தேவையானவை:

 • கோழி இறைச்சி – கால் கிலோ
 • தயிர் – கால் கப்
 • இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு
 • ஏலக்காய் – 3
 • மிளகுத்தூள்
 • சீரகத்தூள்
 • மிளகாய்த்தூள்
 • மஞ்சள்தூள் – சிறிதளவு
 • கடலைமாவு
 • எலுமிச்சை சாறு – சிறிதளவு
 • வெண்ணெய் – சிறிது

செய்முறை:

 1. கோழி இறைச்சியினை எலும்புகளை நீக்கி சுத்தம் செய்து பெரிய துண்டங்களாக வெட்டிக் கொள்ளவும். ஏலக்காய், பொடியாக அரைத்து சிறிதளவு எடுத்து கொள்ளவும்.
 2. தயிரினை நன்கு அடித்துக் கொண்டு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு, தேவையான உப்பு, கடலைமாவு அனைத்தையும் சேர்த்து எண்ணெய் விட்டுக் கலந்து கொள்ளவும்.
 3. இந்த கலவையினை கோழித்துண்டுகள் மீது பூசி 4 மணி நேரம் நன்கு ஊற விடவும்.
 4. இந்த துண்டுகளை ஒரு கம்பியில் நுழைத்து 350 டிகிரி சூடேற்றப்பட்ட ஓவனில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும் (தந்தூரி அடுப்பில் 8 நிமிடங்கள் போதுமானது). 3 நிமிடங்களுக்கு ஒரு முறை எடுத்து வெண்ணெய் தடவி மீண்டும் வேகவிடவும்.
 5. பின்னர் எடுத்து பரிமாறவும். தேவையானால் அதன் மீது கொத்தமல்லி, தக்காளி சாஸ், வெள்ளரிக்காய், கேரட் தூவிக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் – 1 கிலோ
தயிர் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 2
சின்ன வெங்காயம் – 8
தக்காளி – 1
மல்லி இலை – 1 கைப்பிடி
புதினா – 1 கைப்பிடி
பச்சை மிளகாய் – 4
அரைக்க
======
தேங்காய் துருவல் – 3/4 கப்
முந்திரி ஊறவைத்தது – 15
கசகசா – 2 ஸ்பூன்(தேவையில்லையென்றால் விட்டுவிடலாம்)
தாளிக்க
=========
நெய் – 2 ஸ்பூன்
எண்ணை – 2 ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
ஏலம் – 4
கிராம்பு – 3
 
செய்முறை

 • சிக்கனை தயிரில் இட்டு உப்பு சேர்த்து 2 மணிநேரம் ஊறவைக்கவும்.
 • பின் நெய்யை காயவைத்து அதில் பட்டை,கிராம்பு,ஏலம் சேர்த்து தாளித்து  வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.
 • வெங்காயம் நல்ல ப்ரவுன் நிறம் வந்ததும் தக்காளி மல்லி இலை,புதினா சேர்த்து மேலும் வதக்கவும்.
 • தக்காளி நன்கு உடைந்ததும் ஊறவைத்த சிக்கனை தயிரோடு சேர்த்து இதனுடன் இட்டு கிளறி மிதமான தீயில் வேக விடவும்…30 நிமிடத்தில் சிக்கன் வெந்து விடும்..அவசரமாக இருந்தால் குக்கரில் 3 விசில் விடவும்.
 • அதே சமயம் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நல்ல மைய் போல் அரைக்கவும்.
  சிக்கன் வெந்ததும் அதனுடன் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து 2 கொதி வந்ததும் தீயை அனைத்து விட்டு பரிமாறவும்
   

குறிப்பு:
நெய்ச் சோறு,தேங்காய் சாதம்,பரோட்டா,இடியப்பம்,புட்டு முதலியவற்றிற்கு சூப்பராக இருக்கும்

தேவையான பொருட்கள்:

கோழிக் கறி – 1 கிலோ,  கொத்தமல்லி – சிறிதளவு,  வெங்காயம் – 1,  சீரகம் – 2 தேக்கரண்டி,  நெய் – 3 தேக்கரண்டி,  மிளகாய் வத்தல் – 10,  மஞ்சள் பொடி – அரை தேக்கரண்டி,  ஏலம் – 2,  பூண்டு – 10,  வினிகர் – 2 தேக்கரண்டி.

செய்முறை:

கோழிக் கறியை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். மசாலாவை வினிகரில் விட்டு நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ளவும். அத்துடன் கொத்தமல்லியையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதில் மசாலாவை இட்டு, வதக்கவும். இப்போது கோழிக் கறியை தேவையான அளவு உப்புடன் அதில் சேர்த்து, கொஞ்ச நேரம் அப்படியே வேக விடவும். இன்னொரு பாத்திரத்தில் உருளைக் கிழங்கு ஒன்றை எடுத்து நான்கு துண்டாக்கி போட்டு அதை வதக்கவும். பின்னர் அதை எடுத்து வெந்து கொண்டிருக்கும் கறியில் போடவும். ஒரு பத்து நிமிஷம் அப்படியே வேக வைத்தால் கெட்டியான குழம்பு மாதிரி வந்திருக்கும். அதை சாதத்துடன் சேர்த்துப் பரிமாறவும்.

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி – 1 கிலோ
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 4
இஞ்சி சிறுதுண்டு
பூண்டு – 15 பல்
கொத்தமல்லித் தழை சிறிதளவு
கறிவேப்பிலை சிறிதளவு
துருவிய தேங்காய் அரை கப்
எண்ணெய் அரை கப்
உலர்ந்த மிளகாய் – 8
கசகசா – 2 தேக்கரண்டி
மல்லி – ஒரு தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
ஏலக்காய் – 3
கிராம்பு – 3
பட்டை – சிறு துண்டு
சோம்பு – ஒரு தேக்கரண்டி
ஜாதிக்காய் – அரைத் துண்டு
மிளகாய்த்தூள் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

செய்முறை:

கோழியை நன்கு சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளியைக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டினைத் தோலுரித்துப் பொடியாக நறுக்க வேண்டும். ஒரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், துருவிய தேங்காய், கசகசா, கிராம்பு, பட்டை, மல்லி விதை, சீரகம், சோம்பு, ஜாதிக்காய் ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுத்து இஞ்சி, பூண்டுடன் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

எஞ்சியுள்ள எண்ணெயை ஒரு வாணலியில் இட்டு சூடாக்கி, நறுக்கின வெங்காயத்தை அதில் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் கறிவேப்பிலை இலைகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவினையும் சேர்க்க வேண்டும். நன்கு வதக்கிய பிறகு தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி வேகவிட வேண்டும்.

அதன் பிறகு கோழித் துண்டங்களைச் சேர்த்து சிறிது நேரம் வேகவிட வேண்டும். 2 கப் தண்ணீர் ஊற்றி, எலுமிச்சை சாறு மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் நன்கு வேகவிட வேண்டும். கோழி நன்கு வெந்து மிருதுவானவுடன் இறக்கி, மல்லித் தழை தூவிப் பரிமாற வேண்டும்.