“Dexter” என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பார்த்திருக்கின்றீர்களா ?

இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் Dexter என்பவன் தொடர் கொலைகளை செய்பவன். அதாவது சட்டத்தின் பிடியில் இருந்து தப்பும் கொலையாளிகளை இவர் கொலைசெய்வது போல் இருக்கும் இந்த நிகழ்ச்சி.

அட, ” சட்டத்தின் பிடியில் இருந்து யார் தப்பினாலும் என் பிடியில் இருந்து யாரும் தப்பமுடியாது” என்று வசனம் பேசும் நம்ம தமிழ் கதாநாயர்களை போல என்று வையுங்களேன்.

கொஞ்கம் நெஞ்சை ‘திக்..திக்’ என வைக்கும் காட்சிகள், இரத்தங்கள் வளிந்தோடும் காட்சிகள் உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அமேக வரவேற்பு உள்ளது அமெரிக்காவில்.

இந்த “Dexter” நிகழ்ச்சிக்கு ஆதரவு + அர்பபணிப்பு கொடுக்கும் விதமாக சில நீரூற்றுகளை இவ்வாறு அமைத்திருக்கின்றனர்.

ஆதி காலம் தோட்டு பரம்பரை பரம்பரையாக கட்டவுட் வைத்து, கழுதையில் ஊர்வலம் வந்து, கற்பூரம் காட்டி, பூ எறிந்து, பாலபிஷேகம் செய்து கொண்டுவரும் நமது தமிழ் சினிமா ரசிகர் மன்றங்களே… எப்போது நீங்கள் வித்தியாசமாக எதையாவது செய்து, பழைய பஞ்சாங்கத்தில் இருந்து வெளியே வந்து, எம்மை அத்தப்போகின்றீர்கள்???

இதோ கீளே அசத்தும் அமரிக்க ரசிகர்கள் !

எள் என்றதும் எண்ணையாய் விடுவதே கணவன்-மனைவிக்காண கோப்பாடு.

வாழ்வின் என்ன இடர் வந்தாலும் தொள் கொடுத்து உதபுவவன் தான் உண்மையான கணவனும் கூட.

இங்கு பாருங்கள் ஒரு JUST MARRIED மணமக்களிடையே கல்யாணத்தன்றே நடக்கும் கூத்தை….

ARE YOU A DRIVER ?

நீங்கள் ஒரு சாரதியா?அப்படியானால் இந்தப்படங்கள் உங்களுக்காகத்தான்.
முதலில் ஒரு அழகியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது உங்களுக்கு.
அவள் பெயர் ஜெக்குலின் சபரிடோ – Jacqueline Saburido.
தனது தந்தையுடனும்,நண்பர்களுடனும் அமைதியாக வாழ்ந்துவந்தாள்.

தனது பெற்றோருடன் சிறுவயதுப் பிறந்தநாள் விழாவில்…

தனது தந்தையுடன்…

நண்பர்களுடன்…

இறுதியாக அவள் புன்னகைத்து எடுக்கப்பட்ட படம்

இனிவரும் படங்கள் கோரமாக இருக்கும்.இளகிய மனமுடையவர்கள் படங்களைத் தவிர்த்து இறுதிப்பந்தியினை மட்டும் வாசிக்கவும்.

1999 ஆம் ஆண்டு,டிசம்பர் மாதம் ஒரு 17 வயதான குடிபோதையிலிருந்த இளைஞனின் வாகனம் அவளுடைய வாகனத்தில் மோதியது.45 விநாடிகள் எரிந்த வாகனத்துக்குள்ளிருந்து உடல்முழுதும் எரிந்தநிலையில் அவள் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டாள்.உடனடியாக 40 சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

விபத்தில் அவளுடைய வாகனம்…

தந்தையின் பராமரிப்பில் இன்று வரை சிகிச்சைகள் தொடரும் அவள்…
அன்று ஒரு அழகிய வாழ்க்கையின் முடிவுக்குக் காரணமான 2 கிளாஸ் மதுபானத்தின் பிடியிலிருந்த இளைஞன்.இன்றுவரை மனசாட்சியோடு தன்னையே மன்னிக்கமுடியாக் குற்றமும் உறுத்த,உறக்கமில்லாது வேதனையில்…

விபத்துக்களில் சிக்கும் அனைவரும் உயிரிழப்பதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்.
இதனைப் பார்த்த நீங்களும் ஒரு சாரதியாக இருக்கக் கூடும்.உங்களைச் சூழ உயிர்கள் இருக்கின்றன.மதுபானத்தை அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் பழக்கம் உங்களுக்கு இருப்பின்,இன்றோடு நிறுத்திவிடுங்கள்.உங்களிடம் இப்பழக்கம் இல்லாவிடினும் உங்கள் சகோதரர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்கள் அனைவரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்.உங்கள் வார்த்தைகள் ஒரு உயிரை வலிகளிலிருந்து காப்பாற்ற உதவட்டும்.

நாம் அவற்றை ஐந்தறிவென்று கூறிச் சுருக்கமாக அடக்கிவிடுகிறோம்.ஆனால் அவையோ மனித உணர்வுகளைப் போன்றே தமக்குள்ளும் உணர்வுகளைக் கொண்டவை என்பவற்றை இது போன்ற படங்களைப் பார்த்தே ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.

படங்களைப் பாருங்கள்,அவ்வேளையில் மனிதனின் நடவடிக்கையையும்,நாயின் நடவடிக்கையையும்..!

ஒரு நாய் காரினால் மோதப்பட்டு செத்துக்கிடக்கிறது.
இன்னொரு நாய் அதைக் கண்டுவிடுகிறது.
மின்னலைப் போல விரையும் வாகனங்களுக்கு மத்தியில் எந்த அச்சமுமின்றி தன்னைப் போல ஒரு உயிரைக் காப்பாற்ற இறந்த நாயின் அருகே ஓடி வந்து அதனைத் தட்டியெழுப்புகிறது.


“எழும்பு நண்பா எழும்பு,இங்கேயெல்லாம் தூங்கக் கூடாது.பாரு வாகனமெல்லாம் எவ்வளவு விரைவாகப் போகுதுன்னு”


“நீ எழும்புகிற மாதிரித் தெரியவில்லை.இரு நான் இந்த வீதியின் ஓரத்துக்கு உன்னைப் பாதுகாப்பாகத் தள்ளிச் செல்கிறேன்”


“இவன் மிகவும் பாரமாக இருக்கிறான்.என்னால் தனியாகத் தள்ள முடியவில்லை.தயவுசெய்து யாராவது உதவுவீர்களா?”


“எனக்கு உதவுவதை விட்டு போட்டோ எடுக்கிறீர்களா?யாராவது உதவும் வரையில் நானும் இந்த இடத்தை விட்டு நகரமாட்டேன்”

நமது மனிதாபிமானங்கள் எந்தளவுக்கு இருக்கின்றன என்பதற்கு இப்படங்கள் ஒரு சிறிய உதாரணம் மாத்திரமே.
ஐந்தறிவான அந்த ஜீவனுக்கு உதவாமல் ஆறறிவான நாம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறொம்.
“ஆணென்ன,பெண்ணென்ன,நீயென்ன,நானென்ன..எல்லாம் ஓரினம்தான்… ” போன்ற பாடல்களில் மட்டுமே வாழ்ந்துகொண்டிருக்கின்றன நம் மனிதாபிமானங்கள்

நன்றி: ரிஷான் ஷெரிப்

பிறந்தநாட்டைவிட்டு விரட்டி அடிக்கப்பட்டு, அல்லது பயத்தினால் விட்டு விட்டு ஓடிவந்த அனைத்து தமிழ் உறவுகளுக்காகவும் இந்த வீடியோ சமர்ப்பனம் !