வரலாற்றில் இன்று


நிகழ்வுகள்

 • 1655 – டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்.
 • 1807 – அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது.
 • 1857 – பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.
 • 1954 – முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12″ திரையளவு, விலை: $1,000).
 • 1954 – இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தார்.
 • 1957 – மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, மற்றும் லக்சம்பேர்க் ஆகியன இணைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.
 • 1975 – சவுதி மன்னர் ஃபைசால் தனது மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
  1990 – நியூயோர்க் நகரில் சட்டமுரணான சமூக விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 87 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1992 – சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.

பிறப்புக்கள்

 • 1914 – நோர்மன் போர்லாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர், (இ. 2009)

இறப்புக்கள்

 • 2014 – தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர் (பி. 1925)

இன்று சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் இறந்தநாள் ஆகும். தமிழ் கருநாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகரும் ஆவார். பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள். பிறப்பிடம்: சீர்காழி, ஆரம்பக் கல்வி: வாணிவிலாஸ் பாடசாலை, சீர்காழி.

திரைப்படத்துக்காக பாடிய முதல்பாடல்: 1953 இல் பொன்வயல் என்ற படத்துக்காக சிரிப்புத் தான் வருகுதைய்யா எனத்தொடங்கும் பாடல்,ஆனால் அந்த பாடலுக்கு முன்பே ஜெமினி நிறுவனம் தயாரித்த ஔவையார் திரைப்படத்திற்காக ஆத்திச்சூடியை பாடினார். திரைப்படத்தில் சீர்காழியார் பெயர் வெளியிடப்படவில்லை.

இளம் வயதில் நடிகராக பணியாற்றிய நிறுவனங்கள்: தேவி நாடக சபா, பாய்ஸ் கம்பெனி

இசைக்கல்வி: சென்னை இசைக்கல்லூரி இசை வாழ்வின் ஆரம்பத்தில் பெற்ற பட்டங்கள்: இசைமணி, சங்கித வித்வான்

நிகழ்வுகள்

 • 1882 – காசநோயை உருவாக்கும் நோய்க்கிருமியைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக ராபர்ட் கோக் அறிவித்தார்.
 • 1944 – ரோமில் ஜெர்மனியப் படைகள் 335 இத்தாலியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.
 • 1965 – நாசாவின் ரேஞ்சர் 9 விண்கலம், சந்திரனில் மோதும் முன்னர் சந்திரனின் புகைப்படங்களை வீடுகளில் உள்ள தொலைக்காட்சிகளில் பார்க்கக்கூடிய படங்களாக மாற்றி பூமிகு அனுப்பியது.

பிறப்புக்கள்

 • 1776 – முத்துசுவாமி தீட்சிதர், இசை மும்மூர்த்திகளில் ஒருவர். (இ. 1835)
 • 1923 – டி. எம். சௌந்தரராஜன், பின்னணிப் பாடகர்
 • 1936 – டேவிட் சசூக்கி, கனேடிய அறிவியலாளர்
 • 1949 – ரணில் விக்கிரமசிங்க, இலங்கை அரசியல்வாதி, 13வது பிரதமர்

இறப்புக்கள்

 • 1603 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் (பி. 1533)
 • 1988 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், திரையிசைப் பாடகர் (பி. 1933)

1876 ஆம் ஆண்டு உலகின் முதல் தொலைபேசி பேசியது பெல் அவருடைய உதவியாளர் வாட்சன் என்பவரிடம் பேசினார். அவர் முதலில் தொலைபேசியில் பேசிய சொற்றொடர் ” வாட்சன் இங்கே வாருங்கள். உங்களைக் காண வேண்டும்.”(Watson, come here, I want to see you)என்பதுதான்.இந்த சொற்களை வாட்சனால் தெளிவாகக் கேட்க முடிந்தது. ஆனால் பெல் கண்டுபிடித்த தொலைபேசியைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை அதனால் அவர் மிகவும் சோர்வடைந்தார்.
பிலெடெல்பியாவில் நடைபெற்ற ஒரு கண்காட்சியில் தனது தொலைபேசியைப் பார்வைக்கு வைத்தார்.
அங்கு வந்த பிரேசில் நாட்டு மன்னர் அதை வியப்போடு எடுத்துப் பயன்படுத்திய பின்னர் தான் தொலைபேசியின் பெருமை எங்கும் பரவியது. அமெரிக்காவில் உள்ள தனது மாமனாரின் உதவியுடன் 1876 மார்ச்சு 7 ஆம் தேதி தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்றார்.

1902 – அசையும் படம்பிடிகருவியை தோமஸ் எடிசன் கண்டுபிடிக்கவில்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது

1977 – யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

மார்ச் 19 கிரிகோரியன் ஆண்டின் 78ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 287 நாட்கள் உள்ளன

 • 1915 – புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை.
 • 1918 – நேர வலயங்களை ஐக்கிய அமெரிக்க காங்கிரஸ் நிறுவி பகலொளி சேமிப்பு நேரத்தை அங்கீகரித்தது.
 • 1972 – இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
 • 1982 – போக்லாந்து போர்: ஆர்ஜெண்டீனியர்கள் தெற்கு ஜோர்ஜியா தீவில் தரையிறங்கினர்.
 • 1988 – இந்திய அரசிடம் நீதி கோரி உண்ணா நோன்புப் போராட்டத்தை அன்னை பூபதி தொடங்கினார். நீதி வழங்காத நிலையில் ஏப்ரல் 19 இல் சாவைத் தழுவினார்.

பிறப்புக்கள்

 • 1984 – தனுஸ்ரீ தத்தா, இந்திய நடிகை

இறப்புக்கள்

 • 2008 – ரகுவரன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர் (பி. 1948)

மார்ச் 12 (March 12) கிரிகோரியன் ஆண்டின் 71ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 294 நாட்கள் உள்ளன.

ஷ்ரேயா கோஷல்: இன்று பிறந்தநாள் (March 12, 1984) பிறப்பிடம் பகரம்பூர், மேற்கு வங்காளம், இந்தியா. பல மொழித் திரைப்படங்களில் பின்னணி பாடியுள்ளார். நான்கு முறை தேசிய திரைப்பட விருதுகளையும் ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

அழ­காக இருப்­ப­வர்­க­ளுக்கு,குரல் வளம் நன்­றாக இருக்­காது என, கூறப்­ப­டு­வதை அடித்து உடைத்து பொய்­யாக்கி­ யவர் ஷ்ரேயா கோஷல். உன்­னை­விட இந்த உல­கத்தில், உரு­குதே.. மரு­குதே, இளங் காத்து வீசுதே போன்ற மனதை உருக வைக்கும் மெலோடி பாடல்­களை பாடி­யவர். இவரின் அழ­கான தோற்­ற­த்தை பார்­த்து, பாலிவுட்,கோலிவுட்­டி ­லி­ருந்து அழைப்பு வந்­தாலும்,அதில் எல்லாம் எனக்கு நம்­பிக்கை இல்லை என சிரித்­துக்­கொண்டே மழுப்பி விடு­கிறார்.
இவர் பாடிய தமிழ்ப் பாடல்களில் சில…

 1. முன்பே வா (சில்லுனு ஒரு காதல்)
 2. நினைத்து நினைத்து (7ஜி ரெயின்போ காலனி)
 3. சாரல் (குசேலன்)
 4. எந்த குதிரையில் (சத்தம் போடதே)
 5. கண்ணின் பார்வை (நான் கடவுள்)
 6. ஐயைய்யோ! என் உசுருக்குள்ள… (பருத்தி வீரன்)
 7. உருகுதே மருகிதே (வெயில்)
 8. எனக்கு பிடித்த பாடல் (ஜூலி கணபதி)
 9. ஒண்ண விட(விருமாண்டி)
 10. பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு (வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.)
 11. குண்டுமல்லி குண்டுமல்லி தென்றல் காத்து அடிக்குது… ()
 12. என் நெஞ்சின் இராகம் எங்கே? எங்கே? (உதயம் 2006)
 13. ஆதிவாசி நானே (கேடி)
 14. ஆறடி இராட்சசனோ! (ஐந்தாம்படை)
 15. ஆவாரம் பூவுக்கும் ஐயனார் தோளுக்கும் (அறை எண் 305இல் கடவுள்)
 16. அண்டங்காக்கா கொண்டக்காரி (சைந்தவியுடன் இணைந்து) (அந்நியன்)
 17. மன்னிப்பாயா” (விண்ணைத்தாண்டி வருவாயா)
 18. இறக்கை முளைத்ததேன் (சுந்தர பாண்டியன்)
 19. மின்வெட்டு நாளில் இங்கே (எதிர்நீச்சல்)

வரலாற்றில் இன்று,

 • 1894 – முதற் தடவையாக கொக்கா-கோலா மென்பானம் கண்ணாடிப் புட்டியில் அடைத்து விற்கப்பட்டது.
 • 1913 – ஆஸ்திரேலியாவின் வருங்கால தலைநகர் அதிகாரபூர்வமாக கான்பரா எனப் பெயரிடப்பட்டது. கான்பரா அமைக்கப்படும் வரையில் 1927 வரையில் மெல்பேர்ண் தற்காலிகத் தலைநகராக இருந்தது.
 • 1918 – 215 ஆண்டுகளாக ரஷ்யாவின் தலைநகராக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க் தலைநகர் அந்தஸ்து மாற்றப்பட்டு மாஸ்கோ தலைநகராக்கப்பட்டது.
 • 1928 – கலிபோர்னியாவில் சென் பிரான்சிஸ் அணைக்கட்டு உடைந்ததில் 400 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
 • 1930 – மகாத்மா காந்தி பிரித்தானிய ஆட்சியாளரின் உப்பு ஆதிக்கத்துக்கு எதிராக 200 மைல் நீள தண்டி யாத்திரையை ஆரம்பித்தார்.
 • 1954 – சாகித்ய அகாதெமி இந்திய அரசினால் தொடங்கப்பட்டது.
 • 1968 – மொரீசியஸ் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது
 • 1992 – மொரீசியஸ் பொதுநலவாய அமைப்பினுள் குடியரசானது.
 • 1993 – மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2007 – கலிபோர்னியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயினால் 2000 ஏக்கர்களுக்கு மேற்பட்ட நிலப்பரப்பு எரிந்து நாசமடைந்தன.

பிறப்புக்கள்

 • 1925 – லியோ எசக்கி, நோபல் பரிசு பெற்ற ஜப்பானியர்
 • 1984 – ஷ்ரேயா கோஷல், பாடகர்

இறப்புக்கள்

 • 1991 – றாக்னர் கிறனிற், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1900)
 • 2006 – சுந்தரிபாய், தமிழ்த்திரைப்பட நடிகை

சிறப்பு நாள்

மொரீசியஸ் – தேசிய நாள்

 

மார்ச் 6 கிரிகோரியன் ஆண்டின் 65ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 300 நாட்கள் உள்ளன.

 • 1079 – ஒமார் கயாம் ஈரான் நாட்காட்டியை அமைத்து முடித்தார்.
 • 1790 – மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்டது.
 • 1869 – திமீத்ரி மென்டெலீவ் தனது முதலாவது ஆவர்த்தன அட்டவணையை சமர்ப்பித்தார்.
 • 1964 – காசியஸ் கிளே தனது பெயரை அதிகார பூர்வமாக முகமது அலி என மாற்றிக் கொண்டார்.
 • 1967 – திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டில் முதன்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது.
 • 1987 – பிரித்தானியாவின் எம்எஸ் ஹெரால்ட் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 193 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2007 – இந்தோனீசியாவின் சுமாத்ராவில் இடம்பெற்ற இரண்டு அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் 70 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

 • 1937 – வலன்டீனா தெரெஷ்கோவா, சோவியத் விண்வெளி வீரர், விண்ணுக்குச் சென்ற முதற் பெண்
 • 1954 – ம. சா. அறிவுடைநம்பி, தமிழ்ப் பேராசிரியர் (இ. 2014)
 • இறப்புக்கள்
 • 2006 – கே. ஷங்கர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1926)

sankr17.03.1926ம் ஆண்டு பிறந்த இவர் ஆரம்ப காலகட்டங்களில் ஏ.வி.எம் ல் எடிட்டராக தனது சினிமா உலகில் இருந்தார். பின்னர் இயக்குனாரானார். இவர் இயக்கிய முதல் படம் சிங்களத்தில் “டாக்டர்” என்னும் படமாகும். பின்னர் 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள கே.சங்கர், இணையற்ற வெற்றிப் படங்கள் பல தந்து தமிழ்த் திரைப்பட உலகில் தனி முத்திரை பதித்தவர் ஆவார்.

கே.சங்கர் இயக்கிய குடியிருந்த கோயில், அடிமைப் பெண், ஆலய மணி, ஆண்டவன் கட்டளை, கைராசி, சந்திரோதயம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மனத்தில் என்றென்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும் திரைக் காவியங்கள் ஆகும். இவர் தமிழில் மட்டுமன்றி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி  மொழித் திரைப்படங்களையும் இயக்கிய சிறப்புக்கு உரியவர் ஆவார்.

கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்.டி.ராமராவ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பல வெற்றிப் படங்களை இயக்கி உள்ளது இவரது தனிச் சிறப்பாகும்.

மானில அரசால் வழங்கப்படும் கலை வித்தகர் விருதான – ராஜா சாண்டோ விருதை – கே.சங்கர் பெற்றுருக்கின்றார்.

சிறப்பு நாள்

 • கானா – விடுதலை நாள் (1957)

பெப்ரவரி 28 கிரிகோரியன் ஆண்டின் 59 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 306 நாட்கள் உள்ளன

 • 1854 – ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
 • 1922 – எகிப்தின் விடுதலையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது.
  1935 – வொலஸ் கரோதேர்ஸ் என்பவரினால் நைலோன் கண்டுபிடிக்கப்பட்டது.
 • 1947 – தாய்வானில் அரசுக்கெதிராக இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டம் முறியடிக்கப்பட்டது. 30,000 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
 • 1953 – ஜேம்ஸ் வாட்சன், மற்றும் பிரான்சிஸ் கிரிக் ஆகியோர் தாம் டிஎன்ஏயின் வேதியியல் அமைப்பைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.
 • 1975 – லண்டனில் மூர்கேட் தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் 112 பேர் கொல்லப்பட்டனர்.
 • 1991 – முதலாம் வளைகுடாப் போர் முடிவுற்றது.
 • 2002 – அகமதாபாத்தில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2007 – புளூட்டோவை நோக்கி ஏவப்பட்ட நியூ ஹரைசன்ஸ் தானியங்கி விண்கலம் வியாழனை அண்மித்தது.

பிறப்புகள்

 • 1931 – துரை விஸ்வநாதன், ஈழத்தின் பதிப்பாளர் (இ. 1998)

இறப்புகள்

 • 1963 – இராசேந்திர பிரசாத், இந்தியாவின் முதலாவது குடியரசுத் தலைவர் (பி. 1884)

சிறப்பு நாள்

 • இந்தியா – தேசிய அறிவியல் நாள்

அடுத்த பக்கம் »