பிறந்தநாள்


(பிறப்பு 7 ஏப்ரல் 1935) தமிழ்த் திரைப்படங்களில் பணியாற்றிய திரைப்பட இயக்குனர் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 75க்கும் கூடுதலானத் திரைப்படங்களை இயக்கி உள்ளார். தமிழ்த் திரையுலகில் வெற்றி நாட்டிய ஒருசில வணிகநோக்கு இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

துவக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் கமலஹாசன் படங்களை இயக்கி வந்தார். 1970களின் பிற்பகுதிகளில் இவருக்கும் ரஜனிகாந்த்திற்கும் ஏற்பட்ட தொழில்முறை உறவு பலப்பட்டு 25 திரைப்படங்களை இருவரும் இணைந்து உருவாக்கினர். ரஜனியின் திரைவாழ்வை வடிவமைத்ததிலும் அவரை வணிக அளவில் பெரும் வெற்றி நாயகராக மாற்றியதிலும் இவருக்குப் பெரும் பங்கிருந்தது. இவர் இரு தென்மண்டல பிலிம்பேர் விருதுகளையும் தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதையும் பெற்றுள்ளார்.

இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி. இவருடைய தந்தை இராம.சுப்பையா, தாயார் விசாலாட்சி. எஸ்.பி.முத்துராமனுக்கு செல்வமணி, சுவாமிநாதன், சுபவீரபாண்டியன் ஆகிய 3 தம்பிகளும், கனகம் என்கிற ஒரே தங்கையும் உண்டு.

தேவகோட்டை டிபிரிட்டோ உயர்நிலைப்பள்ளியில் 9-வது வகுப்பு படிக்கும்போது தனது பள்ளியில் நாடகங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் எஸ்.பி.முத்துராமன் நடத்தினார். அவரது கலை ஆர்வத்திற்கு பாதிரியார் மச்சோடோ ஊக்கமளித்தார்.

காரைக்குடி சண்முகவிலாஸ் தியேட்டரில் டி.கே.எஸ்.நாடகக் குழுவினரின் நாடகத்தைப் பார்க்க தனது தந்தையுடன் எஸ்.பி.முத்துராமன் சென்றார். நாடகத்தைப் பார்க்க, பார்க்க கலைத்துறை மீது அவருக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.

1952-ம் ஆண்டு கருணாநிதியின் சிறப்பான வசனத்தில், சிவாஜிகணேசன் அற்புதமாக நடித்த பராசக்தியை பார்த்த எஸ்.பி.முத்துராமன், “இனி நம் வாழ்க்கை திரையுலகம்தான்” என்று முடிவு செய்தார். அதை பெற்றோரிடமும் தெரிவித்தார். அவர்களும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

எஸ்.எஸ்.எல்.சி முடித்ததும் சென்னை புறப்பட்டார், முத்துராமன். கண்ணதாசனின் தென்றல் பத்திரிகையில் பணிபுரிய, முத்துராமனை அவரது தந்தையே சேர்த்துவிட்டார். பத்திரிகையில் பணிபுரிந்தாலும் சினிமாவில் சேரவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக் கொண்டே போனது.

இதை புரிந்து கொண்ட முத்துராமனின் தந்தை, தனது மகனை ஏவி.எம். புரொடக்ஷனில் சேர்த்துவிட்டார். ஏவி.மெய்யப்ப செட்டியார், முத்துராமனை அழைத்து எடிட்டிங் துறையில் பணியாற்ற அனுப்பி வைத்தார்.

1956-ம் ஆண்டு ஏவி.எம்.மில் சேர்ந்த முத்துராமனுக்கு எடிட்டர் சூரியா, இயக்குனர் கே.சங்கர் ஆகியோர் தொழில் கற்றுக்கொடுத்தனர். மெய்யப்ப செட்டியாரின் மகன்கள் முருகன், குமரன், சரவணன், மருமகன் ஏ.வீரப்பன் ஆகியோர் இணைந்து தயாரித்த களத்தூர் கண்ணம்மா படத்தில் உதவி இயக்குனராக எஸ்.பி. முத்துராமன் பணிபுரிந்தார். இந்த படத்தை டி.பிரகாஷ்ராவ், ஏ.பீம்சிங் ஆகியோர் இயக்கினார்கள். கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர்கள் கிருஷ்ணன்-பஞ்சு, யோகானந்த், கிருஷ்ணன் நாயர், புட்டண்ணா கனகல் போன்றவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். அதன்பின்னர் இயக்குனர் ஏ.சி.திருலோகசந்தரிடம் உதவி இயக்குனராக முத்துராமனை ஏவி.எம்.சரவணன் சேர்த்துவிட்டார்.

இதுபற்றி எஸ்.பி.முத்துராமன் கூறும்போது, “ஏ.சி.திருலோகசந்தர் ஏவி.எம்.ஸ்டூடியோவுக்காக இயக்கிய பல படங்களில் நான் உதவி இயக்குனராக இருந்தேன். அவரை என் குருவாக நினைத்து அவரிடமிருந்து தொழில் கற்றுக்கொண்டேன்” என்றார்.

வி.சி.குகநாதன் தயாரிப்பில் ஜெய்சங்கர், முத்துராமன் நடித்த கனிமுத்துபாப்பா என்ற படத்தை இயக்க எஸ்.பி.முத்துராமனுக்கு வாய்ப்பு கிடைத்தது. படம் வெளிவந்து 75 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 1973 முதல் 1975-ம் ஆண்டு வரை வி.சி.குகநாதன் தயாரிப்பில் பெத்த மனம் பித்து, காசி யாத்திரை, அன்புத்தங்கை, தெய்வக்குழந்தை ஆகிய படங்களை முத்துராமன் இயக்கினார்.

தொடர்ந்து எங்கம்மா சபதம் என்ற படத்தையும், முத்துராமன் – சுஜாதா நடித்த மயங்குகிறாள் ஒரு மாது என்ற படத்தை இயக்கினார். இந்த படம் சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டது. கல்லூரி வாழ்க்கையில் தவறி விழுந்த கதாநாயகியை (சுஜாதா), கதாநாயகன் (முத்துராமன்) ஏற்றுக்கொள்வார். சுஜாதாவை, தேங்காய் சீனிவாசன் பிளாக்மெயில் செய்து பணம் பறிப்பார். கடைசியில், “எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்டுதான் நான் திருமணம் செய்தேன்” என்று முத்துராமன் அறிவிப்பார். எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்த இப்படம் 100 நாட்கள் ஓடியது.

மயங்குகிறாள் ஒரு மாது திரைப்படத்தை கீழே காணலாம்.

Advertisements

loonapix_1361901360247185340

Ajax – Canadaவில் வசிக்கும் கார்த்திக் – லாவன்யா

தம்பதிகளின் செல்வப் புதல்வி ஸ்ரேயா

இன்று (27.02.2014) தனது பிறந்த நாளை

அண்ணன் வினித, தங்கை  அசானி ஆகியோருடன்  கொண்டாடுகின்றார்.

இவரை உற்றார் உறவினர்கள் அனைவரும்,

சகல செளபாக்கியங்களும் பெற்று

நீடூழி காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்!

ஸ்ரேயாவிற்காக ஒரு இனிய பாடல்:

 

OTTAWAவில் வசிக்கும் துரைரெத்தினம் நளாயினி தம்பதிகளின் புதல்வி ஆர்த்திகாவிற்கு இனிய பிறந்ததின வாழ்த்துக்கள்!

 arthi

“விஷயம் ஏதும் தெரியவில்லை என்றால்
விசுக்கென்று உன்னைக் கேட்பேன்

ஓரு நிமிடமும் சுணங்காமல்
உடனேயே சொல்லிவிடுவாய்….

நினைத்ததைப் பட்டென்று உடைக்க, நாலும் பகிர்ந்துகொள்ள,
உள்ள சுமையை இறக்கிவைக்க உத்த துணையாய் நீயிருக்க…..

வழி தெரியாமல் நான் முழிக்க, வளவளவென திட்டாமல்
வழித்துணையாய் நீ வந்தாய்…

ஊருக்கெல்லாம் சேதி சொல்ல உன் உதவி கேட்டிருக்கின்றேன்,
ஒருநாளும் சலிக்காம ஓடி ஓடி செஞ்சிடுவாய்….

உனக்கிப்போ ஒரு வாழ்த்து…. உன் பிறந்தநாள் வாழ்த்து!”

என்ன என் ஆத்துக்காரிக்குத்தான் பிறந்த நாள் என்று நினைத்துவிட்டீர்களா?

அய்யோ அது இல்லை….

இன்னும் புரியவில்லையா…?

Google இன்று தனது 15வது பிறந்ததினத்தை கொண்டாடுகின்றது.

September 27

Happy Birthday Google

SS

 

நோர்வேயில் வசிக்கும்  

திரு.நிக்ஸன் திருமதி.மதுமதி தம்பதிகளின்

செல்வப் புதல்வி கஸ்த்தூரிக்கு

இன்று இனிய பிறந்த நாள்.

இன்று பிறந்தநாளை காணும் கஸ்தூரியை,

அப்பா, அம்மா, சகோதரன் நிதர்சன், சகோதரி திவ்வியா,

மற்றும் உறவினர், நண்பர்கள் ஆகியோர்

பல் கலைகளையும் கற்று,

பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

இதோ கஸ்த்தூரியின் பிறந்தநாளிற்காக அவரின் விருப்பப்பாடல்

bd

t

கனடா – மார்க்கத்தில் வசிக்கும் திரு.கேதீஸ்வரன் திருமதி.கிருஜாந்தினி தம்பதிகளின் செல்வப் புதல்வி செல்வி Tiara வுக்கு இன்று இனிய பிறந்தநாள்.  Tiaraவை அண்ணா தேசான், அப்பபா டாக்டர்.பாலகிருஸ்னன், அப்பாச்சி நிர்மலாதேவி, அம்மப்பா சிவராஜா, அம்மமா பவாணி மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவரும் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.

tiara

திரு.நிக்ஸன் திருமதி.மதுமதி அவர்களின்
 புதல்வி திவ்யா தனது 5வது பிறந்ததினத்தை
 நோர்வேயில் வெகு சிறபாக கொண்டாடுகின்றார். 
இவரை அக்கா கஸ்த்தூரி அண்ணா நிதர்ஸன் 
ஆகியோன் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றனர்.
திவ்யாவின் பிறந்த தினத்திற்காக ஒரு இனிய பாடல்

அடுத்த பக்கம் »