமதிக்காமல் சொன்னார் – ”அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு. ஈஸியா பிடிச்சுடலாம் சார்…”

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ”இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?” என்று எகிறிவிட்டு, அடுத்த சர்தார்ஜியை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்… அதே கேள்வி!

”ஹா… இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!” என்றார் அந்த சர்தார்ஜி. அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது சர்தார்ஜி வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ”அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!” என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

”என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?” என்று கேட்டார் அதிகாரி.

சர்தார்ஜி சொன்னார் – ”இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய முடியாது. அவனுக்கு ஒரு காது… ஒரு கண்ணுதானே இருக்கு!’

…………………………………………………………………………………………………

Toronto நேயர் ராஜு சோமசுந்தரம் அவர்கள் அனுப்பிவைத்த இந்த நகைச்சுவைப்படத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம்!

Hand free Phone க்கு இது ஒரு நல்ல யோசனைதான்! Bluetooth வாங்கவேண்டிய அவசியமே இல்லை.

வெள்ளை இன மக்கள் எம் தமிழ்ப் பாட்டுக்கு   ஒரு   Remix   அதுவும்  ஆங்கிலத்தில் பாடல் பாடியுள்ளார்கள்.

 பிரபுதேவாவின் இந்த பாடல் காட்சியை ஒருதரம் பாருங்கள். அதன்பின் கீழே உள்ள ஆங்கில பாடலையும் பாருங்கள்.

எங்கள் தமிழ் பாடல்காட்சி மாதிரித்தான் அவர்களும் பாடி ஆடியுள்ளனர். ஆனால் ஏன் அவர்கள் ஆட எமக்கு சிரிப்பு வருகின்றது?

ஒருவேளை தமிழ்ப்பாட்டை அதே உருவ ஒற்றுமை இல்லாதவர்கள் பாடி ஆடும் போது அப்படி தோன்றுகின்றதா? அப்படியானால், தற்போது நம் தமிழ் இளைய சமுதாயம் பல ஆங்கிலப் பாடல்களை ஆடியும், பாடியும் வருகின்றனரே…!

அப்போ இதே கதிதானா அவர்களுக்கும்?

« முன்னைய பக்கம்அடுத்த பக்கம் »