இங்கு நீங்கள் மேலே பார்ப்பது பல அறிவியல் மேதை  ஐன்ஸ்டீன் (Albert Einstein) அதுதான் E=mc² ஐ கண்டுபிடித்தவர்.

சரி… இவர் அறிவாளிதான். இவரைப்பார்த்தால் அப்படி அழகா தெரியவில்லையே என் தோன்றுகின்றதோ…

ஐன்ஸ்டீனின் மனைவிகூட, ஆராச்சி ஆராட்சி என்று  தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பதை பார்த்து இவரை “இது ஒரு பைத்தியம்” என்று கூறியுள்ளார். இவரைப்போய் அழகு என்று கூறி எங்களை பைத்தியமாக்காதீங்கள் என்று கூறூவது கேட்கின்றது…

சரி சரி, கொஞ்சம் எழுந்து ஒரு 15அடி தூரம் பின்னால் போய் பாருங்கள் …. ஒருகாலத்தில் (நம்ம தாத்தா காலத்தில்)  உலக இளைஞர்களை மயக்கிப்போட்ட  மர்லின் மன்றோ(MARILYN MONROE) தெரிவார் பாருங்கள்…!!!

(இதுக்குத்தான் நான் பெண்களை தூரத்தில் இருந்து பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்வேன்!!?!)

ஏற்கனவே முகம் மாறும் விந்தை என்றொரு பதிவு இட்டிருந்தேன் பார்ககாதவர்கள் ஒருமுறை பார்க்கவும்

‘எல்லாம் சரி, யார் அது மர்லின் மன்றோ?’ என்று அப்பாவியாய் கேட்டால் கீழே உள்ள வீடியோவைப்பாருங்கள்!!

எப்படியாவது உள்ளே திணித்து பாதுகாப்பாக பயணிகளை அனுப்புவதற்கென்றே ஜப்பானில் இதுக்கென்றே பொலிஸார் உள்ளனர். கீழே உள்ள வீடியோவை பாருங்கள் !

இந்த விளையாட்டெல்லம் இத்தனை ஜனத்தொகை உள்ள இந்தியாவில் சரிப்பட்டுவருமா? அல்லது இந்திய பொலிஸாரால் தான் உள்ளே தள்ளமுடியுமா? கீழே உள்ள வீடியோவை பாருங்கள் !

 

 

Croc Cage Diving என அழைக்கப்படும் இந்த முதலையுடன் சேர்ந்து மூள்கும் விளையாட்டு முன்பு அறிமுகமான shark cage divingஐ ஒத்ததாகும். அதாவது ஒரு கூண்டினுள் உங்களை இறக்கி கூண்டை அப்படியே முதலை உள்ள தடாகத்தினுள் இறக்குவார்கள்.

இவ் விளையாட்டை 12வயதுக்கும் அதற்கும் மேற்பட்டவர்களும் + மனதிலே தில் உள்ளவர்களும் அனுமதிக்கப்படுவர். பளிங்குபோல் தெளிந்த, வெதுவெதுப்பான நீர் உள்ள தடாகத்தினுள் 4மீட்டர் நீளமான ஆளைக்கொல்லும் ‘நைல் முதலை’ களுடன் நீங்கள் உல்லாசமாக (?!) விளையாடலாம்!

நைல் முதலையின் அடக்கமான தொற்றம் !

உங்கள் முகத்திற்கு சில அங்குலம் முன்னால் வரை அகோர பற்களுடன் உலாவும் முதலைகளை – உங்கள் கைகளை நீட்டி தடவிப்பார்ப்பது உங்கள் சொந்தவிருப்பம் ! அதற்குமுன்னால் சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

முதலையின் வாயில் எதுவாகினும் மாட்ட அது ஒரு செல்லக்கடி கடிக்கும். அந்தக்கடினின் அளவு ஒரு சதுர அங்குலத்திற்கு ஒரு தொன் அழுத்தம் இருக்கும் ! பரவாயில்லையா?

உலகில் முதல் முறையும், ஒரே ஒரு இடத்திலும் இது தற்போதைக்கு அமைந்துள்ளது. பின்னர் மக்களின் வரவேற்பையும், முதலையின் ஒத்துளைப்பைபும் பொறுத்து மற்றய இடங்களிலும் அதாவது நம்ம ஊர் மிருகக்காட்சி சாலைகளிலும் அமையல்லாம் !

பொறுமை இல்லா வீரத்தமிழர்கள் இப்பவே போய் முதலையுடன் குளிக்க South Africa நாட்டின் Western Cape மாகானத்தில் அமைந்துள்ள Oudtshoorn நகருக்கு செல்லவும்.

 

ஒரு அதிசயப் படம் இது. இப்போது இடது பக்கத்தில் உள்ளவர் சினத்துடனும், வலது பக்கத்தில் உள்ளவர் சாந்தத்துடனும் இருக்கின்றார்.

அப்படியே எழுந்து ஒரு 10அடி பின்னால் போங்கள்… இப்ப பாருங்கள் எப்படி இருவரும் முகத்தை மாற்றுகின்றனர் என்று !!!

எதுக்கும் நீங்களும் ஒருதரம் கண்ணாடிமுன் நின்று கிட்டவும் தூரவும் ஒருதரம் முகங்களை சரிபார்த்துக்கொள்ளுங்கள் 🙂

இலங்கையில் ஒரு யானைனின் அட்டகாசத்தை பாருங்கள்