பாடல் வரிகள்


pretty-pink-flower-thபொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி

pretty-pink-flower-thகண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினாய்

pretty-pink-flower-thபொய் ஒன்றை ஒப்பித்தாய்
ஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான்
pretty-pink-flower-thகனவெங்கும் தித்தித்தாய்

(பொய் சொல்லக்கூடாது காதலி)

pretty-pink-flower-thஅழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத் தோண்டி பதியம் போட்டுக் கொண்டேன்
கண்டவுடன் எனையே தின்றதடி விழியே
pretty-pink-flower-thஎன்னைவிட்டுத் தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழிச்சுடரே
நட்சத்திரப் பயிரே
pretty-pink-flower-thரெக்கை கட்டி வா நிலவே

பொய் ஒன்றை ஒப்பித்தாய்
pretty-pink-flower-thஐயையோ தப்பித்தாய்
கண்மூடித் தேடத்தான்
கனவெங்கும் தித்தித்தாய்

pretty-pink-flower-th(பொய் சொல்லக்கூடாது காதலி)

ஒரு மழை என்பது ஒரு துளிதானா கண்ணே
pretty-pink-flower-thநீ ஒற்றைத் துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டே அழகே
pretty-pink-flower-thநெற்றிமுடி வழியே தப்பிவந்தேன் வெளியே
அடி பொத்திவைத்த புயலே
தத்தளிக்கும் திமிரே
pretty-pink-flower-thவெட்கம் விட்டு வா நிலவே

நில் என்று கண்டித்தாய்
pretty-pink-flower-thஉள் சென்று தண்டித்தாய்
சொல் என்று கெஞ்சத்தான்
சொல்லாமல் வஞ்சித்தாய்

pretty-pink-flower-th(பொய் சொல்லக்கூடாது காதலி)

ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்

பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்

ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்

பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்

ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!

பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் – கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்

படம்: மூன்று முடிச்சு
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன்+வாணிஜெயராம்

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நானுந்தன் பூமாலை .. ஓ..ஓ..
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

கங்கை வெள்ளம் பாய்ம்போது கரைகள் என்ன வேலியோ
ஆவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாற கூடுமோ
மனங்களின் நிறம் பார்த்த காதல்
முகங்களின் நிறம் பார்க்குமோ
நீ கொண்டு வா காதல் வரம்
பூத்தூவுமே பன்னீர் மரம்
சூடான கனவுகள் தன்னோடு தள்ளாட
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே

ஆ..ஆ..ஆ…
ஆ…ஆ..ஆ…
பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தனை மீறுமே
காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே
வரையரைகளை மாற்றும்போது
தலைமுறைகளும் மாறுமே
என்றும் உந்தன் நெஞ்சோரமே
அன்பே உந்தன் சஞ்சாரமே
கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக
வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை
இலக்கணங்கள் இதற்கு இல்லை
நானுந்தன் பூமாலை .. ஓ..ஓ..
லாலா லலலல லாலா லாலால லா…

கோரமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று அலையில் வீழ்ந்து போனதே
இசையும் போனது திமிரும் போனது
தனிமை தீயிலே வாடினேன்
நிழலும் போனது நிஜமும் போனது
எனக்குள் எனையே தேடினேன்

கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ
நினைவே நினைவே கலைவதேனோ
எனது உலகம் உரைவதேனோ

கண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே
கடவுளும் பெண் இதயமும்
இருக்குதா அட இல்லையா

ஓ… ஓ…
நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே
காற்றில் எங்கும் தேடினேன்
பேசி போன வார்த்தையை

இது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா

கனவே கனவே…
கரங்கள் ரணமாய்…
நினைவே நினைவே கலைவதேனோ
எனது உலகம் உரைவதேனோ

எனக்கு ஒரு காதலி கிடைத்து, அவளிடம் இப்படி பாடி- அல்லது எழுதி….

இப்படி கற்பனையை வளர்க்கும் பாடல்கள்.

பாடல்களுக்காகவே காதலிக்கத்தோன்றும்.  வரிக்கு வரி மனப்பாடம் செய்து வைத்த பாடல் இது.

ம்… ஆனால் அந்த வேளை ஒருத்திக்கும் அந்தப் பாக்கியம் கிடைக்கவில்லை!

ஹி…ஹி…ஹி

அழகே அழகு.. தேவதை…
ஆயிரம் பாவலர் எழுதும் காவியம்

கூந்தல் வண்ணம் மேகம் போல
குளிர்ந்து நின்றது
கொஞ்சுகின்ற செவிகள் இரண்டும்
கேள்வி ஆனது
பொன்முகம் தாமரை
பூக்களே கண்களோ
மன கண்கள் சொல்லும் பொன்னோவியம்

(அழகே அழகு.. தேவதை…)

சிப்பி போல இதழ்கள் ரெண்டும்
மின்னுகின்றன
சேர்ந்த பல்லின் வரிசையாவும்
முல்லை போன்றன
மூங்கிலே தோள்களோ
தேன்குழல் விரல்களோ
ஒரு அங்கம் கைகள் அறியாதது

(அழகே அழகு.. தேவதை…)

பூ உலாவும் கொடியை போல
இடையை காண்கிறேன்
போக போக வாழை போல
அழகை காண்கிறேன்
மாவிலை பாதமோ
மங்கை நீ வேதமோ
இந்த மண்ணில் இது போல் பெண்ணில்லயே

(அழகே அழகு.. தேவதை…)

ஆண்:
கண்மணி
அன்போடு காதலன்
நான் நான் எழுதும்
லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி

பெண்:
கண்மணி
அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே

ஆண்:
பாட்டாவே படிச்சிட்டியா?
அப்போ நானும்
ம் ………..
மொதல்ல கண்மணி சொன்னேல்ல
இங்க பொன்மணி போட்டுக்க.
பொன்மணி
உன் வீட்டுல சௌக்கியமா
நான் இங்க சௌக்கியம்

பெண்:
பொன்மணி
உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே

ஆண் :
உன்னை நெனச்சி பாக்கும் போது
கவிதை மனசுல அருவி மாதிரி கொட்டுது
ஆனா
அத எழுதணும்னு உட்கார்ந்தா
இந்த எழுத்துதான் வார்த்த

பெண்:
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது

ஆண்:
அதான் அதான்…..

பெண்:
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது

ஆண்:
அதே தான் பிரமாதம் கவிதை படி…..

பெண்:
கண்மணி
அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி
உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது….
ஓஹோ…. ஓஹோ….

கண்மணி
அன்போடு காதலன்
நான் எழுதும் கடிதமே
பொன்மணி
உன் வீட்டில் சௌக்கியமா
நான் இங்கு சௌக்கியமே
உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை கொட்டுது
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது
ஒஹோ….ஒஹோ…

ஆண்:
ம்……
எனக்குண்டான காயம்
அது தன்னால ஆறிடும்
அது என்னவோ தெரியல என்ன மாயமோ தெரியல
எனக்கு ஒண்ணுமே ஆவறதில்லை
இதுவும் எழுதிக்கோ
நடுவுல நடுவுல மானே! தேனே! பொன் மானே!
எல்லாம் போட்டுக்க
எனக்கு என்ன காயம்னாலும்
என் உடம்பு தாங்கிடும்
உன் உடம்பு தாங்குமா?
தாங்காது
அபிராமி….அபிராமி… அபிராமி….

பெண்:
அதையும் எழுதணுமா?

ஆண்:
இது காதல்!
என் காதல் என்னன்னு சொல்லாம
ஏங்க ஏங்க அழுகையா வருது
ஆனா நான் அழுது
என் சோகம் உன்னை தாக்கிடுமோ
அப்படின்னு நினைக்கும் போது
வர்ற அழுகை கூட நின்னுடுது ஹா! ஹா!
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக் காதல் அல்ல
அதையும் தாண்டி
அதையும் தாண்டி
புனிதமானது

பெண்:
உண்டான காயம் இங்கு
தன்னாலே ஆறிப்போன
மாயமென்ன பொன் மானே… பொன் மானே….
என்ன காயம் ஆன போதும்
என் மேனி தாங்கிக் கொள்ளும்
உந்தன் மேனி தாங்காது செந்தேனே…..
எந்தன் காதல் என்னெவென்று
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்
எண்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள
இது மனிதக்காதல் அல்ல
அதையும் தாண்டி புனிதமானது

ஆண்:
அபிராமியே….
தாலாட்டும் சாமியே….
நான் தானே தெரியுமா
சிவகாமியே…..
சிவனில் நீயும் பாதியே….
அதுவும் உனக்குப் புரியுமா

பெண்:
சுப லாலி லாலியே லாலி லாலியே…
அபிராமி லாலியே லாலி லாலியே….

என் ப்யுசும் போச்சு
என் ப்யுசும் போச்சு
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்லக் கூடாது

என் ப்யுசும் போச்சு
என் ப்யுசும் போச்சு
உன்ன என்ன தானே கண்பியுசும் ஆச்சு
பீல் பண்ணிட்டே
எம் சைஸில் இருந்த என்னுடைய ஹார்ட்டு
டபுள் எக்ஸ் எல் ஆகா லவ் பண்ணிட்ட

முடியாதுன்னு ..
முடியாதுன்னு சொல்ல முடியாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல கூடாது மை பேபி
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்லக் கூடாது

உன்ன நிலவுன்னு ரியல்லா விட்டேன்
உலகழகின்னு போய்ய சொன்னேன்
அங்க இங்க என தொடவா செஞ்சேன்
லவ் மீ டார்லிங்
கவிதை கிவிதை என பிலிம் மா போட்டேன்
அவல இவள என கதையா விட்டேன்
உயிரை கிற எனு எத நான் சொன்னேன்
லவ் மீ டார்லிங்

ராமன் நானு நானும் சொல்ல மாட்டேன்
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன்

முடியாதுன்னு …

அடி உன்ன என்ன டேடிங்ஆ கூப்டேன்
மிட் இன்சுல மீட்டிங்கா கேட்டேன்
தண்ணி போடுற பார்டிகா கூப்டேன்
லவ் தான் கேட்டேன்
வீக் எண்டுல வீட்டுக்க கூப்டேன்
ஒரு மாதிரி உன்னைய பாத்தேன்
ரெண்டு பேருல ரூம்மா போட்டேன்
லவ் தான் கேட்டேன்
லவ் வா சொல்லு சொல்லு இப்பதானே
சொன்னதெல்லாம் செயலாம் அப்புறம் தானே

முடியாதுன்னு …
முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு
சொல்லாம போக முடியலையே
முடியாதுன்னு சொல்ல முடியலையே ஐ லவ் யு
சொல்லாம போக முடியலையே
உன்னாலே ஹார்ட்டும் சுருங்கிப் போச்சே
லவ் பண்ண ஏனோ ஏங்கிடுச்சே
மைன்ட் வாய்ஸ்ஸ கேளு காதல் சொன்ன நானு
உன் பேர சொல்லி துடிச்சிருச்சே

முடியாதுன்னு சொல்ல முடியலையே…!

அடுத்த பக்கம் »