மூவி/வீடியோ


நீங்கள் காதலித்து கல்யாணம் பணியவர்களா?

உங்களுக்குத்தான் இந்த வீடியோ…

நீங்கள் காதலிக்கின்றீர்களா கல்யாணம் பண்ண…?

உங்களுக்கும்தான் இந்த வீடியோ…

அருமையான வரிகள்

இனிமையான குரல்

மென்மையான இசை

காதுகள் களவு போகாமல் பார்த்து கொள்ளுங்கள்

உலக அமைதியை வலியுறுத்தி 96 மொழிகளில் சிலம்பரசன்  பாடிய பாடல் இது வரை 3.5 இலட்சம் ஹிட்டுகளை பெற்றுள்ளது.

தமிழ் திரையுலகில் சிம்பு – தனுஷ் உறவு பிரசித்தி  பெற்றது. ஆங்கில புலமை இல்லாத தனுஷ் தனக்கு தெரிந்த ஒரு சில ஆங்கில வார்த்தைகளை  கொண்டு ஒரு பாடலை பாட அது கொலவெறி கணக்காய் ஹிட் ஆகி பல மொழிகளில் மொழியாக்கம்  செய்யப்பட்டு பிரதமர் விருந்து கொடுக்கும் அளவுக்கு பிரசித்தி பெற்று விட்டது.

 இச்சூழலில் உலக அமைதிக்காக இசை ஆல்பம் ஒன்றை தயாரித்துள்ளார் சிலம்பரசன். காதலுக்கு மொழி இல்லை என்று கூறிய சிலம்பரசன் 96 மொழிகளில் காதல் எனும் வார்த்தையை  பயன்படுத்தி இப்பாடலை பாடியுள்ளார்.

மனித குலத்துக்கு இப்பாடலை  அர்ப்பணிப்பதாக கூறிய சிம்பு, மேலும் இரண்டு சர்வதேச பாப் பாடகர்களை பயன்படுத்தி  இப்பாடலை மெருகேற்ற போவதாகவும் கூறியுள்ளார். சோனி மியூசிக் தயாரித்துள்ள  இப்பாடலில் டிரம்ஸ் சிவமணி, தரணி, ராம்ஜி உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின்  பங்களிப்பும் உண்டு.

தெய்வாதீனமாக உயிர் தப்பியவர் ஒருவர், அவரது நண்பன் ஆகியோர் தம் புது மோட்டார் சைக்கிளை படம் எடுத்துக்கொண்டு இருந்தபோது அவ்விடத்தில் நடந்த எதிர்பாராத விபத்தை தத்தூருபமாய் படம் பிடித்துள்ளனர். இதில் மயிரிழையில் நபர் உயிர்தப்பியுள்ளார்.

எழுபதுகளில் மிகப்பிரபலமாக இருந்த பொப்பிசை BonyM. கொஞ்சம் நாங்கள் நாகரீகமானவர் என காட்டிக்கொள்ள இந்த BonyM பாடல்கள் அன்றைய மக்களிடத்தில் முனு முனுக்கப் பட்டதுடன், பிறந்தநாள்வீடுகள், கல்யாணவீடுகள், தேனீர் கடை… இப்படி பல இடங்களில் இப்பாடல்கள் சக்கை போடு போட்டது.

ஒருவர் தம் ரேடியோவில் எவ்வளவு சத்தம் வரும் என சோதிக்கும் அளவிற்கு இப்பாடல்கள் அலற அலற பாடியது இத்தனை  வருடம்  கழித்தும்  இன்னமும் காதுகளில் ஒலிக்கின்றது.

தமிழ் சினிமா பாடல் உட்பட பல வேற்று மொழி சினிமாக்களும் இந்த BonyM பாடல்களை அனியாயத்துக்கு காப்பி அடித்து தம்மை பிரபலப்படுத்திக் கொண்டனர். இப்படி தம்பாடலை காப்பி அடிப்பது பற்றி MonyM கண்டுகொள்ளவே இல்லை என்பது இன்னமும் அதிசயந்தான்.

மேற்கத்திய இசையை பட்டி தொட்டிவரை கொண்டுசென்ற இந்த BonyM பாடல் தற்போது இந்தியர் எப்படி பாடி அசத்தியுள்ளனர் என் இங்கு பாருங்கள்!

இதோ அந்த நாள் ஞாபகங்களை மீட்க நிஜ BonyM பாடல்கள் சில

அடுத்த பக்கம் »