நம் அபிமான பயர்பாக்ஸ் ஒரு கின்னஸ் உலக சாதனை செய்யவிருக்கின்றது. 24 மணிநேரத்தில் உலகிலேயே அதிக அளவில் இறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் என்ற சாதனையை அது செய்ய தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இது வரை உலகெங்கும்
1,687,332 பேர் அந்த புது பயர்பாக்ஸ்3-ஐ ஜூன் 17 அன்று இறக்கம் செய்யப் போவதாக தெரிவித்திருக்கின்றார்கள்

 Download Day 2008

நீங்களும் இந்த சாதனையில் பங்கு கொள்ளலாம்.

இன்று பயர்பாக்ஸின் தளம் www.mozilla.com/firefox/ சென்று புதிய FireFox version 3-யை முழுவதுமாய் இறக்கம் செய்து (no upgrade please) உங்கள் கணிணியில் நிறுவி இச்சாதனையில் பங்கு பெறலாம். மேலும் விவரங்களுக்கு.
http://www.spreadfirefox.com/en-US/worldrecord/

1985 ம் ஆண்டுமுதல் இன்றுவரை உள்ள செல் போன்களின் வளர்ச்சியை இந்த அருமையான ஒரு வீடியோமூலம் பாருங்கள். இதில் சிலதை நீங்கள் உபயோகித்திருப்பீர்கள், பலதைக் காண்டிருபீர்கள், சில கண்களில் பட்டும் இருக்ககாது !

இது ஒரு சோதனனக்காக இங்கு பதியப்படுகின்றது.  strictly for Evaluation purpose only 

எனது தாயார் இன்று கனடா வருகின்றார். அவர் வரும் விமானத்தை நோட்டம் விடும் முகமாக இங்கு இந்தப்பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பக்கத்தை அடிக்கடி Refresh செய்வதன் மூலம் விமானத்தின் பேக்குவரத்தை நேரடியாக பார்க்கல்லாம். அல்லது தானாகவே Refresh ஆகும்.

இதோ அந்த விமான போக்குவரத்து பக்கம்

உசுப்பேத்துதல்,

நல்லா உருவேற்றிவிடுவது,

பப்பாசி மரத்தில ஏற்றிவிடுவது,

முருங்கை மரத்தில் ஏற்றிவிடுவது…

                                                           இப்படி சில வசனங்கள் எம் வாழ்வில் நடைபெறுவது உண்டு. யாராவது எம்மை தமது சொல் வல்லமையினால் உசுப்பேத்தி விட, நாமும் பிறகு என்ன நடக்கப்போகின்றது என்று தெரியாமல், வீராப்புடன் வெகுண்டெழுந்து… பின்னர் வசமாக மாட்டிய சம்பவங்கள் ஏராளம் ஏராளம்…

சிறுவயதில் நான் சிவகுருவித்தியாசாலையில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது பள்ளிக்கூடத்திற்கு வெளியே உள்ள பாளடைந்த தண்ணியில்லாத கிணற்றினுள் உன்னால் குதிக்கமுடியுமா என நண்பர்கள் உசுப்பேத்த…

நானும் வீராப்புடன் குதித்துவிட்டு – பின்பு மேலே ஏறமுடியாமல் தவித்து… பின்னர் அந்த வளியாலே வந்த பெரியவர் தன் வேட்டியை அவித்து, கிணற்றினுள் விட்டு…. அதைபிடித்து ஏறி வந்த என்னை “நீ பள்ளிகூடத்திற்கு படிக்கவந்தனியா அல்லது குரங்கு வித்தை காட்டவந்தனியா?” எனக் கூறி முதுகில் ஒரு அப்ளாஸ் விட்டது…

பின்னர் 8ம் வகுப்பில்- வாகீசன் கலாசாலையில் இரவு பாடம் முடித்துவிட்டு திரும்பி சைக்கிளில் நண்பன் சந்திரகுமாரும் டபிள்ஸ்ல் வரும்போது முன்னால் சைக்கிளில் போன என் நண்பன் தெய்வனுக்கு பளார் என்று முதுகிலே ஒரு அப்பளாஸ் வைத்துவிட்டு முந்திக்கொண்டு ஓட…

தெய்வனும் கடுப்புடன் விரட்ட… இவர் எங்கே எங்களை பிடிக்கின்றது, இருட்டாக இருக்கின்ற கம்பர் மலை தோட்டத்திற்குள் சைக்கிளை விடடா என சந்திரகுமார் உசுப்பேத்த…

ஒருபுறம் புகையிலைசெடியும் மறுபுறம் முளகாய்ச்செடியும் உள்ள றேட்டை குத்துமதிப்பாய் கண்டுபிடித்து பின்னால் விரட்டிவரும் தெய்வனுக்கு கண்மூடித்தனமாய் ஓட்டம் காட்ட…

திடீரென்று எம் சைக்கிளின் முன் சக்கரம் எதிலொ இடித்து நானும் சந்திரகுமாரும் நிலைகுலைந்து சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு – தோட்டத்து பள்ளத்தினுள் உள்ள ஆளமான-தோட்டத்துக்கு நீர் இறைக்கும் கட்டு இல்லாத கிணத்திற்கு ஒரு அடி அருகே போய் குப்புற விழவும், நாய் ஒன்று மரண ஓலத்துடன் கத்த … அட நாங்கள் தெருவிலே படுத்திருந்த நாய் ஒன்றின் மீது சைக்கிளை ஏற்றியது அப்போதுதான் தெரிந்தது !

பின்பு உடல் எலாம் சிராய்ப்புடன் ரத்தம் வழிய வழிய வீட்டுக்கு போய் அம்மாவிடம் வாங்கிக்கட்டியது வேறுகதை…!

இதைவிட இன்னும் ஒன்று- என் வகுப்பில் படிக்கும் நண்பன் ஒருவன் அடுத்த வகுப்பில் படிக்கும் மாணவியை விரும்ப, புராணங்களையும் இதிகாசங்களளயும் அப்படி இப்படி என சொல்லி  உசுப்பேத்தி விட, நானும் காதலுக்கு தூது போவதுதான் உலகில் மிகப்பெரிய புனிதமான சேவை என நினனத்து தூது போக…

அடுத்த நாள் அத்த மாணவியின் அண்ணன் PRINCPIAL லிடம் வர…

சம்பத்தப்பட்ட மாணவன், மற்றும் உசுப்பேத்திய மற்றய இரு மாணவர்கள் மூவருக்கும் TC கொடுத்து வெளியேற்றிய அதிபர் திரு கோ.செல்வவினாயகம் அவர்கள் என்னை மட்டும் தொடர்ந்து படிக்க அனுமதி அளிதார். என் அதிபருக்கு இன்றும் நான் நன்றி கூறுகின்றேன்.

உசுப்பேத்தும் வசனங்களான – ” நீங்கள் செய்யாமல் வேறுயார் செய்வது, எங்கே முடிஞ்சா செய் பார்க்கல்லாம், நீ தானே சிங்கனாச்சே, உன்னன விட்டால்  வேறு யாரும் இல்லை, இதுக்கு இனெருத்தன் பிறக்கனும்டா … இப்படி இன்னும் பல வசனங்களை குடும்பத்திலும், வேலை இடங்களிலும், நண்பர்கள் உறவினர் மத்தியிலும் வரும்.

இதுபோல்  உசுப்பேத்தும் வார்த்தைகளுக்கு மயங்காமல் இருப்பதுதான் எம் குடும்பத்திற்கும், எமக்கும் நல்லது.

நண்பர்களிடையே, உறவுகளிடையே பிரிவும் – உயிருக்கும், உடல் உறுப்புகளுக்கும் இழப்பு உண்டாகும் என்பதை அனுபவப்பட்ட அனைவரும் ஏற்றுக்கொள்ளுவார்கள்.

நண்பர்களின் உசுப்பேத்தலினால் தன் வீரத்தைக்காட்டும் ஒருவரின் நிலையை பாருங்கள் !

 

 

 

 

 

ARE YOU A DRIVER ?

நீங்கள் ஒரு சாரதியா?அப்படியானால் இந்தப்படங்கள் உங்களுக்காகத்தான்.
முதலில் ஒரு அழகியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது உங்களுக்கு.
அவள் பெயர் ஜெக்குலின் சபரிடோ – Jacqueline Saburido.
தனது தந்தையுடனும்,நண்பர்களுடனும் அமைதியாக வாழ்ந்துவந்தாள்.

தனது பெற்றோருடன் சிறுவயதுப் பிறந்தநாள் விழாவில்…

தனது தந்தையுடன்…

நண்பர்களுடன்…

இறுதியாக அவள் புன்னகைத்து எடுக்கப்பட்ட படம்

இனிவரும் படங்கள் கோரமாக இருக்கும்.இளகிய மனமுடையவர்கள் படங்களைத் தவிர்த்து இறுதிப்பந்தியினை மட்டும் வாசிக்கவும்.

1999 ஆம் ஆண்டு,டிசம்பர் மாதம் ஒரு 17 வயதான குடிபோதையிலிருந்த இளைஞனின் வாகனம் அவளுடைய வாகனத்தில் மோதியது.45 விநாடிகள் எரிந்த வாகனத்துக்குள்ளிருந்து உடல்முழுதும் எரிந்தநிலையில் அவள் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டாள்.உடனடியாக 40 சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

விபத்தில் அவளுடைய வாகனம்…

தந்தையின் பராமரிப்பில் இன்று வரை சிகிச்சைகள் தொடரும் அவள்…
அன்று ஒரு அழகிய வாழ்க்கையின் முடிவுக்குக் காரணமான 2 கிளாஸ் மதுபானத்தின் பிடியிலிருந்த இளைஞன்.இன்றுவரை மனசாட்சியோடு தன்னையே மன்னிக்கமுடியாக் குற்றமும் உறுத்த,உறக்கமில்லாது வேதனையில்…

விபத்துக்களில் சிக்கும் அனைவரும் உயிரிழப்பதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்.
இதனைப் பார்த்த நீங்களும் ஒரு சாரதியாக இருக்கக் கூடும்.உங்களைச் சூழ உயிர்கள் இருக்கின்றன.மதுபானத்தை அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் பழக்கம் உங்களுக்கு இருப்பின்,இன்றோடு நிறுத்திவிடுங்கள்.உங்களிடம் இப்பழக்கம் இல்லாவிடினும் உங்கள் சகோதரர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்கள் அனைவரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்.உங்கள் வார்த்தைகள் ஒரு உயிரை வலிகளிலிருந்து காப்பாற்ற உதவட்டும்.

Croc Cage Diving என அழைக்கப்படும் இந்த முதலையுடன் சேர்ந்து மூள்கும் விளையாட்டு முன்பு அறிமுகமான shark cage divingஐ ஒத்ததாகும். அதாவது ஒரு கூண்டினுள் உங்களை இறக்கி கூண்டை அப்படியே முதலை உள்ள தடாகத்தினுள் இறக்குவார்கள்.

இவ் விளையாட்டை 12வயதுக்கும் அதற்கும் மேற்பட்டவர்களும் + மனதிலே தில் உள்ளவர்களும் அனுமதிக்கப்படுவர். பளிங்குபோல் தெளிந்த, வெதுவெதுப்பான நீர் உள்ள தடாகத்தினுள் 4மீட்டர் நீளமான ஆளைக்கொல்லும் ‘நைல் முதலை’ களுடன் நீங்கள் உல்லாசமாக (?!) விளையாடலாம்!

நைல் முதலையின் அடக்கமான தொற்றம் !

உங்கள் முகத்திற்கு சில அங்குலம் முன்னால் வரை அகோர பற்களுடன் உலாவும் முதலைகளை – உங்கள் கைகளை நீட்டி தடவிப்பார்ப்பது உங்கள் சொந்தவிருப்பம் ! அதற்குமுன்னால் சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலையின் வாயில் எதுவாகினும் மாட்ட அது ஒரு செல்லக்கடி கடிக்கும். அந்தக்கடினின் அளவு ஒரு சதுர அங்குலத்திற்கு ஒரு தொன் அழுத்தம் இருக்கும் ! பரவாயில்லையா?

உலகில் முதல் முறையும், ஒரே ஒரு இடத்திலும் இது தற்போதைக்கு அமைந்துள்ளது. பின்னர் மக்களின் வரவேற்பையும், முதலையின் ஒத்துளைப்பைபும் பொறுத்து மற்றய இடங்களிலும் அதாவது நம்ம ஊர் மிருகக்காட்சி சாலைகளிலும் அமையல்லாம் !

பொறுமை இல்லா வீரத்தமிழர்கள் இப்பவே போய் முதலையுடன் குளிக்க South Africa நாட்டின் Western Cape மாகானத்தில் அமைந்துள்ள Oudtshoorn நகருக்கு செல்லவும்.

 

திரைப்படம் எடுக்கனும்னு எனக்கும் ஆசைதான் – ஆனா வாய்ப்பு எங்க கிடக்குது?
இதோ வந்துவிட்டது – அதுவும் ஹாலிவுட்ல; இந்தியர் அஷோக்கு தான் தர்றாருங்க – அதான் அஷோக் அமிர்தராஜ் தானுங்க.

அவரும், சோனி பிக்ஸ் (Sony PIX) ம் இணைந்து ‘கேட்வே’னு ஒரு ரியாலிட்டி ஷோ மூலமா ஒரு திரைப்பட இயக்குனரை தேர்வு செய்து, அவருக்கு ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு தருகின்றனர்.

இந்த விபரத்தை  பார்க்கும் போது போட்டி முடிஞ்சிடுச்சு. ச்சே நம்ம நேரம். மிஸ் பண்ணிவிட்டோமே (

போட்டில கலந்துகொண்ட போட்டியாளர்களையும் அவர்களுடய படைப்புக்களையும் இங்க கிளிக் பண்ணி பார்க்கலாம்.