இங்கு நீங்கள் மேலே பார்ப்பது பல அறிவியல் மேதை  ஐன்ஸ்டீன் (Albert Einstein) அதுதான் E=mc² ஐ கண்டுபிடித்தவர்.

சரி… இவர் அறிவாளிதான். இவரைப்பார்த்தால் அப்படி அழகா தெரியவில்லையே என் தோன்றுகின்றதோ…

ஐன்ஸ்டீனின் மனைவிகூட, ஆராச்சி ஆராட்சி என்று  தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பதை பார்த்து இவரை “இது ஒரு பைத்தியம்” என்று கூறியுள்ளார். இவரைப்போய் அழகு என்று கூறி எங்களை பைத்தியமாக்காதீங்கள் என்று கூறூவது கேட்கின்றது…

சரி சரி, கொஞ்சம் எழுந்து ஒரு 15அடி தூரம் பின்னால் போய் பாருங்கள் …. ஒருகாலத்தில் (நம்ம தாத்தா காலத்தில்)  உலக இளைஞர்களை மயக்கிப்போட்ட  மர்லின் மன்றோ(MARILYN MONROE) தெரிவார் பாருங்கள்…!!!

(இதுக்குத்தான் நான் பெண்களை தூரத்தில் இருந்து பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்வேன்!!?!)

ஏற்கனவே முகம் மாறும் விந்தை என்றொரு பதிவு இட்டிருந்தேன் பார்ககாதவர்கள் ஒருமுறை பார்க்கவும்

‘எல்லாம் சரி, யார் அது மர்லின் மன்றோ?’ என்று அப்பாவியாய் கேட்டால் கீழே உள்ள வீடியோவைப்பாருங்கள்!!

சிலரது குறும்பு அனைவராலும் ரசிக்கக்கூடியதாக அமையும். நம்ம நடிகர்கள் என்.எஸ்.கிருஷ்னன் தொடங்கி, நகேஷ், சோ, சுறுளி, வி.கே.ராமசாமி, பாலையா, கவுண்டர்,செந்தில்,வடிவேல், விவேக்… இப்படி பலர் நம் சினிமாவில் தம் நடிப்பாலும், வசனங்களினாலும் எம்மை கவர்ந்தனர்.

அதேபோல் இதோ வேறுமாதிரியான ஒரு குறும்பு ! வார்த்தைகளே, நடிப்போ இல்லாத ஆனால் மிகவும் தூக்கலான கற்பனை வளமுள்ள குறும்பான PHOTOSHOP துணைகொண்டு நிபுனர் ஒருவரின் கைவண்ணத்தை !

 

 

 

 

ஒரு அதிசயப் படம் இது. இப்போது இடது பக்கத்தில் உள்ளவர் சினத்துடனும், வலது பக்கத்தில் உள்ளவர் சாந்தத்துடனும் இருக்கின்றார்.

அப்படியே எழுந்து ஒரு 10அடி பின்னால் போங்கள்… இப்ப பாருங்கள் எப்படி இருவரும் முகத்தை மாற்றுகின்றனர் என்று !!!

எதுக்கும் நீங்களும் ஒருதரம் கண்ணாடிமுன் நின்று கிட்டவும் தூரவும் ஒருதரம் முகங்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள் 🙂

 

அதிர்ச்சி தரும் இந்தப்படங்கள் ஒரு ‘ஸ்டேண்டர்ட் சார்ட்டட் வங்கி’யின் தானியங்கிக் கேமராவில் பதியப்பட்டிருந்த படங்கள்.

அவன் முதலில் காசாளரிடம் வருகிறான்.காசாளர் இருப்பிடத்தில் பொறுப்பானவர்கள் இல்லை.அடுத்து என்ன செய்கிறான் என்பதனைப் படங்கள் விளக்கும்.

ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் தமது கடமையைச் சரிவர நிறைவேற்றத் தவறினாலேற்படும் நிலைமைக்கும்,இழப்புகளுக்கும் இது ஒரு உதாரணம் மாத்திரமே.
இந்தத் திருட்டினையடுத்து சம்பந்தப்பட்ட காசாளரின் நிலை என்னவாகியிருக்கும் என நினைத்துப் பாருங்கள்.

இது இன்னொரு வங்கித் திருட்டு.இந்த வீடியோவைப் பாருங்கள்.
இது கடந்த வருடம் நவம்பர் மாதம் 15ம் திகதி இலங்கையின் 2ம் தலைநகரம் எனப்படும் கண்டியின் ஒரு பிரதான தெருவில்,ஜனத்திரள் நிறைந்த ஒரு வங்கியில் நடந்த துணிகரக் கொள்ளைச்சம்பவம்.
கண்முன்னே தான் கஷ்டப்பட்டுச் சேமித்த பணம் பறிபோகும் நிலையில் அந்த அபலைப்பெண்ணின் துடிப்பும்,
பலகோடிகளை உள்வாங்கியிருக்கும் வங்கி நியமித்திருக்கும் காவலாளியின் நடவடிக்கையையும் பார்த்து என்ன நினைக்கிறீர்கள்?
இந்நிகழ்வை இங்கு பதியும் கணம் வரைக்கும் கொள்ளைக்காரன் கைது செய்யப்படவில்லையெனக் கேள்விப்படுகிறேன்.

இதுவாவது பரவாயில்லை. இங்குபாருங்கள் பொலிஸின் சாமர்த்தியத்தை -( தலையை கொண்டு எங்கு முட்டுவது ) திருடனாக வந்து என்னைபிடி என்றால்தான் பிடிப்பார்களோ?