“சின்ன மகளும் வேண்டாம் மாமி, பெரிய மகளும் வேண்ட்டாம் மாமி” …. இந்தப்பாடல் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த ஒரு பாடல். அதேபோல் “சின்ன திரையும் வேண்டாம் மாமி, பெரிய திரையும் வேண்டாம் மாமி ‘வீடியோ கண்ணாடிமட்டும்’ போதும் மாமி”…. என்ற நிலை வந்துகொண்டிதுக்கின்றது

தகவல் தொழில்நுட்ப யுகத்தில் தினம் தினம் ஒரு புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி வருகிறது. அந்த வகையில் மைவியூ (Myvu) என்ற நிறுவனம் உலகின் மிக மெல்லிய வீடியோ கண்ணாடியை (Video eyewear) அறிமுகப்படுத்தியுள்ளது.

(தற்போதைய விலை 199 டொலர்கள்)

தொலைக்காட்சியிலோ அல்லது திரையரங்கிலோதான் படங்களை பார்க்க வேண்டும் என்ற நிலையை மாற்றவே இந்த வீடியோ ஐ-வேர் சாதனம் அறிமுகப்படுத்தப்பட்டது.

கடந்த சில ஆண்டுளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வீடியோ ஐ-வேர் சாதனம், சாதாரண ‘கூலிங் கிளாஸ்’ போல் காட்சியளித்தாலும், இதனை அணிந்து கொண்டு திரையரங்கில் படம் பார்ப்பதைப் போன்ற உணர்வைப் பெற முடியும்.

இதுவரை பல்வேறு நிறுவனங்கள் பல ரகங்களில் வீடியோ ஐ-வேர் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த வரிசையில் உலகின் மிக மெல்லிய வீடியோ ஐ-வேர் சாதனத்தை மைவியூ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

மைவியூ கிறிஸ்டல் எனப் பெயரிடப்பட்டுள்ள இச்சாதனத்தை, போர்ட்டபிள் மீடியா பிளேயர், அனைத்து ரக வீடியோ ஐ-பாட்கள், மைக்ரோசாப்ட் ஜுன், நோக்கியா 95 மற்றும் சில சாம்சங் செல்போன்களுடன் இணைத்து அதில் உள்ள வீடியோ படங்களை ‘தியேட்டர் எஃபெக்டில்’ கண்டுகளிக்க முடியும்.

புதிய ‘மைவியூ கிறிஸ்டல்’ சாதனத்துடன் பேட்டரி, இயர்போன் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.