நீங்கள் கைத்தொலைபேசி பாவிப்பவரா? Text message அனுப்புபவரா? தாராளமாக இந்த அறிவியல் யுகத்தில் அதனை செய்யலாம்.  விஞ்ஞான  வளர்ச்சிக்கு  நான்  எதிரானவன் அல்ல.  ஆனால் வாகனம் ஓட்டிக் கொண்டு இதனை செய்யாதீர்கள்.

நான் பல பேரைப் பார்த்து இருக்கின்றேன்.

அதும் Teen age காரர்கள் அதிகமாக இந்த வேலை செய்வதை. அவர்களும் சிக்கலுக்குள்ளாகி அப்பாவி பொதுசனத்தையும் அனியாயமாக  கொல்லும் பாதக செயலை செய்பவர்களாக இருக்கின்றனர்.

சரி, ஒருமுறை இந்த வீடியோவை பாருங்கள்… திருந்துவீர்கள் என நம்புகின்றேன். நீங்கள் பெற்றோராக இருந்தால் உங்கள் வாகனம் செலுத்தும் பிள்ளைகளுக்கு இந்த வீடியோவை காட்டுங்கள்.

ஆயிரம் வார்த்தைகளை (புத்திமதிகளை) விட ஒரு காட்சி யாரையும் வசப்படுத்தும்.

இதுசம்பந்தமாக முன்னர் இட்ட பதிவுகள்:

 

வாகனங்களை நீங்கள் ஓடுபவரா?

விபத்துக்கு இதுவும் காரணமா?

பொலிஸ் அதிசயித்த பெண்ணின் விபத்து!

 துருக்கியின் ஒரு துறைமுக நகரம் Mersin. இங்கு உள்ள ஒரு துறைமுகத்தின் வாயிலில் இருந்து வெளியே வந்த truck trailer உம் புகையிரதமும் மோதிக்கொண்டது.

இந்த விபத்தின்போது அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த ஒருவர் சிக்குண்டார். அதிஸ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பினார் அந்த துருக்கி துறைமுகத் தொழிலாளி.

இங்கு அந்த வீடியோ காட்சியை காணலாம்.

Vodpod videos no longer available.

 

மேலும் விபத்து சம்பந்தமான முந்தய பதிவுகள் கீழே காணலாம்:

விதி என்பது இதுவா?

விபத்தும் சாட்சியும்

பொலிஸ் அதிசயத்த பெண்ணின் விபத்து

வாகனங்களை நீங்கள் ஓட்டுபவரா?

விபத்துக்கு இதுவும் காரணமா?

அண்மையில் கனடாவில் கியூபெக் அரசாங்கம் வாகனம் செலுத்திக்கொண்டு தொலைபேசி கதைத்தால் குற்றம் என்றும், மூன்றுபுள்ளிகளையும் எடுத்து அபராதமும் விதிக்கப்படும் என சட்டம் கொண்டுவந்தது. அதைத்தொடர்ந்து ஒண்டாரியோ அரசாங்கமும் இந்தச் சட்டத்தை கொண்டுவர ஆலோசித்து வருவதாக சொல்லியது.

விபத்தைத் தடுப்பதற்கு இது தேவையானதுதான். கூடவே கீழே உள்ள ஐடியா எப்படி என்று அனுபவப்பட்ட நீங்களும் (!??!) சொல்லுங்களேன்.

இந்த ஐடியாக்கூட பல உயிர்களைக் காப்பாற்றும் !!

ARE YOU A DRIVER ?

நீங்கள் ஒரு சாரதியா?அப்படியானால் இந்தப்படங்கள் உங்களுக்காகத்தான்.
முதலில் ஒரு அழகியைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது உங்களுக்கு.
அவள் பெயர் ஜெக்குலின் சபரிடோ – Jacqueline Saburido.
தனது தந்தையுடனும்,நண்பர்களுடனும் அமைதியாக வாழ்ந்துவந்தாள்.

தனது பெற்றோருடன் சிறுவயதுப் பிறந்தநாள் விழாவில்…

தனது தந்தையுடன்…

நண்பர்களுடன்…

இறுதியாக அவள் புன்னகைத்து எடுக்கப்பட்ட படம்

இனிவரும் படங்கள் கோரமாக இருக்கும்.இளகிய மனமுடையவர்கள் படங்களைத் தவிர்த்து இறுதிப்பந்தியினை மட்டும் வாசிக்கவும்.

1999 ஆம் ஆண்டு,டிசம்பர் மாதம் ஒரு 17 வயதான குடிபோதையிலிருந்த இளைஞனின் வாகனம் அவளுடைய வாகனத்தில் மோதியது.45 விநாடிகள் எரிந்த வாகனத்துக்குள்ளிருந்து உடல்முழுதும் எரிந்தநிலையில் அவள் மீட்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டாள்.உடனடியாக 40 சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

விபத்தில் அவளுடைய வாகனம்…

தந்தையின் பராமரிப்பில் இன்று வரை சிகிச்சைகள் தொடரும் அவள்…
அன்று ஒரு அழகிய வாழ்க்கையின் முடிவுக்குக் காரணமான 2 கிளாஸ் மதுபானத்தின் பிடியிலிருந்த இளைஞன்.இன்றுவரை மனசாட்சியோடு தன்னையே மன்னிக்கமுடியாக் குற்றமும் உறுத்த,உறக்கமில்லாது வேதனையில்…

விபத்துக்களில் சிக்கும் அனைவரும் உயிரிழப்பதில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்தான்.
இதனைப் பார்த்த நீங்களும் ஒரு சாரதியாக இருக்கக் கூடும்.உங்களைச் சூழ உயிர்கள் இருக்கின்றன.மதுபானத்தை அருந்திவிட்டு வாகனம் செலுத்தும் பழக்கம் உங்களுக்கு இருப்பின்,இன்றோடு நிறுத்திவிடுங்கள்.உங்களிடம் இப்பழக்கம் இல்லாவிடினும் உங்கள் சகோதரர்கள்,நண்பர்கள்,தெரிந்தவர்கள் அனைவரிடமும் எடுத்துச் சொல்லுங்கள்.உங்கள் வார்த்தைகள் ஒரு உயிரை வலிகளிலிருந்து காப்பாற்ற உதவட்டும்.

விபத்துகளை தடுப்பதற்கு அந்தக்காலம் தொட்டு ஆயிரமாயிரம் அறிவுரைகளை அள்ளிவளங்கினாலும், ஆயிரத்தி ஒரு சட்டங்களை போட்டாலும் – விபத்தின் விகிதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது !

மொத்தத்தில் இந்த விபத்திற்குரிய அடிப்படை காரணத்தை கூர்ந்துபார்த்தால் மனித தவறுகளே காரணமாக இருக்கும்.

வேகம், மதுபோதை, தூக்கம், கவனச்சிதரல்…

முன்னனயது மூன்றைப்பற்றியும் விளக்கங்கள் தேவையிலை. நாலாவதாக உள்ள கவனச்சிதரல் என்பது பலவகையாக பாகுபடுவதை உணரமுடியும்.

நானே என் கண்ணால் கண்ட – கார் ஓட்டும் போது தொலைபேசி உரையாடலையும், வீடியோ படம் எடுபதையும், கொக்கக்கோலாவை அண்ணாந்து குடிப்பதையும், வானில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்ப்பதையும்…. இப்படியே அடிக்கிக்கொண்டு போகலாம் இந்த கவனச்சிதரல்களுக்கு எடுத்துக்காட்ட.

விபத்து என்பது கார்விபத்து மட்டும் இல்லை, வேலைசெய்யும் இடத்திலும், விளளயாடும் இடத்திலும் ஏன் வீட்டில் கூட வரும்.

1998ம் ஆண்டு நான் yahooவில் முதல்முதலில் e-mail ஆரம்பித்தபோது மிகச்சிலரிடமே e-mailகள் இருந்தன. பேனா நண்பர்களுக்கு கடிதம் எழுதுவதுபோல் அப்போது சிலர் e-mailலில் தொடர்புகொள்ளுவார்கள். அப்போது எனக்கு e-mailலில் ஒரு முகம் தெரியாத நண்பர் அனுப்பிவைத்த சில படங்களை – இன்று என் பழைய சேமித்துவைத்த e-mailகளை திரும்பிப்பார்க்கும் போது கண்ணுக்குப் பட்டது !

அதில் அவர் அனுப்பிவைத்த சில படங்கள் இவை…

சுரங்கப்பாதையில் ஓடும் ரயிலில் இருந்து இப்படி ஒருவர்…

சலூனினுள் கத்தியால் சவரம் செய்பவர் இப்படி…

 ஒருவர் காதினுள் வாக்மென்னனப் போட்டுக்கொண்டு ஹாயாக பாட்டுக்கேட்டுக்கொண்டு புற்தரையில் புத்தகம் படிக்க, அந்தநேனரம் புல்வெட்டிக்கொண்டு வருபவர் இப்படி…

கடற்கரையில் காத்துவாங்கும் காட்சிகளை எல்லாம் கண்டுகொண்டு காரேட்டத்தை கைவிட்ட இப்படி ஒருவர்…

விபத்துக்கு இவையும் காரணம் தான் !

மேலை உள்ள படங்கள் நகைச்சுவைக்கு எடுக்கப்பட்டாலும் இனி சில் நிஜப்படங்களையும் பார்ப்போம்…

குடிமக்களை மனவருத்தம் அடையச்செய்யும் படம் !??!

இந்தபெரிய குண்டை கொண்டுசெல்ல இப்படி கவனம் இன்மை!  வெடிக்காதது Forklift ஓட்டுனரின் மனைவியின் தாலிபாக்கியம் !